நபி முஹம்மத் அவர்கள் ஆயிஷாவை (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை சிறுவயதில் திருமணம் செய்தது ஏன்?

ஆயிஷா அம்மையார் நபியவர்களை மிகவும் விரும்பினார்கள் என்றும் அவர்கள் இந்த திருமணத்தினால் எந்தப் பிரச்சினையும் கொள்ளவில்லை என்பது குறித்து பேசும் ஹதீஸ்களை ஹதீஸ் கிரந்தங்களில் மிகவும் தரம் வாய்ந்த ஹதீஸ்களை கொண்ட ஸஹீஹ் அல் புஹாரி கிரந்தத்தில் எம்மால் கண்டு கொள்ள முடிகிறது.

இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், நபியவர்களின் காலத்தில் இருந்த எதிரிகள் முஹம்மது நபியை மிக அசிங்கமான முறையில் அவர் ஒரு கவிஞர் மற்றும் பைத்தியக்காரர் என்றெல்லாம் அவரை விமர்சித்தனர். ஆனால் ஒரு போதும் இந்த திருமண நிகழ்வு குறித்து அவரை யாரும் குறை கூறவில்லை, எவரும் இது குறித்து பேசவுமில்லை. ஆனால் தற்காலத்தில் இருக்கும் சில உள்நோக்கம் கொண்ட சில அற்பர்கள்தான் இஸ்லாத்தை விமர்சிப்பதற்காக இதனைக் குறித்துப் பேசுகிறார்கள். இவ்வாறான நிகழ்வுகளை மக்கள் அக்கால வழமை சார்ந்த பொதுவான நிகழ்வாகவே கருதினர். பல அரசர்கள் மிகச்சிறிய வயதினரை திருமணம் செய்துள்ளனர் என்ற விவரங்கள் வரலாற்றில் காணப்படுகிறது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பெற்றெடுக்க முன் மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்களை ஒரு தொன்னூறு வயது நிரம்பிய மனிதருக்கு திருமணம் பேசியதான தகவல் கிறிஸ்துவ நம்பிக்கையில் காணப்படுகிறது. இதனடிப்படையில் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வயது நபியவர்களை திருமணம் முடிக்கையில் மேற்குறித்த வயதிற்கு நெருக்கமாக இருந்ததை அவதானிக்க முடிகிறது. அல்லது பதினோராம் நூற்றாண்டில் இங்கிலாந்து மகாராணியான எஸ்போலா தனது எட்டாம் வயதில் திருமணம் முடித்த நிகழ்வு வரலாற்றில் பதிவாகியுள்ளது. (http://muslimvilla.smfforfree.com/index.php...https://liguopedia.wordpress.com/.../19/agnes-de-france/...). ஆனால் இவர்கள் கற்பனை செய்வது போன்று நபியவர்களின் திருமண நிகழ்வு நடைபெறவில்லை என்தே யதார்த்தமாகும்! تقدم

PDF