மூஸா மற்றும் தாவூத் அலைஹிமஸ்ஸலாம் இருவரும் போராளிகளாக இருந்தனர். மூஸாவும் முஹம்மதும் (அலைஹிமஸ்ஸலாம்) அரசியல் மற்றும் உலக விவகாரங்களில் பல பதவிகளை பொறுப்பேற்றிருந்தனர். இருவரும் சிலைவணக்கம் நிறைந்த சமூகத்தை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றனர். மூஸா நபி தனது சமூகத்தாருடன் எகிப்தைவிட்டு வெளியேறினார். தனது சொந்த தேசத்தின் அரசியல் மற்றும் இராணுவ ஆதிக்கத்தலிருந்து விடுபட்டு தனது மார்க்கத்தை பாதுகாக்க முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யத்ரிபுக்கு -மதீனாவுக்குச்- சென்றார்கள். அதற்கு முன் தனது தோழர்கள் அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் செய்திருந்தனர். மூஸா மற்றும் முஹம்மத் ஆகியோரின் பிரச்சாரங்கள் எகிப்திலும் அரபு நாட்டிலும் காணப்பட்டன. அவ்விரண்டு சூழல்களும் விக்கிரக வழிபாட்டு சார்ந்த சூழலாகும். ஆனால் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரம் சிலை வணங்கிகள் அல்லாத யூத சமூகத்திற்கானதாக இருந்தது. இதுவே ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரச்சாரம் சற்று வித்தியசப்படக் காரணம். அத்துடன் அவர் இருந்த சூழ்நிலையும் மிகக் கடினமானதாகக் காணப்பட்டது. மூஸா மற்றும் முஹம்மத் அலைஹிமஸ்ஸலாம் ஆகியோரின் பிரச்சாரப் பொறுப்பானது சிலை வணக்கத்திலிருந்து ஏகத்துவத்தின் பால் மாற்றுகின்ற மிகப்பாரியதும் அடிப்படையுமான ஒன்றாகக் காணப்பட்டது.
அத்துடன் இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் நடைபெற்ற போர்களில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டவில்லை. அக்காலத்தில் நடைபெற்ற போர்கள் யாவும் தற்காப்பு, அத்துமீறலைத் தடுத்தல் அல்லது மதத்தைப் பாதுகாத்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளை ஏனைய மதங்களில் மதத்தின் பெயரால் நடைபெற்ற போர்களில் பலியானோர் எண்ணிக்கை பல மில்லியன்களாகும்!
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கருணை மக்காவின் அதிகாரம் கிடைத்த அந்நாளில் வெளிப்பட்டது. அவ்வேளை அவர்கள் இன்றைய தினம் கருணையின் தினமாகும் எனக் கூறி முஸ்லிம்களுக்கு நோவினையும் தொல்லையும் கொடுப்பதில் அயராது ஈடுபாடுட்ட குறைஷியருக்கு பொது மன்னிப்பபை பிரகடனப்படுத்தி கௌரவப்படுத்தினார்கள். இதன் மூலம் உபத்திரத்திற்கு பதிலாக உபகாகரத்தையும்; கொடுமை செய்வதற்குப் பதிலாக நல்ல முறையில் நடந்துகொள்வதையும் சன்மானமாக வழங்கினார்கள்.
"நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்". (புஸ்ஸிலத் : 34). تقدم
இறையச்சமுடையோரின் பண்புகளில் சிலவை குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :
''கோபத்தை மென்று, மனிதர்களை மன்னிப்பவர்களாகவும் இருப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்''. (ஆல இம்ரான் : 134). تقدم