இஸ்லாம், ஏனைய மத நம்பிக்கைகளில் உள்ளது போன்று ஆதமின் பாவச் சுமையை சுமப்பதில் இருந்து பெண்களுக்கு விலக்கு அளித்து கௌரவித்தது மாத்திரமின்றி, அவர்களின் அந்தஸ்தை உயர்த்துவதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது.
இஸ்லாத்தில், அல்லாஹ் ஆதமுக்கு மன்னிப்பளித்து, வாழ்க்கையில் தவறு செய்தால் மனம் திருந்தி அவனிடம் எவ்வாறு மன்னிப்புக் கோருவது என்பதை கற்றுக் கொடுத்தான். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
"பின்னர் ஆதம் தனது இரட்சகனிடமிருந்து சில வார்த்தைகளைப் பெற்று அதன் மூலம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதனால் அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாவான்". (அல் பகரா : 37). تقدم
பெண்களில் இயேசுவின் தாயார் (மேரியாள்) மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் பெயர் மாத்திரமே அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்களில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். உதாரணமாக, ஸபாஃ நாட்டின் அரசி பல்கீஸ், ஸுலைமான் (சாலமன்) நபியுடன் சந்தித்த சம்பவம், இறுதியில் அவள் இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்று, அனைத்து உலகங்களின் இறைவனுக்கு அடிபணிபவதில் முடிந்தது. அல்குர்ஆன் இதனை பின்வருமாறு குறிப்பிடுகறிது : ''அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்னை நிச்சயமாக நான் காண்டேன். அவள் (தேவையான)அனைத்துப் பொருட்களும் (வளங்களும்) வழங்கப்பட்டுள்ளாள். மேலும் அவளுக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் உள்ளது'' (அந்நம்ல் : 23). تقدم
முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பெண்களுடன் கலந்தாலோசித்து அவர்களின் கருத்துக்களை பல சந்தர்பங்களில் கவனத்தில் கொண்டதாக இஸ்லாமிய வரலாறு விவரிக்கிறது. மேலும் அவர்கள் பெண்களை ஒழுக்கம் பேணி, ஆண்களைப் போல் பள்ளிக்குச் செல்ல அனுமதித்தார்கள், ஆனால் அவர்கள் வீட்டில் தொழுவது மிகவும் சிறப்பானது என்றிருந்தும் இவ்வனுமதியை வழங்கினார்கள். அத்துடன் பெண்களும் போர்களில் கலந்துகொண்டு போர்களில் காயமுற்றோருக்கு தாதிப்பணியை (முதலுதவிப்பணிகளை) மேற்கொள்வோராக இருந்ததுடன், வணிக பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதுடன், கல்வி மற்றும் அறிவுத் துறைகளில் முன்னேறினர்.
பண்டைய அரபு கலாச்சாரங்களுடன் ஒப்பிடுகையில் இஸ்லாம் பெண்களின் நிலையை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. புதிதாகப் பிறந்த பெண் குழந்தைகளை புதைக்கும் நடைமுறையை அது தடைசெய்து, அவர்களை தனியான ஆளுமைப் பண்புகளைப் பெற்றவர்களாக அங்கீகரித்தது. அத்துடன் திருமணத்தின் போது கணவன் மணக்கொடையை வழங்க வேண்டும் என்பதை விதித்து திருமண ஒப்பந்தத்தை ஒழுங்கு படுத்தி பெண்களின் உரிமையைப் பாதுகாத்தது. மேலும் வாரிசுரிமை, தனியான சொத்துரிமை, மற்றும் அவளது செல்வத்தை நிர்வகித்தல் ஆகியவற்றில் அவளது உரிமைகளை உறுதிப்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பூரண ஈமானைப் பெற்ற விசுவாசி யாரெனில் சிறந்த பண்புகளுடையவரே. மேலும் உங்களில் சிறந்தவர் யாரெனில்,தங்களின் மணைவியரிடம் சிறந்தவரே". (ஆதாரம் : திர்மிதி). تقدم
''நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும், (அல்லாஹ்வுக்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையே கூறுபவர்களான ஆண்களும், உண்மையே கூறுபவர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும், நோன்பு நோற்பவர்களான பெண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக் கொள்பவர்களான ஆண்களும், (மர்மஸ்தானங்களைக்) காத்துக் கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூறுபவர்களான பெண்களும் (ஆகிய) இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான (நற்)கூலியையும் தயார் செய்து வைத்திருக்கிறான்". (அஹ்ஸாப் : 35). تقدم
''நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்; இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் - நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும், அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்". (அந்நிஸா: 19). تقدم
''மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்". (அந்நிஸா: 1). تقدم
"ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்". (நஹ்லு : 97). تقدم
''அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்க்ள்''. (அல்பகரா:187). تقدم
''இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன". (அர்ரூம் : 21). تقدم
"நபியே! பெண்கள் விடயத்தில் அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கோருகின்றனர். அவர்கள் விடயத்தில் அநாதைப் பெண்களுக்கு விதிக்கப்பட்டதை அவர்களுக்கு வழங்காது, அவர்களை மணந்து கொள்ளவிரும்பும் விடயத்திலும் பலவீனமாக்கப்பட்ட சிறுவர்கள் விடயத்திலும் அநாதைகள் விடயத்தில் நீதியை நிலைநாட்டுவது குறித்தும் இவ்வேதத்தில் உங்களுக்கு ஓதிக் காட்டப்படுபவற்றிலும் அல்லாஹ் உங்களுக்கு தீர்ப்பளிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக. நீங்கள் நன்மையில் எதைச்செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிந்தவனாக இருக்கிறான். ஒரு பெண் தனது கனவனிடம் மாறுபாட்டை அல்லது புறக்கணிப்பை அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்லிணக்கம் செய்து கொள்வது அவர்களுக்கிடையில் குற்றமில்லை. நல்லிணக்கமே சிறந்ததாகும். ஆத்மாக்கள் கஞ்சத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் தாராளத் தன்மையுடன் நடந்து அல்லாஹ்வையும் அஞ்சி நடந்தால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான்". (நிஸா :127-128). تقدم
அல்லாஹ், பெண்களுக்காக செலவிடவும், குடும்பத்திற்கு பெண்கள் மீது எந்த நிதிப் பொறுப்புக்களை சுமத்தாது தங்கள் செல்வத்தைப் பாதுகாக்கவும் ஆண்களுக்கு கட்டளையிட்டுள்ளான். இஸ்லாம் பெண்களின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பாதுகாத்து, திருமணத்திற்குப் பிறகும் அவர்களின் குடும்பப் பெயரை பாதுகாத்துக்கொள்ள அனுமதித்தது.