முஹம்மத் நபி அவர்கள் ஸுன்னியாகவோ ஷீஆவாகவோ இருக்கவில்லை. மாறாக சத்தியமார்க்கத்தைப் பின்பற்றி நடக்கும் ஒரு உண்மை முஸ்லிமாகவே இருந்தார். ஈஸா அவர்கள் ஒரு கத்தோலிக்கராகவே, அல்லது வேறு எந்தவொன்றின் அங்கத்தவராவோ இருக்கவில்லை. இவர்கள் இருவரும் எந்த தரகரும் இல்லாது இறைவனை (அல்லாஹ்வை) மாத்திரம் வணங்கும் உண்மை முஸ்லிம்களாகவே இருந்தனர். ஈஸா (அலை) அவர்கள் தன்னையோ தனது தாயையோ வணங்குபவராக இருக்கவில்லை. அதே போன்று முஹம்மத் நபியும் தன்னையோ தனது பெண்பிள்ளையையோ, அல்லது தனது மகளின் கணவரையோ வணங்குபவராக இருக்கவில்லை.
அரசியல் பிரச்சினைகளும், சரியான மார்க்க வழிமுறைகளை விட்டு நெறிபிரழ்ந்து சென்றமையும், மற்றும் வேறு பல காரணங்களின் விளைவாக இஸ்லாமிய வரலாற்றில் வழிகெட்ட பிரிவினர் தோன்றத்தான் செய்தன. இப்பிரிவுகளுக்கும், தெளிவான மற்றும் மிகவும் எளிய மார்க்கமாகிய உண்மை மார்க்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. பொதுவாக எல்லா சந்தர்ப்பத்திலும் 'ஸுன்னா' எனும் வார்த்தையானது நபியவர்களின் வழிமுறையை முழுமையாக பின்பற்றுதல் என்ற கருத்தையே குறித்து நிற்கிறது. 'ஷீஆ' எனும் வார்த்தை பொது முஸ்லிம்கள் பின்பற்றி நடக்கும் வழிமுறைகளிலிருந்து பிரிந்து சென்ற மக்கள் குழுவைக் குறிக்கும். அத்துடன், 'ஸுன்னி முஸ்லிம்கள்' தூதரின் வழிமுறையைப் பின்பற்றுவோராகவும், பொதுவாக அனைத்து விவகாரங்களிலும் இஸ்லாத்தின் சரியான அணுகுமுறையைப் பின்பற்றிச் செல்வோராகவும் உள்ளனர். ஆனால் ஷியாக்களோ இஸ்லாத்தின் சரியான அணுகுமுறையிலிருந்து விலகிய ஒரு பிரிவினர்.
''எவர்கள் தனது மார்க்கத்தைப் பிரித்து பல பிரிவினர்களாக ஆனார்களோ அவர்களின் எவரிடத்திலும் நீர் இல்லை. அவர்களின் விடயம் அல்லாஹ்விடமே உள்ளது. பின்னர் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்''. (அல் அன்ஆம்: 159). تقدم