இஸ்லாம் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கான சமத்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளதா?

முஸ்லிம் பெண், சமத்துவத்தை அல்லாது, நீதியையே தேடுகின்றாள்- ஏனெனில் ஆணுடான சமத்துவம் பெரும்பாலும் அவளின் உரிமைகளையும் தனித்துவத்தையும் இழக்கச் செய்து விடுகிறது. ஒருவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒருவருக்கு ஐந்து வயது, மற்றவருக்கு பதினெட்டு வயது. அந்த நபர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சட்டை வாங்க விரும்புகிறார். இந்த விடயத்தில் சமத்துவம் என்பது இருவருக்கும் ஒரே அளவிலான சட்டையை வாங்குவதைக் குறிக்கும். அவ்வாறு அவர் சமத்துவமாக நடந்து கொள்ள வெண்டும் என்பதற்கு ஒரே அளவிளான சட்டையை வாங்கினால் அவர்களுககு சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும், இங்கே ஒவ்வொருவருக்கும் தகுந்த அளவு சட்டை வாங்கிக் கொடுப்பதே நீதியாகவும் அனைவரினதும் மகிழ்ச்சியை உறுதி செய்வதாகவும் அமையும்.!.

இன்றைய காலக்கட்டத்தில், ஆணால் செய்யக்கூடிய அனைத்தையும் பெண் தன்னால் செய்ய முடியும் என்று நிரூபிக்க முயற்சிக்கின்றாள். இருப்பினும், உண்மையில், இந்த விஷயத்தில் பெண் தனது தனித்துவத்தையும், வேறுபாட்டையும் இழந்து நிற்கினறாள். ஒரு ஆணிணால் செய்ய முடியாத பணிகளை நிறைவேற்றுவதற்காகவே அல்லாஹ் அவளைப் படைத்துள்ளான். பிரசவ வலி மிகவும் கடுமையான வலிகளில் ஒன்றாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கு ஈடாக பெண்களை கௌரவப்படுத்தவே மார்க்கம் வந்துள்ளது. இந்த உரிமையை அவள் தொழில் செய்யாது, செலவுகளைப் பொறுப்பேற்காது தனது கணவனிடமிருந்து பெற்றுக் கொள்வாள். மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போல் மனைவியின் செல்வத்தை அவளின் விருப்பத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளவும் கணவனுக்கு உரிமை அளிக்கிறது. பிரசவ வலிகளைத் தாங்கும் சக்தியை அல்லாஹ் ஆண்களுக்குக் கொடுக்காத அதே வேளை மலைகளில் ஏறும் ஆற்றலை கொடுத்துள்ளான்.

ஒரு பெண் மலையேற ஆசைப்பட்டால், கடினமாக உழைத்து, ஆணைப் போலவே தன்னால் அதைச் செய்ய முடியும் என்று கூறினால், அவளால் அதைச் செய்ய முடியும். இருப்பினும், கடைசியில், குழந்தைகளைத் பெற்றெடுத்து பராமரிப்பதும், தாய்ப்பால் கொடுப்பதும் அவளே. எந்த சூழ்நிலையிலும் எந்த ஆணாலும் இதை செய்ய முடியாது. இவ்வாறான கடினமான செயற்பாடுகளில் ஒரு பெண் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதானது அவளின் கூடுதல் முயற்சியே. இதனை அவளால் தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஒரு முஸ்லிம் பெண் அவளுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் உரிமைகளை புறந்தள்ளிவிட்டு, தனது உரிமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பெற விரும்பினால் அது பேரிழப்பாகும். ஏனென்றால் அவள் உண்மையில் இஸ்லாத்தில்தான் அதிக உரிமைகளை அனுபவிக்கிறாள் என்பது பலருக்குத் தெரியாது. இஸ்லாம் ஆண்களும் பெண்களும் எதற்காக படைக்கப்படட்டார்களோ அதற்கான முழுமையான ஒருங்கிணைப்பை உத்தாரவாதப்படுத்துவதோடு, இதன் மூலம் அனைவருக்குமான மகிழ்ச்சியையும் உறுதி செய்கிறது.

PDF