வஹியின் (இறைச்செய்தியின்) ஊடாக தனது படைப்புகளுடன் படைப்பாளான அல்லாஹ் தொடர்புகொள்வதற்கான ஆதாரம் என்ன?

வஹியின் மூலம் தனது படைப்புகளுடன் அல்லாஹ் தொடர்பு கொள்கிறான் என்பதற்கான சில சான்றுகள் :

1- ஞானம்: அறிவு : உதாரணத்திற்கு ஒரு மனிதன் வீடோன்றை கட்டி தானோ அல்லது பிறரோ அல்லது தனது பிள்ளைகள் கூட பயன் பெறாது அதனை விட்டுவிட்டால், இயல்பாகவே நாம் அவரைப் பார்த்து அறிவில்லாதவர் அல்லது நல்லவர் அல்லர் எனக் தீர்ப்பளித்து விடுவோம். ஆனால் அல்லாஹ் மிக உயர்வானவன். எல்லோருக்கும் முன்மாதிரிமிக்கவன். அந்தவகையில் இந்தப் பிரபஞ்சத்தை படைத்து, வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றை மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்ததில் அவனின் நுட்பத்தையும் மிகப்பெரும் ஞானத்தையும் மிகத் தெளிவாக அறியமுடியுமாக உள்ளது.

2- இயல்பூக்கம் : தனது அடிப்படையையும், இருப்பின் மூலத்தையும், நோக்கத்தையும் அறிவதற்கான ஒரு வலுவான உள்ளார்ந்த தூண்டுதல் மனித ஆன்மாவினுள்ளே காணப்படுகிறது. அதையே நாம் பித்ரா என்று குறிப்பிடுகிறோம். மனித (ஃபித்ரா) இயல்பூக்கமானது எப்போதும் அவனது இருப்புக்கான காரணத்தைத் தேடத் தூண்டுகிறது. என்றாலும், ஒரு மறைமுக சக்தியின் தலையீடு இல்லாது மனிதனால் மாத்திரம் தனது படைப்பாளனின் பண்புகளையும், தனது இருப்பின் நோக்கத்தையும், இறுதி முடிவையும் அறிந்து கொள்ள முடியாது. இதனை தூதர்களை அனுப்புவதினூடகவே தெளிவுபடுத்த முடியும்.

மக்களில் அதிகமானோர் தூதுத்துவங்களில் -இறை வேதங்களிலிருந்து- தமது கொள்கைக்கான பாதையை தேடிக் கொள்வதை நாம் காணுகிறோம். அதே வேளை ஏனைய மக்கள் வழிகேட்டிலிருந்து கொண்டு சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறானோரின் சிந்தனை சடரீதியிலான உலகியல் சார் அடயாளங்ளுடன் நின்று விடுகின்றன.

3- பண்பாடுகள் : எமக்கு நீர் குடிக்க வேண்டும் என்ற தாக உணர்வானது நாம் அது இருப்பதை தெரிந்து கொள்ள முன் அது இருப்பதாக ஏற்றுக்கொள்ளும் போது, அதே போன்றுதான் நீதிக்கும் நேர்மைக்குமான எமது அவாவானது, நீதியாளன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கான சான்றாகும்.

மனிதன் இவ்வுலக வாழ்வில், மனிதர்களில் சிலர் சிலருக்கு அநியாயம் இழைக்கும் ஈனச்செயல்களை கண்கூடாக காண்கிறான். ஆனால் இவ்வாறு காணும் அவன் அநியாயம் இழைப்பவன் தப்பித்து, அநியாயத்திற்குட்பட்டவனின் உரிமை பரிக்கப்பட்ட நிலையில் அவனின் வாழ்வு முடிந்து விடும் என்று அவன் ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. அதாவது அநியாயக்காரன் தண்டிக்கப்பட வேண்டும், அநியாயத்திற்கு உட்பட்டவனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றே விரும்புவான். இது ஒரு சாதாரண சாமானியனின் விருப்பமாகும். இவ்வாறான நிலையில், மரணத்தின் பின் மீண்டும் மனிதன் உயிர்த்ததெழுதல், மரணத்திற்கு பிந்திய மறுமை வாழ்வு, பழிதீர்த்தல் போன்றவை இருக்கிறது என்ற ஒரு சிந்தனை ஒருவனுக்கு முன்வைக்கப்படுமாயின் அவன் மனநிம்மதியையும், மனஅமைதியையும் உணர்வான். மனிதன் தனது வினைக்காக –செயல்களுக்காக நிச்சயம் விசாரிக்கப்படுவான். ஆகையால் அவன் எந்த வழிகாட்டலோ, அறிவுறுத்தலோ, அல்லது ஆர்வமூட்டல் மற்றும் அச்சமூட்டலோ இன்றி அவனை விட்டுவிட முடியாது. இதுவே மனித குலத்திற்கான மதத்தின் பங்களிப்பாகும்.

அதே போன்று தற்போது காணப்படும் விண்லோக இறை மார்க்கங்களின் இருப்பானது, அதனை பின்பற்றுவோர் அதன் மூலம் தெய்வீகத்தன்மை வாய்ந்தது என உறுதியாக நம்புகின்றனர். இதுவும் படைப்பாளன் மனிதனுடன் தொடர்பு கொள்வதற்கான நேரடி ஆதாரமாகக் கருதப்படுகிறது. இறைவேதங்களையும், இறைவனால் மக்களுக்கு வழிகாட்ட தூதுவர்கள் அனுப்பப்படுதலையும் நாத்திகர்கள் மறுத்தாலும் கூட, அவர்களின் இருப்பும், உயிர்வாழ்வும் ஒரு பேருண்மைக்கான சான்றாக அமையப்போதுமானது. அதாவது மனிதன் இறைவனுடன் தொடர்போடு இருத்தல், இயல்பூக்கத்தின்-ஆன்மீகத்- தேவையை நிறைவேற்றுவது போன்ற அவனின் கட்டற்ற விருப்பமாகும்.

PDF