நீதி மற்றும் நியாயம் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?

மக்களிடம் நீதியை நிலைநாட்டுமாறும் அளவை நிறுவைகளில் நியாயம் பேணுமாறும் இஸ்லாம் அழைப்பு விடுக்கிறது.

‘‘என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை. உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக உங்களுக்குத் தெளிவான அத்தாட்சி வந்திருக்கிறது. ஆகவே, அளவை முழுமையாக அளந்து எடையை சரியாக நிறுங்கள். (நீங்கள் கொடுக்க வேண்டிய) மனிதர்களுடைய பொருள்களில் எதையும் குறைத்து விடாதீர்கள். பூமியில் (சமாதானமும் அமைதியும் ஏற்பட்டு) சீர்திருந்திய பின்னர் அதில் குழப்பமும் கலகமும் செய்யாதீர்கள். மெய்யாகவே நீங்கள் (என் வார்த்தையை) நம்புபவர்களாக இருந்தால் இவைதான் உங்களுக்கு நன்மை பயக்கும்'' என்று கூறினார். (அஃராப் : 85). تقدم

''நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலை நிறுத்துவோராகவும், அதற்கு சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள் அதுவே பயபக்திக்குமிக நெருக்கமானதாகும். மேலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாவான்''. (மாஇதா : 8). تقدم

"(நம்பிக்கையாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருள்களை அதன் உரிமையாளர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடும்படியும், மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். உங்களுக்கு அல்லாஹ் செய்யும் இவ்வுபதேசம் மெய்யாகவே எவ்வளவு சிறந்தது! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்". (நிஸா : 58). تقدم

"(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், பாவம், அநியாயம் ஆகியவற்றிலிருந்து (உங்களை) அவன் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவன் உங்களுக்கு (இப்படி) நல்லுபதேசம் செய்கிறான்". (அந்நஹ்ல் : 90). تقدم

"ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). تقدم

அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரை அதில் நுழையாதீர்கள். "நீங்கள் திரும்பிவிடுங்கள்'' என்று (அவ்வீட்டில் ) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களுக்கு மிக பரிசுத்தமானதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்". (அந்நூர் :27, 28). تقدم

"நம்பிக்கையாளர்களே! பாவி ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், (அதன் உண்மையை அறியும் பொருட்டு அதைத்) தீர்க்க விசாரணை செய்து கொள்ளுங்கள். (இல்லையெனில், அவனுடைய சொல்லை நம்பி) அறியாமையால் ஒரு கூட்டத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர், நீங்கள் செய்தவற்றைப் பற்றி நீங்களே துக்கித்துக் கவலைப்படும் படியும் நேர்ந்து விடும்". (அல் ஹுஜுராத் : 6). تقدم

"மேலும், இறைநம்பிக்கையாளர்களில் இரு குழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால் அவர்களிடையே சமரசம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்புமீறி நடந்து கொண்டால், வரம்புமீறிய குழுவினருடன் அவர்கள், அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பிவிட்டால், அவர்களிடையே நீதியுடன் சமரசம் செய்து வையுங்கள்; இன்னும் நீதி செலுத்துங்கள். திண்ணமாக, அல்லாஹ் நீதிசெலுத்துபவர்களை நேசிக்கின்றான். تقدم

நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே! ஆகவே, உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலை நிறுத்துங்கள். நீங்கள் அருள் செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்வுக்குப் பயந்து நடங்கள்". (அல் ஹுஜுராத் :9, 10). تقدم

"இறைநம்பிக்கையாளர்களே, (முஃமின்களே!) எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் (பரிகசிக்கப்படுவோர்), இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களைவிடச் சிறந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேசாதீர்கள். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள். இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவர்கள்தாம் கொடுமைக்காரரகள். تقدم

விசுவாசிகளே! (தவறான) எண்ணத்தில் பெரும்பாலனவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள், (ஏனெனில்,) நிச்சயமாக எண்ணத்தில் சில பாவமாகும், (எவருடைய குறைகளையும்) நீங்கள் துருவித் துருவி விசாரித்துக் கொண்டிருக்கவும் வேண்டாம், உங்களில் சிலர் சிலரைப் புறம் பேசவும் வேண்டாம், உங்களில் யாதொருவர், தன்னுடைய சகோதரரின் மாமிசத்தை (அவர் இறந்து) சவமாயிருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது, அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து தவ்பாச் செய்து மீள்வோரின்) பாவமீட்சியை மிகுதியாக ஏற்பவன் மிகக் கிருபையுடையவன்". (ஹுஜுராத்: 11, 12). تقدم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாத வரை உங்களில் ஒருவர் பரிபூணமான விசுவாசியாக மாட்டார்". (ஆதாரம் : புஹாரி, முஸ்லிம்). تقدم

PDF