நபி முஹம்மத் அவர்கள் பைதுல் மக்திஸுக்கு சென்று, அங்கிருந்து விண்ணுலகம் சென்று அதே இரவில் எவ்வாறு திரும்பிவந்தார்கள்?

நவீன தொழில்நுட்பமானது மனித குரல்களையும், படங்களையும் ஒரு நொடியில் கடத்தி இன்னொருவருக்கு சென்றடையச் செய்கிறது.1400 ஆண்டுகளுக்கு முன்பு மனிதகுலத்தை உருவாக்கிய இறைவன் தனது நபியை, உடல் மற்றும் ஆன்மாவுடன் வானத்திற்கு உயர்த்தியிருக்க முடியாதா? புராக் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு வாகனத்தின் மீது ஏறிச்சென்றார்கள். புராக் என்பது ஒரு வெள்ளை நிறமான பிராணி கழுதையை விட சற்று உயரமான கோவேரிக் கழுதையை விட உயரம் குறைந்த ஒரு வாகனமாகும்.(பிராணியாகும்;) அந்தப் பிராணி தன் பார்வை எட்டிய தூரம் வரை தனது கால்களை எடுத்து வைக்கும் அந்த அளவுக்கு வேகமாக பிரயாணம் செய்யும்! அதற்கு கடிவாளமும் விளக்கும் உண்டு அதில் நபிமார்கள் பிரயாணம் செய்துள்ளனர்.

இஸ்ரா மிஃராஜ் விண்ணுலகப்பயணமானது முழுமையாக இறைவல்லமை மற்றும் இறைநாட்டத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அதிசய நிகழ்வாகும். அது எமது சிந்தனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு என்பதுடன் நாம் அறிந்து வைத்துள்ள அனைத்து பிரபஞ்ச விதிகளிலிருந்து வித்தியாசப்படும் ஒரு நிகழ்வு. இப்பிரபஞ்ச விதிகளை இயற்றியவன் இறைவன் என்றவகையில் அகிலங்களின் இரட்சகனின் அத்தாட்சிகளில் ஒன்றாகவும் சான்றாதாரமாகவும் இது காணப்படுகிறது.

PDF