விளக்கத்திற்காக மாத்திரம்- உயர்வான பண்பு அல்லாஹ்விற்கு மாத்திரமே- ஒரு உதாரணத்தை குறிப்பிடுகிறேன். ஒரு மனிதன் இலக்ட்ரோனிக் கருவியொன்றை பயன்படுத்தும் வேளை அவன் அதனை வெளியிலிருந்தே கட்டுப்படுத்துகிறான். இயக்குகிறான். அவன் ஒரு போதும் எந்த நிலையிலும் அதனுள் போவதில்லை என்பதை நாம் அறிவோம்
ஒரு சாதாரன கருவியை இயக்குவதற்கு சாதாரண ஒரு மனிதனின் நிலை இவ்வாறு இருக்கையில் நாம் அல்லாஹ்வுக்கு இதனை விட பண்மடங்காக செய்வதற்கு இயலும் என்று கூறக் காரணம் அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருப்பதினாலாகும். ஆகவே நாம் படைப்பாளனான இறைவன் ஒருவன் என்றும் அவன் தனித்துவமானவன் என்றும் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறான பண்புள்ள ஒருவன் அவனின் கண்ணியத்திற்கு பொருத்தமற்றதை செய்யமாட்டான் என்பதையும் நாம் புரிய வேண்டும். அல்லாஹ்வுக்கு இணைகற்பித்து அவனது மகிமைக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்தைவிட்டும் அவன் மேலானவனாக உள்ளான்.
இன்னோர் உதாரணத்தை அவதானிப்போம். ஒரு மத போதகர் அல்லது மதரீதியான மரியாதையைப் பெற்ற ஒருவர் ஒரு போதும் பொதுப்பாதையில் நிர்வாணமாக திரியமாட்டார். அவருக்கு இதனை செய்யவதற்கு இயலுமை இருந்தும் மக்கள் முன் இவ்வாறான தோற்றத்தில் வரமாட்டார். காரணம் அவர் பெற்றிருக்கும் மதரீதியான அந்தஸ்த்து இச்செய்யற்பாட்டிட்ற்கு பொருந்தாது என்பதினாலாகும். ஆகவே மனிதனின் தோற்றத்தில் அல்லது படைப்பின் தோற்றத்தில் படைப்பாளன் -இறைவன்- தோன்ற வேண்டும் என்பது அறிவுபூர்வமற்ற ஒரு கேள்வி என்பதைப் புரிந்திருப்பீர்கள்.