பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்தது ஏன்?

சர்வதேச புள்ளிவிவரங்களின்படி, ஆண்களும் பெண்களும் சுமாராக சமமான விகிதத்தில் பிறக்கிறார்கள். பெண் குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கும் உயிர்வாழ்வதற்கும் ஆண்களை விட வாய்ப்புகள் அதிகம் என்பது அறிவியல் பூர்வமாக யாவரும் அறிந்த விடயமாகும். போர்க் காலங்களில் ஆண் இறப்பு விகிதம் பெண்களை விட அதிகமாக இருக்கும். பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட அதிகமாக உள்ளது என்பதும் அறிவியல் ரீதியாக அறியப்பட்ட ஒரு விடயமாகும். இதன் விளைவாக மனைவியை இழந்த விதவை ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே விதவைகளின் சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, உலக மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்களே அதிகம் என்ற முடிவுக்கு வருவோம். எனவே, ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு மனைவி என்று வரையறுப்பது நடைமுறையில் பொருத்தமான விடயமல்ல.!

பலதாரமணம் சட்டப்பூர்வமாக தடைசெய்யப்பட்ட சமூகங்களில், ஆண்களுக்கு கள்ளக்காதலிகள் மற்றும் திருமணத்திற்கு வெளியே பல உறவுகள் இருப்பது பொதுவான பரவலாக அறிய முடிகின்ற விடயமாகும். இந்நடைமுறையானது பலதார மணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காது, மறைமுகமாக அங்கீகரிப்பதற்கான குறியீடாக காணப்படுகிறது! இஸ்லாத்திற்கு முன் இதுவே பரவலாக காணப்பட்ட நடைமுறையாகும், இதைச் சரிசெய்து பெண்களின் உரிமைகள், கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாத்து, அவர்களின் காதலியை சட்டபூர்வ மனைவியாக மாற்றி, அவர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கண்ணியம் மற்றும் உரிமைகளையும் பெற்றுத்தரவே இஸ்லாம் வந்தது.

இந்த சமூகங்களைப் பொறுத்தவரை திருமணமின்றியே உறவுகளை ஏற்றுக்கொள்வது, மற்றும் ஒரே பாலின திருமணங்கக்ளைக்கூட ஏற்றுக்கொள்வதில் எவ்விதப்பிரச்சினையும் இல்லை. அதே போன்று தெளிவான பொறுப்புப்புணர்ச்சி (கடமையுணர்வு) இல்லாமல் உறவுகளை ஏற்றுக்கொள்வது அல்லது தந்தை இல்லாத குழந்தைகளை ஏற்றுக்கொள்வது போன்றவற்றில் இந்த சமூகங்களுக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு ஆணுக்கும் பல பெண்களுக்கும் இடையிலான சட்டப்பூர்வ திருமணபந்தத்தை இவர்கள் ஏன் பொறுத்துக்கொள்வதில்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியமானவிடயமாகும்! அதே வேளை, இஸ்லாம் இந்த விடயத்தில் தீர்க்கமானதும் அறிவுபூர்வமானதுமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்களுக்கு பல மனைவிகளை வைத்திருக்க வெளிப்படையாக அனுமதிவழங்குகிறது. ஆனால் குறித்த ஆணுக்கு நான்கு மனைவிகளுக்கு குறைவாக இருந்து நீதியாக நடத்தல் மற்றும் பராமரிப்பதற்கான சக்தி பெற்றிருத்தல் போன்ற நிபந்தனைகளைப் பெற்றிருந்தாலே இந்த அனுமதி குறித்த ஆணுக்கு உண்டு. திருமணமாகாத ஆணை துணையாக பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பெண்ணின் பிரச்சனையை தீர்ப்பதற்கு, ஒன்று அவள் திருமணமான ஒரு நபரை திருமணம் முடித்தல்; அல்லது இன்னொருவருக்கு கள்ளக்காதலியாக இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுதல் எனும் இரண்டு வழிமுறைகளே காணப்படுகிறன.

இஸ்லாம் பல திருமணங்களை அனுமதித்திருந்தாலும், சிலர் புரிந்துகொண்டிருப்பது போல் முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும் என்பது கிடையாது.

"அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டோம் என நீங்கள் அஞ்சினால், மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். (அவ்வாறு பலரை திருமணம் செய்தால் அப்போதும் அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாகவே நடந்துகொள்ள வேண்டும்.) நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்". (அந்நிஸா : 3). تقدم

மனைவியர் இடத்தில் நீதியாக நடத்தல் என்ற நிபந்தனையை நிறைவேற்ற முடியாதபோது ஒரு மனைவியை மாத்திரமே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையாகக் கூறும் உலகின் ஒரே மத நூல் அல்குர்ஆன் மட்டுமே!

"(நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் அன்புகாட்டுவதில் நீதமாக நடக்க வேண்டுமென்று விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கியவளாக விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்து கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கருணை புரிபவனாக இருக்கிறான்". (நிஸா : 129). تقدم

எல்லா சந்தர்ப்பங்களிலும், திருமண ஒப்பந்தத்தில் இந்த நிபந்தனையை குறிப்பிடுவதன் மூலம் ஒரு பெண் தன் கணவனுக்கு ஒரே மனைவியாக இருக்க உரிமை உண்டு. இது ஒரு அடிப்படை நிபந்தனையாகும், இதனை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். இதனை மீறுவது கூடாது.

PDF