ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகளை திருமணம் முடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது போல் ஒரு பெண் ஒரே நேரத்தில் நான்கு ஆண்களை திருமணம் செய்து கொள்வது ஏன் அனுமதிக்கப்படவில்லை?

நவீன சமுதாயத்தில் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு மிக முக்கியமான விடயங்களில் ஒன்று ஆண்களுக்கு வழங்கப்படாத, பெண்களுக்கு மாத்திரம் இஸ்லாம் வழங்கிய உரிமை பற்றியதாகும். ஒரு ஆண் தனது திருமணத்தை திருமணமாகாத பெண்களுடன் மாத்திரம் வரையறுத்துக்கொள்வான். மறுபுறம், ஒரு பெண், திருமணமாகாத ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம், அல்லது அவர் ஏலவே திருமணமான ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம். அதாவது குழந்தைகளின் பரம்பரையை அவர்களின் உண்மையான தந்தைக்கு உறுதிப்படுத்தவும், மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் பெற்றோரிடமிருந்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனந்தரச் சொத்துக்களை பாதுகாக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது. இருப்பினும், இஸ்லாம் ஒரு பெண் திருமணமான ஆணை அவனுக்கு நான்கு மனைவிகளுக்குக் குறைவாக இருக்கும் நிலையில் திருமணம் முடிக்க அனுமதி வழங்கியுள்ளது, ஆனால் அந்த ஆண் மனைவியரிடத்தில் நீதம் பேணல் மற்றும் அதற்கான இயலுமை (சக்தி) போன்ற நிபந்தனைகள பெற்றிருக்க வேண்டும். எனவே, ஆண்கள் மத்தியில் பெண்களுக்கு பரந்த அளவிலான தேர்வுகள் உள்ளன. மற்ற மனைவி எப்படி நடத்தப்படுகிறாள் என்பதைப் பற்றி அறிந்துகொள்ளவும், இந்தக் கணவனின் நெறிமுறைகளைப் பற்றிய அறிவுடன் திருமண பந்தத்தில் இணைவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

அறிவியல் வளர்ச்சியுடன் டிஎன்ஏ பரிசோதனை மூலம் குழந்தைகளின் உரிமைகளை காக்க முடியும் என்று கருதினாலும், தந்தையை இந்த சோதனை மூலம்தான் தாய் தனது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும்போது அவர்களின் நிலை என்ன? அவர்களின் உளவியல் நிலை எப்படி இருக்கும்? மேலும், இவ்வாறான தடுமாற்றமான மனோ நிலையைக் கொண்ட ஒரு பெண்ணால் நான்கு ஆண்களுக்கு மனைவியாக இருக்கும் பாத்திரத்தை எப்படி வகிக்க முடியும்? அது மாத்திரமா, ஒரே நேரத்தில் பல ஆண்களுடன் அவள் உறவு கொள்வதால் பல நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும்.

PDF