இஸ்லாம் ஒரு இலகுவான நடு நிலை மார்க்கமா?

அடிப்படையில் மார்க்கமானது, மக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கவே வந்துள்ளது. உதாரணத்திற்கு, இஸ்லாத்திற்கு முன்னுள்ள ஜாஹிலிய்யாக் காலத்தை நாம் அவதானித்தால் பெண்குழந்தையை உயிரோடு புதைத்தல், உணவுகளில் சில ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டதாகவும், பெண்களுக்கு தடுக்கப்பட்டதாகவும் இருந்ததோடு, அனந்தரச் சொத்து பெண்களுக்கு வழங்கப்படாமை, இவைகளுடன் தானாகசெத்த மிருகங்களை சாப்பிடுதல், விபச்சாரம், மது அருந்துதல், அநாதைகளின் செல்வத்தை உண்ணுதல், வட்டி போன்ற மாபாதகமான மோசமான செயல்கள் பரவிக் காணப்பட்டன.

மக்கள் சிலரிடம் காணப்படும் மதக்கருத்துக்கள் தொடர்பான முரண்பாடுகளே, மக்கள் மதத்தை வெறுத்து விலகிச் சென்று அறிவியலை மாத்திரம் பிற்பற்றுவுதற்கு தூண்டும் காரணிகளில் ஒன்றாக காணப்படுகிறது. சரியான மதத்தை மக்கள் பின்பற்றத் தூண்டும் மிகப்பிரதான காரணிகளில் ஒன்றாகவும் முக்கிய அடையாளமாகவும் அந்த மதத்தின் மிதமான போக்கும் சமநிலைப்பேணும் பண்பும் காணப்படுகிறது. இதனையே நாம் இஸ்லாமிய மார்க்கத்தில் தெளிவாகக் காண்கிறோம்.

ஏனைய மதங்களில் உள்ள சிக்கல் என்வென்றால் தமது சரியான மார்க்கத்தை திரிவுபடுத்தி,

தெளிவான ஆன்மிகம் என்ற நிலைக்கு மாற்றியமையே. அத்துடன் அம்மதங்கள் துறவரம், தனித்திருத்தல் போன்ற செயற்பாடு களுக்கு ஊக்குவிப்பதை அவதானிக்க முடிகிறது.

இது தெளிவான சடம் சார்ந்த விடயம்.

இதுவே தற்போதுள்ள மக்களில் பலரும் மற்றும் முந்தைய மதங்களைச் சேர்ந்தவர்களும் பொதுவாக மதத்திலிருந்து விலகிச் செல்ல காரணமாக அமைந்தன.

மதத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பல சட்டங்கள், தீர்ப்புகள் மற்றும் தவறான நடைமுறைகளை பிற சமூகங்களிடையே நாம் காண்கிறோம். இது மக்களை வலுக்கட்டாயமாக பின்பற்ற வைப்பதற்கான ஒரு உத்தியாக அமைவதுடன், அவர்களை சரியான பாதையிலிருந்தும் இயற்கை மார்க்கத்தின் கருத்தாக்கத்திலிருந்தும் வழிதவறச்செய்து விட்டது. அதனையடுத்து, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மனிதர்களின் உள்ளார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும், மார்க்கம் குறித்த உண்மையான கருத்திற்கும், மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள், மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் மரபுவழி நடைமுறைகள் ஆகியவற்றிற்கு இடையில் காணப்படும் வேறுபடுத்தும் திறனை இதன் விளைவாக மனிதர்களில் பலர் இழந்துவிட்டனர். இதனால் மார்க்கத்திற்கு பதிலாக நவீன அறிவியலை சார்ந்திருப்பதே தீர்வு என்று அழைப்பு விடுக்கும் அளவுக்கு அவர்களை இது இட்டுச்சென்றுள்ளது.

சரியான –உண்மை- மார்க்கம் மக்களின் சிரமங்களை நீக்குவதோடு, சட்டங்களையும் தீர்ப்புகளையும் வகுக்கும் போது மக்களுக்கு சிரமத்தை தவிர்ப்பதையே முதன்மை இலக்காகக் கொண்டிருக்கும்.

"உங்களை நீங்களே மாய்த்துக்கொள்ள வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் உங்களுடன் அன்புடையவனாக இருக்கின்றான்''. (அந்நிஸா :29). تقدم

''அழிவின் பக்கம் உங்களை கொண்டு செல்லாதீர்கள். நன்மை செய்யுங்கள். நிச்சயமாக நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்". (அல்பகரா:195). (அல்பகரா:195)

"தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கி, தீயவற்றை அவர்களுக்கு தடைசெய்வார். மேலும் அவர்களது சுமையையும் அவர்களின் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார்". (அஃராப் : 157). تقدم

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

'இலகு படுத்துங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள், நற்சோபனம் சொல்லுங்கள், வெறுப்படையச் செய்யாதீர்கள்'. (ஸஹீஹுல் புஹாரி). تقدم

மூன்று நபர்களின் சம்பவத்தை இங்கு ஞாபகப்படுத்துகிறேன். அவர்களில் ஒருவர் இனி நான் இரவு முழுதும் தொழுது நின்று வணங்குவேன் என்றார். அதற்கு மற்றவர் நான் காலம் முழுதும் விடாது நோன்பு நோற்கப்போகிறேன் என்றார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டு ஒதுங்கி, திருமணம் முடிக்காது இருக்கப் போகிறேன் என்றார். இந்த உரையாடலை அறிந்த அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

'இப்படி இப்படியெல்லாம் நீங்கள் பேசிக்கொண்டீர்கள் அல்லவா?. அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் உங்களை விட அல்லாஹ்வை மிகவும் அஞ்சுபவன் ஆவேன். மேலும் அல்லாஹ்வை மிகவும் பயந்து நடப்பவனாகவும் உள்ளேன், ஆனால் நான் உபரியான நோன்பு நோற்கவும செய்கிறேன், நோற்காமலும் இருக்கிறேன். இரவில் உபரியான தொழுகையை தொழவும் செய்கிறேன், உறங்கியும் விடுகிறேன். பெண்களை திருமணமும் முடித்துள்ளேன். ஆகவே யார் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல' என்றார்கள். (ஸஹீஹுல் புஹாரி). تقدم

நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு அம்ரு அவர்கள் இரவு முழுதும் நின்று வணங்குபவராகவும், காலமெல்லாம் நோன்பு நோற்பவராகவும், ஒவ்வொரு இரவும் அல்குர்ஆனை ஓதி முடிப்பவராகவும் இருக்கிறார் என்ற செய்தி அறிந்து நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

'அவ்வாறு செய்யாதீர். (சிறிது நேரம்) தொழுவீராக, (சிறிது நேரம்) உறங்குவீராக. (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக, (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக. ஏனெனில் உமது உடம்புக்கு செய்யவேண்டிய கடமையும் உமக்குண்டு. உம்முடைய கண்ணுக்குச் செய்யவேண்டிய கடமையும் உமக்குண்டு, உம் விருந்தினருக்குச் செய்யவேண்டிய கடமையும் உமக்குண்டு. உம்முடைய துணைவிக்குச் செய்யவேண்டிய கடமையும் உமக்குண்டு' என்றார்கள். (ஸஹீஹுல் புஹாரி). تقدم

PDF