இஸ்லாம் சமூக சமநிலையை எவ்வாறு உறுதிப்பத்தியது?

செல்வம் அல்லாஹ்வுக்குரியது, அதன் பிரதிநிதிகளாகவே மக்கள் உள்ளனர் என்பது இஸ்லாத்தில் பொது விதிகளில் -கோட்பாடுகளில் ஒன்றாகும். அதே போன்று செல்வமானது பணம் படைத்தவர்களிடம் மாத்திரம் சுழன்றுகொண்டிருப்பதும் கூடாது. ஸகாத்தின் மூலம் ஏழை எளியவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சாதாரன விகிதத்தை செலவு செய்யாது செல்வத்தை சேமிப்பதை இஸ்லாம் தடுத்துள்ளது. ஸகாத் என்பது ஒரு வணக்கமாகும். அது கஞ்சத்தனம், உலோபித்தனம் ஆகிய குணங்களை களைந்து ஈதல் மற்றும் கொடை கொடுத்தல் போன்ற உயரிய பண்புகள் குடிகொள்ள வகைசெய்கிறது.

"இவ்வூராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரித்தானதாகும். செல்வம் உங்களிலுள்ள பணக்காரர்களுக்கிடையில் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்காமல் (மற்றவர்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, இவ்வாறு பொருளைப் பங்கிடும்படி கட்டளையிடுகிறான்.) ஆகவே, நம் தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாவான்". (அல் ஹஷ்ர் : 07). تقدم

"ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு தானம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு. (அல் ஹதீத்: 7). تقدم

"எவர்கள் தங்கம் வெள்ளியை சேமித்து அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்க வில்லையோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனை கொண்டு (நபியே) நன்மாறாயம் கூறுவீராக". (அத்தவ்பா : 34) . تقدم

அதே போல் இஸ்லாம் சக்தியுள்ள ஓவ்வொருவரும் தொழில் செய்யுமாறும் தூண்டுகிறது.

"அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவற்றைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கிறது". (அல்முல்க் : 15). تقدم

நடை முறையில் இஸ்லாம் செயல்ரீதியான ஒரு மார்க்கமாகும். அல்லாஹ் எமக்கு தவக்குலை (அல்லாஹ்வை சார்ந்து இருத்தல்) வலியுறுத்தி அதனைக் கைக்கொள்ளுமாறும் 'தவாகுல்' எனும் செயற்படாது இருத்தலை விட்டு விலகியிருக்குமாறும் உத்தரவிட்டுள்ளான். 'தவக்குல்' என்பது ஒரு காரியம் தொடர்பாக மனஉறுதி, அதற்காக இயலுமான முயற்சிகளை மேற்கொள்ளல், காரணகாரியங்களை பின்பற்துதல் போன்ற விடயங்களை கைக்கொண்டு பின் அல்லாஹ்வின் தீர்ப்பு மற்றும் முடிவை எதிர்பார்த்து அவனிடமே ஒப்படைப்பதைக் குறிக்கும்', அல்லது செய்ய வேண்டிய அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டு அல்லாஹ்விடம் பொறுப்புச்சாட்டுதல்' என்பதைக் குறிக்கும்.

ஒரு மனிதர் தனது ஒட்டகத்தை அல்லாஹ்வின் மீது பொறுப்புச் சாட்டிவிட்டு கட்டாது விட்டுவிட நாடினார். அப்போது நபியவர்கள் அந்த மனிதரைப்பார்த்து இவ்வாறு கூறினார்கள் :

'ஒட்டகத்தை கட்டிவிட்டு அல்லாஹ்விடம் பொறுப்பபுச்சாட்டு' என்றார்கள். (ஸஹீஹுத் திர்மிதி). - تقدم

இதன் மூலம் ஒரு முஸ்லிம் தேவையான சமநிலையை அடைந்து கொள்கிறான்.

இஸ்லாம் வீண்விரயத்தை -ஆடம்பரத்தை- தடுத்து, வாழ்க்கைத் தரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தனிநபர்களின் தரத்தை உயர்த்துகிறது. அதாவது இஸ்லாத்தில் செல்வம் என்பதன் கருத்து மனிதனின் அத்தியவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல. மாறாக ஒரு மனிதன் உண்ணவும் உடுக்கவும் வசிக்கவும் திருமனம் முடிக்கவும் ஹஜ் செய்யவும் தர்மம் வழங்கவும் தேவையானவற்றை அவன் பெற்றிருக்க வேண்டும் என்பதாகும்.

"அவர்கள் தானம் கொடுத்தால் அளவு கடந்தும் கொடுத்துவிட மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்யமாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் கொடுப்பார்கள்".(புர்கான் : 67). تقدم

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஏழை என்பவர் தான் வாழும் நாட்டின் வாழ்க்கைத்தரத்திற்கேட்ப அத்தியவசியத் தேவைகைள பூர்த்தி செய்வதற்கான வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொள்ளாதவராவார். வாழ்க்கைத் தரம் விரிவடைவதற்கேட்ப வறுமைக்கான உண்மை அர்த்தமும் விரிவடைகிறது. உதாரணத்திற்கு ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தனியான வீடொன்றை பெற்றிருப்பது வழக்கம் என்றிருப்பின், அவ்வாறு குறிப்பிட்ட ஒரு குடும்பம் சொந்த வீடொன்றை பெற்றிருக்க வில்லையெனில் அதுவும் வறுமையின் ஓரு வடிவமாகவே கருதப்படும். இதன் அடிப்படையில், சமநிலை என்பது ஒவ்வொரு தனிமனிதனையும் (முஸ்லிமாக இருந்தாலும் சரி அல்லது திம்மியாக இருந்தாலும் சரி) அந்த நேரத்தில் சமுதாயத்தின் தகுதிக்கும் திறன்களுக்கும் பொருத்தமான விதத்தில் வளப்படுத்துவதைக் குறிக்கும்.

சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதை இஸ்லாம் உத்தரவாதப்படுத்துகிறது, இதனை அரச பொதுக்காப்பீட்டின் -சமூக உத்தரவாதம்- மூலம் நிறைவேற்றுகிறது. அதாவது இஸ்லாத்தைப்பொருத்தவரை ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் சகோதரனாவான், ஆகவே அவனது சக முஸ்லிமுக்கு ஆதரவளிப்பதும், உதவி செய்வதும் அவன் மீது கடமையாகும். இந்த வகையில் முஸ்லிம்கள் தங்களுக்குள் எந்த ஒரு ஏழையும் உருவாகமல் இருப்பதை உறுதி செய்ய பாடுபடுவது அவர்களின் மீதுள்ள பொறுப்பாகும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள் :

'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்'. (ஸஹீஹுல் புஹாரி). تقدم

PDF