இஸ்லாமிய மார்க்கம் சிறந்த பண்பாடுகளை கடைப்பிடித்து, தீய செயற்பாடுகளை விட்டும் விலகி நடக்குமாறு அழைப்பு விடுக்கிறது. அத்துடன் சில முஸ்லிம்களிடத்தில் காணப்படுகின்ற தவறான நடத்தையானது, அவை அவர்களின் கலாச்சார பழக்கவழக்கங்கள்; அல்லது மார்க்கம் குறித்த அவர்களின் அறியாமை, சரியான மார்க்த்தை விட்டு விலகியிருத்தல் போன்றவைகளால் ஏற்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட விடயத்தில் எவ்வித முரண்பாடுமில்லை என்பதற்கு பின்வரும் உதாரணத்தை குறிப்பிட முடியும். ஆடம்பரமான உயர்ரக கார் ஒட்னர் ஒருவர் அதனை செலுத்துவதற்கான அடிப்படைகளை கற்காது, அதனை ஒட்டியதானல் மிகப் பயங்கரமான விபத்திற்கு உட்பட்டார் எனில் அது உயர்ரக காரின் தவறு என்று ஒரு போதும் கூறுவதில்லை. அதை முறையாக செலுத்தத் தவறியவரையல்லவா நாம் குற்றம் சுமத்துகிறோம். ஆகவே இதே கண்ணோட்டத்தில் இஸ்லாத்தையும் சில முஸ்லிம்களின் நடத்தையும் நாம் அனுகினால் அது முரண்பாடாக அமையமாட்டாது!