யூத சமூகத்தினரான பனு குரைழா, உடன்படிக்கையை மீறி, இணைவைப்பாளர்களுடன் இணைந்து முஸ்லிம்களை அழிப்பதற்கு கூட்டுச்சேர்ந்தார்கள். இந்த தூரோகச் செயல் அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது. எனவே அவர்களின் ஷரீஆவின் -மத சட்டதிட்டத்தின்-அடிப்படையில் துரோகம் மற்றும் உடன்படிக்கை மீறலுக்கான தண்டணை அமுல்படுத்தப்பட்டது. இதனை நபியவர்கள் அவர்களின் உடன்பாட்டின் அடிப்படையில் நிறைவேற்றினார்கள். அதாவது அவர்களிடமே இந்த விவகாரம் குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு ஒருவரை நியமிக்குமாறு வேண்டிக் கொண்டதற்கிணங்க அவர்கள் நபித்தோழர் ஒருவரை நியமித்தார்கள். அவர் இந்த விவகாரத்தில் அவர்களின் மதச்சட்டம் குறிப்பிடும் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வேண்டிக் கொண்டார். அதனடிப்படையிலேதான் இத்தண்டனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. (தாரீகுல் இஸ்லாம் : (2:307-318)). تقدم
இன்றைய ஐக்கிய நாட்டுச்சபையின் சட்டவிதிகளில் துரோகிகள், உடன்படிக்கை மீறுவோருக்கான தண்டனை என்ன? ஒரு குழு உம்மையும், உமது குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்து உமது செல்வத்தை அபகரிப்பதற்கு திட்டம் தீட்டியுள்ளனர் என வைத்துக்கொண்டால் நீ அவர்களுக்கு என்ன செய்வாய்? பனு குரைழா யூதர்கள் உடன்படிக்கை முறித்து, முஸ்லிம்களை துவம்சம் செய்ய இணைவைப்பாளர்களுடன் கூட்டுச்சேர்ந்தனர். இந்நிலையில் தம்மை பாதுகாத்துக்கொள்ள முஸ்லிம்கள் எதை செய்ய வேண்டியிருக்கும்? இவ்விவகாரம் தொடர்பாக முஸ்லிம்கள் செய்தவை சாதாரண மனிதப்புத்தியும் ஏற்கக்கூடிய தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு நடவடிக்கையாகும்.