படைப்பாளனை (இறைவனை) வணங்குவதில் இடைத்தரகர்களை எடுத்துக்கொள்வது நிரந்தர நரகத்திற்கு செல்ல காரணமாய் அமையும் என கூறப்படுவது ஏன்?

மனித சட்டத்தில் அரசனின் அல்லது அதிகாரம் படைத்தோரின் உரிமையை மீறுவது ஏனைய குற்றங்களுக்கு சமமானது அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். இவ்வாறு மனித சட்டமே அதிகாரம் பெற்ற மனிதனின் உரிமையை மீறி நடக்கும் போது அதனை மிகப்பெரும் குற்றமாக கருதும் போது அரசர்களுக்கு எல்லாம் அரசனான அல்லாஹ்வின் உரிமையை மீறுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. ஆகவே நபியவர்கள் குறிப்பிட்டது போன்று அடியார்கள் அல்லாஹ்வுக்கு- இறைவனுக்கு- செலுத்த வேண்டிய கடமை அவனை மாத்திரம் வணங்கி வழிபடுவதாகும் . இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில் "அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை அவனை வணங்கி வழிபடுவதுடன் அவனுக்கு எதனையும் இணைவைக்காது இருப்பதுமாகும். இக்கடமையை அடியார்கள் நிறைவேற்றினால் அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி உனக்குத் தெரியுமா? என கேட்க, அதற்கு நான் இது குறித்து மிகவும் அறிந்தோர் அல்லாஹ்வும் அவனின் தூதருமாவார்கள். என்றேன். அதற்கு நபியவர்கள்: அடியார்களை வேதனை செய்யாது நரகத்திலிருந்து காப்பதுதான் அல்லாஹ் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமை" என்று நபியவர்கள் கூறியதாக முஆத் (ரலி) கூறினார்கள்.

அத்துடன் இவ்வாறு நாம் சிந்தித்தாலே இக்கேள்விக்கான சரியான பதிலை கண்டு கொள்ள முடியும். அதாவது நாம் ஒருவருக்கு ஒரு அன்பளிப்பை வழங்குகிறோம், அவரோ வேறொவருக்கு நன்றி கூறி அவரைப்பாராட்டுகிறார் என்றால் எம்மால் அதனை ஏற்க முடியுமா என்று சிந்தித்தால் நாம் இவ்விடயத்தில் தெளிவு பெற போதுமான சான்றாக இது அமைந்துவிடும். உயர் பண்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே, இந்த விடயத்தில் அடியார்களும் தங்களின் படைப்பாளனுடன் இவ்வாறுதான் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு கணக்கிட முடியாத அருள்களை வழங்கியுள்ளான், அவர்களோ அவனல்லாத மற்றவர்களுக்கு நன்றி செலுத்துகின்றனர். ஆனால் படைப்பாளனான இறைவன் எல்லா நிலைகளிலும் தேவையற்றவன்.

PDF