மனிதர்களுக்கு பொருத்தமானவர் அவர்களைப்போன்று தங்களுடன் அவரவர் மொழியில் பேசி அவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவராவார். மனித இயல்பிற்கு அப்பாற்பட்ட வானவரை ஒரு தூதராக அவர்களுக்கு அனுப்பி, அவர்களுக்கு சிரமமான காரியங்களை செய்திருந்தால் வானவர் செய்யும் காரியத்தை தங்களால் செய்ய முடியாது என நியாயம் கூறி அவர் கொண்டு வந்த தூதை நிராகரித்து விடுவர்.
"(அதற்கு) நீர் கூறுவீராக: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) வானவர்களே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு வானவரையே (நம்) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உம்மை நம் தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.)''. (அல் இஸ்ராஃ: 95). تقدم
"(அல்லது நம்) தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்களுக்கு வானவர்களைக் காணும் சக்தி இல்லாததனால்) அவரையும் ஒரு மனிதனுடைய ரூபத்தில்தான் நாம் அனுப்புவோம். இன்னும் அவர்கள் குழம்பிக் கொள்ளும் விடயத்தில் அப்பொழுதும் அவர்களுக்கு நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம்". (அல்அன்ஆம் :9). - تقدم