மேற்கத்திய அனுபவமானது, மத்திய காலத்தில் தேவாலயமும் அரசும் சேர்ந்து மக்களின் வளங்களை சுரண்டி அவர்களின் அறிவியலுக்கு எதிராக செயற்பட்டபோது அதற்கு எதிர்வினையாகும் முகமாக வெளிப்பட்ட ஒரு நிகழ்வாக உள்ளது. இஸ்லாமிய கோட்பாட்டின் நடைமுறையும் சீரிய தன்மையும் காரணமாக இஸ்லாமிய உலகானது இவ்வாறான சிக்கலை ஒரு போதும் எதிர்கொள்ளவில்லை.
உண்மையில் எமக்கு மனித வாழ்வின் எல்லா நிலைகளுடனும் பொருந்திப்போகும் உறுதியான இறை சட்டத்தின் தேவையே காணப்படுகிறது. வட்டி, ஓரினச்சேர்க்கை போன்றவற்றை ஹலாலாக்கும் நிலையிலுள்ள மனித இச்சைககள், அவனின் விருப்பு வெறுப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்ட அதிகார சட்டபீடங்களின் தேவை எமக்கில்லை. அதே போல் முதலாளித்துவக் கோட்பாட்டில் காணப்படுவது போல் பெரும் பலசாலிகள் மூலம் பலவீனர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எழுதப்பட்ட சட்ட ஏற்பாடுகளிலோ, தனிமனித சொத்துரிமையை தடுத்து, மனித இயல்பூக்கத்துடன் முரண்படும் விதத்தில் அமைந்த பொதுவுடமை கோட்பாடுகளிலோ எந்தத் தேவையும் கிடையாது.