இயேசு விபச்சாரியை மன்னித்திருக்கும் போது முகம்மது நபி விபச்சாரத்திற்கான தண்டனையை நிலைநாட்டியது ஏன்?

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, விபச்சாரக் குற்றத்திற்கான தண்டனையை வலுப்படுத்தியதில் யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களிக்கிடையே தெளிவான உடன்பாடு உள்ளது. (பழைய ஏற்பாடு, லேவியராகமம் 20:10-18). تقدم

கிறித்துவத்தில், இயேசு அவர்கள் விபச்சாரத்தின் கருத்து தொடர்பாக அழுத்தமாக குறிப்பிட்டதுடன், அதனை உடல் ரீதியிலான செயலுடன் மட்டுப்படுத்தாது அதனை தார்மீக அம்சத்துடன் தொடர்புபடுத்தி குறிப்பிடுகிறார். (புதிய ஏற்பாடு, மத்தேயு 5:27-30). கிறிஸ்தவம், விபச்சாரம் செய்பவர்கள் கடவுளின் (அல்லாஹ்வின்) ராஜ்யத்தைப் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் எனக் கூறி விபச்சாரத்தை தடை செய்கிறது. இதன் பிறகு அவர்கள் நரகத்தில் நித்திய தண்டனை பெறுவது தவிர வேறுவழி கிடையாது. (புதிய ஏற்பாடு, 1 கொரிந்தியர் 6:9-10). இந்த வாழ்க்கையில் விபச்சாரத்திற்கான தண்டனை, மோசேயின் (மூஸாவின்) சட்டத்தின்படி, கல்லெறிந்து கொலைசெய்வதாகும்.(புதிய ஏற்பாடு, யோவான் 8:3-11). (புதிய ஏற்பாடு, மத்தேயு 5:27-30) (புதிய ஏற்பாடு, 1 கொரிந்தியர் 6:9-10) (புதிய ஏற்பாடு, யோவான் 8:3-11)

இயேசு விபச்சாரியை மன்னித்த சம்பவமானது உண்மையில் யோவான் நற்செய்தியின் பழமையான கையெழுத்துப் பிரதிகளில் இல்லை என்பதை இன்றைய விவிலிய அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பினும் நவீன மொழிபெயர்ப்புக்களால் பின்னர் இந்த விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. (https://www.alukah.net/sharia/ 0/82804/). இவை அனைத்தையும் விட முக்கியமானது என்னவென்றால், இயேசு தனது பிரச்சாரப்பணியின் துவக்கத்தில் மோஸே (மூஸா) மற்றும் தீர்க்கதரிசிகளின் சட்டத்திட்டங்களை ஒழிக்க வரவில்லை என்றும், அவற்றை அமுல்படுத்தவே வந்ததாக அறிவித்தார். மேலும் மோஸேயின் (நியாயப்பிரமாணத்தின்) சட்டதிட்டங்களில் ஒரு புள்ளி வெற்றிடமாவதை விட வானமும் பூமியும் அழிந்து போவது எளிது என லூக்காவில் குறிப்பிடப்பட்டுள்ளது. (புதிய ஏற்பாடு, லூக்கா 16-17). இதன் படி விபச்சாரம் செய்த பெண்ணை தண்டிக்காமல் விட்டு விட்டு மோசேயின் (மூஸாவின்) சட்டத்தை இயேசு செல்லுபடி அற்றதாக மாற்றுவது சாத்தியமில்லை. تقدم تقدم

விபச்சார சம்பவத்தை அதன் நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில் விவரிக்கும் நான்கு சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில் தண்டனை நிறைவேற்றப்படும். ஒரு ஆணும் பெண்ணும் ஒரே இடத்தில் இருப்பது மட்டும் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கான அடிப்படையாகக் கொள்ளப்பட மாட்டாது. அத்துடன் சாட்சிகளில் ஒருவர் தங்கள் சாட்சியத்தை திரும்பப் பெற்றால், தண்டனை நிறைவேற்றப்படாது நிறுத்தப்படும். வரலாறு முழுவதும் இஸ்லாமிய சட்டத்தில் விபச்சாரத்திற்கான தண்டனைகளை நிறுவுவதற்கான குறைவான மற்றும் அரிதான தன்மையை இது தெளிவுபடுத்துகிறது, ஏனெனில் இது மேற்குறிப்பிடப்பட்ட வழியில் தவிர நிரூபிக்கப்படமாட்டாது, அத்துடன் இது ஒரு சிரமமான விடயமும் ஆகும். அதாவது குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தைத் தவிர இதற்கான தண்டனையை நடைமுறைப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதே யதார்த்தமாகும்.

-நான்கு சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையிலன்றி –தவறு செய்தவர்களில் ஒருவரின் ஒப்புதலின் அடிப்படையில் விபச்சாரத்திற்கான தண்டனை நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத மற்ற தரப்பினருக்கு எந்த தண்டனையும் கிடையாது.

என்றாலும் அல்லாஹ் இவ்வாறான குற்றச் செயல்களை செய்வோர் மீள்வதற்காக தவ்பாவின் (பாவமீட்சிக்கான) கதவை திறந்தே வைத்துள்ளான்.

''எவர்கள் அறியாமையின் காரணமாக பாவம் செய்து, பின்பு விரைவாகவே மன்னிப்புத் தேடுகிறார்களோ அவர்களுக்கே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு உண்டு. இவர்களுக்கே அல்லாஹ் பாவமன்னிப்பு வழங்குகிறான். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்". (அந்நிஸா: 17). تقدم

"எவரேனும், ஒரு பாவத்தைச் செய்துவிட்டு அல்லது தனக்குத்தானே தீங்கிழைத்துக்கொண்டு, பின்னர் (அதிலிருந்து விலகி, உண்மையாகவே கைசேதப்பட்டு) அவன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ்வை (அவனுடைய குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், (அவன் மீது) மிகக் கருணையுடையவனாகவும் காண்பான்". (அந்நிஸா: 110). تقدم

"அல்லாஹ் உங்களுக்கு சட்டங்களை இலகுபடுத்தவே விரும்புகிறான். மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்". (அந்நிஸா:28). تقدم

இஸ்லாம் மனிதனின் இயற்கையான விருப்பங்களை (தேவைகளை) அங்கீகரிக்கரித்தது மாத்திரமன்றி இந்த இயற்கையான உள்ளுணர்வை திருமணம் எனும் முறையான வழிமுறை மூலம் நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகளை செய்துள்ளது. இதனால் இஸ்லாம் திருமணத்தை நேரகாலத்துடன் செய்து கொள்ளுமாறு ஊக்குவிக்கிறது. திருமணம் செய்வதற்கு தடையாக பொருளாதார ரீதியாக விசேட சூழ்நிலைகள் காணப்படின் திருமணத்தை செய்துகொள்ள பொது கருவூலத்திலிருந்து (பைத்துல்-மால்) உதவி வழங்குகிறது. இதன் மூலம் இஸ்லாம் சமூகத்தில் ஆபாசம் மற்றும் மானக்கேடான செயற்பாடுகள் பரவுவதற்கான அனைத்து வழிகளையும் தூய்மைப்படுத்த ஆர்வம் கொண்டுள்ளது. அத்துடன் மனிதனில் காணப்படும் சக்தியை ஒழுங்குபடுத்தி அதனை நன்மையின் பால் செலுத்துவதற்கான உயர்ந்த இலக்குகளை வகுத்துள்ளது. அது மாத்திரமின்றி ஓய்வு நேரத்தை அல்லாஹ்வை நெருங்குவதில் ஈடுபடுத்திட ஊக்குவிக்கிறது. இந்த நடவடிக்கைகள் யாவும் விபச்சாரம் போன்ற குற்றங்களை செய்து அதற்கான நியாயம் கற்பிப்பதை தடுக்கின்றன. இத்தனைக்குமப்பால், விபச்சாரம் நான்கு சாட்சிகளின் சாட்சியத்தின் மூலம் நிரூபிக்கப்படும் வரை தண்டனை விதிக்க இஸ்லாம் அவசரப் படுவதில்லை. குற்றவாளி குறித்த குற்றத்தை வெளிப்படையாகச் செய்து, அதன்மூலம் இத்தகைய கடுமையான தண்டனைக்கு உட்படும் சந்தர்ப்பங்களில் தவிர, ஏனைய சந்தர்ப்பங்களில் நான்கு சாட்சிகள் இருப்பது அரிதானது என்பது கவனிக்கத்தக்கது. இந்த உன்னத சம்பவம் நபிகளாரின் கருணையையும், தெய்வீக சட்டத்தின் முழுமையையும் எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் இஸ்லாத்தைப் பொறுத்தவரை விபச்சாரத்தில் ஈடுபடுவது இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ செய்தாலும் அது பெரும் பாவங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தானாக முன்வந்து ஒரு பெண் விபச்சாரத்தின் மூலம் கர்ப்பமுற்ற நிலையில் தான் விபச்சாரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட சம்பவம் ஒன்று ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவள் விபச்சாரத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை தனக்கு நிறைவேற்ற வேண்டும் என்று கோரினாள். அப்போது நபியவர்கள் அவளின் பொறுப்பாளரை அழைத்து அவளை சிறந்த முறையில் கவனித்துக்கொள்வீராக என்று கூறினார்கள். இது இஸ்லாமிய சட்டதிட்டத்தின் பரிபூரணத் தன்மைக்கும், படைப்பாளனான அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்டுள்ள கருணைக்கும் சான்றாக அமைந்துள்ளது.

நபியவர்கள் அவளிடம் நீ குழந்தையைப் பெற்ற பின் வருவீராக என்று கூறினார்கள். பின் அவள் குழந்தையைப் பெற்றெடுத்ததன் பின் வந்த போது உனது குழந்தைக்கு பால் மறக்கடிக்கச் செய்ததன் பின் மீண்டும் வருவீராக என்று கூறினார்கள். குழந்தை பால் குடி மறந்ததன் பின் அவள் நபியவர்களிடம் வந்து தனக்கு தண்டைனை நிறைவேற்றுமாறு கோரவே, அவளது வற்புறுத்தலின் பேரில், பரிந்துரைக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்பட்டது. தன்னைக் குற்றத்திலிருந்து தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவளது உறுதியைக் கண்ட நபிகளார் 'அவளுடைய தவ்பாவை மதீனாவின் எழுபது பேருக்கு பிரித்துக் கொடுத்தால், அது அவர்கள் அனைவருக்கும் போதுமானதாக இருக்கும்' என்று கூறினார்கள்.

எனவே இந்த உன்னத சந்தர்ப்பத்திலும் நபியவர்களின் கருணை வெளிப்பட்டதை தெளிவாகக் காண முடிகிறது.!

PDF