ஏசு சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது?

சிருஷ்டிகர்த்தாவான இறைவன் நித்திய ஜீவன், எல்லாவற்றையும் நிர்வகிப்பவன், எவ்விதத் தேவையுமற்றவன், சக்கியுள்ளவன். இவ்வாறான பண்புகளைப் பெற்றவனுக்கு, கிறிஸ்தவர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல் மனிதர்களுக்காக இயசுவின் தோற்றத்தில் ஒருவரை பிரதிபலிக்கச் செய்து அவரை சிலுவையில் அறைந்து மரணிக்கச் செய்யவேண்டும் என்ற எந்தத் தேவையும் அவனுக்குக் கிடையாது. அவனே உயிரைக் கொடுக்கிறான், மேலும் அதனை பரிக்கவும் செய்கிறான், இதனால் அவன் ஒரு போதும் மரணிப்பதில்லை. அதே போன்று மீண்டும் உயிர்த்தெழுவதுமில்லை. அவனின் தூரதர்களான இப்ராஹீமை நெருப்புக் குண்டத்திலிருந்தும், மூஸாவை பிர்அவ்ன் மற்றும் அவனின் படைகளிடமிருந்து காப்பாற்றியது போல் அவனின் தூதரான இயேசுவையும் கொலை மற்றும் சிலுவையில் அறையப் படுவதிலிருந்து அவனே காப்பாற்றினான். இவ்வாறே அல்லாஹ் தனது நல்லடியார்களை எப்போதும் பாதுகாத்த வண்ணம் உள்ளான்.

"மேலும், ‘‘அல்லாஹ்வுடைய தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் (சிலுவையில் அறைந்து) கொலை செய்துவிட்டோம்'' என்று அவர்கள் கூறியதனாலும், (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவும் இல்லை. அவரை அவர்கள் சிலுவையில் அறையவும் இல்லை. (அவர் இருந்த அறைக்குள் அவரைத் தேடிச் சென்றவன் அவரைப்போல் ஆக்கப்பட்டு விட்டான். தேடிச்சென்ற மற்றவர்கள் அவனையே சிலுவையில் அறைந்தனர். இதனால்) அவர்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர். ஆகவே, எவர்கள் இதற்கு மாறான அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வீண் சந்தேகத்திலேயே ஆழ்ந்துவிட்டனர். வீண் சந்தேகத்தைப் பின்பற்றுவதைத் தவிர அதில் அவர்களுக்கு உண்மையான ஞான (ஆதார)ம் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை". எனினும், அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக்கொண்டான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்". (அந்நிஸா : 157-158) . تقدم

PDF