ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உள்ளார்ந்த உடல் வேறுபாடுகளை உலகம் ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த அடிப்படையில்தான் ஆண்களுக்கான நீச்சல் உடைகள் மேற்கத்திய பெண்களுக்கான நீச்சலுடைகளிலிருந்து வேறுபடுகின்றன. ஆண்களின் ஈர்ப்பைவிட்டும்-கவர்ச்சிக்குள்ளாகாது- தம்மை தடுத்துக் கொள்ளும் முகமாக பெண்கள் தங்கள் உடலை முழுவதுமாக மறைக்கிறார்கள். ஒரு பெண் ஒரு ஆணை பாலியல் பலாத்காரம் செய்த நிகழ்வொன்றை எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேற்கத்திய நாடுகளில் பெண்கள் துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்புக்கு உட்படாது பாதுகாப்பான வாழ்வுக்கான உரிமைகளைக் கோரி போராட்டங்களில் பங்கேற்கின்றனர். ஆனால் இதுபோன்ற போராட்டங்களை ஆண்கள் நடத்தியதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லையே! ஏன் சிந்திப்போமா?