நபி என்பவர் இறைவெளிப்பாட்டை (வஹியை) பெற்றவர், புதிய ஒரு தூதுத்துவத்தையோ அல்லது வழிமுறையையோ கொண்டுவரவில்லை அர்ரசூல் என்ற இறைத்தூதர் தமது சமூகத்தாருக்கு பொருத்தமான வழிமுறை மற்றும் சட்டதிட்டங்களுடன் அல்லாஹ்வால் அனுப்பட்டவரைக் குறிக்கும். குறிப்பு: மேற்குறிப்பிட்ட இரு சொற்களும் இறை ஆணையை –தூதை- இவ்வுலகில் மக்களுக்கு எத்திவைப்பதற்காக அனுப்பபட்ட இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதப் பிரதிநிதிகளைக் குறிக்கும். நபி மூஸாவிற்கு தவ்ராதும், நபி ஈஸாவிற்கு இன்ஜீலும், நபி முஹம்மதிற்கு அல்குர்ஆனும், நபி இப்ராஹிமிற்கு ஸுஹுபுகளும், நபி தாவுதிற்கு ஸபூர் வேதமும் இறக்கியருளப்பட்டதை இதற்கு உதாரணமாக் கூறலாம்.