இஸ்லாம், கணவன் தனது மனைவியை அடிப்பதற்கு ஏன் அனுமதிக்கிறது?

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு பெண்ணையும் அடிக்கவில்லை. அடிப்பதைப் பற்றி குறிப்பிடும் அல் குர்ஆன் வசனம், பெண்ணின் கீழ்ப்படியாமை (மாறுபாட்டை) (நுஷூஸ்) போன்ற சந்தர்ப்பங்களில் உடல் ரீதியான எவ்விதக் காயமும் ஏற்படாது தண்டிப்பதையே இது குறிக்கிறது. இந்த வகையில் அடிப்பதானது அமெரிக்காவின் சட்டத்தின் படி எந்தவொரு உடல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில் இது ஒரு அனுமதிக்கப்பட்ட ஒழுங்குமுறை என விவரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய தீங்கைத் தடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். அதாவது இந்த விவகாரமானது ஒரு முக்கியமான பரீட்சையை தவறவிடாமல் இருக்க, ஆழ்ந்த உறக்கத்திலிருந்து குழந்தையின் தோளை அசைப்பது போன்றது.

ஒருவர், தன் மகள் யன்னல் ஓரத்தில் நின்று கொண்டு உயரமான இடத்திலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறாள் என கற்பனை செய்து பார்ப்போம். உடனே, எதேச்சையாக அவளைப் பாதுகாகப்பதற்காக அவரின் கைகள் அவளை நோக்கி நீலுவது மாத்திரமின்றி; அவளின் உயிருக்கு எந்த ஆபத்தும் வராமல் அவளை பினனோக்கி தள்ளுவான். ஆக ஒரு பெண்ணை அடித்தல் எனும் அனுமதியின் பின்னணியில் உள்ள நோக்கமும் இது போன்றதே.! அதாவது ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்படாது, குடும்பத்தை அழித்து அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்துவதைத் தடுக்கும் கணவனின் முயற்சியாகவே 'பெண்களை அடித்தல்' எனும் அனுமதி வாசகத்தைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.

அல் குர்ஆன்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த அனுமதியானது பல கட்டங்களுக்குப் பிறகு வருகிறது:

“எவர்கள் கணவருக்கு மாறு செய்வரார்கள் என்று அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள், திருந்தாவிட்டால் படுக்கையில் அவர்களை வெறுத்து விடுங்கள், (அதிலும் திருந்தா விட்டால்) அவர்களுக்கு இலேசாக அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டால் அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உயர்ந்தவனும் பெரியவனாகவும் உள்ளான்”. (அந்நிஸா : 34). تقدم

பொதுவாக ஒரு பெண்ணின் பலவீனத்தை கருத்திற்கொண்டு இஸ்லாம் குறித்த பெண்ணின் கணவன் மோசமாக நடந்து கொண்டால் நீதி கோரி முறையிடுவதற்கான உரிமையை அவளுக்கு வழங்கியுள்ளது.

இஸ்லாத்தில் திருமண உறவுகளின் அடித்தளம் அன்பு, அமைதி மற்றும் கருணை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

"இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன". (அர்ரூம் : 21). تقدم

PDF