"பூமியில் ஊர்ந்து திரியக்கூடியவையும், தன் இரு இறக்கைகளால் (ஆகாயத்தில்) பறக்கக் கூடியவையும் உங்களைப் போன்ற (உயிருள்ள) படைப்புகளே (சமுதாயங்களே) தவிர வேறில்லை. (இவற்றில்) ஒன்றையுமே (நம் பதிவுப்) புத்தகத்தில் (லவ்ஹுல் மஹ்ஃபூளில்) குறிப்பிடாது நாம் விட்டுவிடவில்லை. பின்னர், (ஒரு நாளில்) இவையும் தங்கள் இறைவனிடம் கொண்டு வரப்படும்".(அல் அன்ஆம் : 38 ). تقدم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப் பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதற்கு அவள் உணவு, பானம் கொடுக்கவுமில்லை, பூமியிலுள்ள பூச்சி, புழுக்களைத் தானாகத் தேடி உண்ண அதனை விடுவிக்கவும் இல்லை. அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள்". (புஹாரி, முஸ்லிம்). تقدم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “ஒரு நாய் தாகத்தால் மண்ணை நக்கியதை ஒரு மனிதர் கண்டார். உடனே தனது காலணியை கழற்றி அது தாகத்தை தணித்துக் கொள்ளும் வரை அதில் நீரை அள்ளி கொடுத்தார். அல்லாஹ் இந்த செயலைப் பாராட்டி அவரை சுவர்க்கத்தில் நுழைவித்தான்''. (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்). تقدم