நபி முஹம்மத் யார்? அவரின் தூது உண்மை என்பதற்கான ஆதாராம் என்ன?

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ்வின் மகனாவார். அப்துல்லாஹ் அப்துல் முத்தலிபின் மகனாவார், அப்துல் முத்தலிப் ஹாஷிமின் மகனாவார். மக்காவில் வசித்துக்கொண்டிருந்த அறபிக்கோத்திரமான குறைஷிக்குலத்தை சார்ந்தவர் இவர். இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான இஸ்மாஈல் அவர்களின் வழித்தோன்றலுமாவார்.

பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரிவதாகவும், அவரின் வழித்தோன்றில் மிகப்பெரும் சமூகத்தை உருவாக்குவான் எனவும் உறுதியளித்தான்.

'இஸ்மவேலைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், இதோ, நான் அவரை ஆசீர்வதித்து, அவரைப் பலுகச் செய்து, அவரை மிக அதிகமாகப்பெருகச் செய்வேன், அவர் பன்னிரண்டு இளவரசர்களைப் பெற்றெடுப்பார், அவரைப் பெரிய தேசமாக்குவேன் (பழைய ஏற்பாடு, ஆதியாகமம் (17:20)). تقدم

இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சட்டபூர்வமான மகனாக இஸ்மாஈல் இருந்தார் என்பதற்கு இது மிகப்பெரும் சான்றாக உள்ளது. تقدم

கர்த்தருடைய தூதன் அவளிடம், 'இதோ, நீ கர்ப்பவதியாக இருக்கிறாய், ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாய், கர்த்தர் உன் உபத்திரவத்தைக் கேட்டபடியினால் அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாய்' என்றார் (பழைய ஏற்பாடு, ஆதியாகமம் (11:16)). تقدم

ஆகவே, ஆபிரஹாமின் மனைவியாகிய சாரா தன்னிடம் பத்து வருடங்களாக, இருந்த தனது அடிமையான எகிப்தைச் சேர்ந்த ஹாஜரை கன்ஆன் பிரதேசத்தில் வசிப்பதற்காக ஆபிரஹாமிற்கு மனைவியாகக் கொடுத்தார்.'(பழைய ஏற்பாடு, ஆதியாகமம் 3:16)).

நபி முஹம்மத் மக்காவில் பிறந்தார். அவர் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை மரணித்திருந்தார். பின்னர் அவர்களின் தாயாரும் சிறுவயதிலேயே மரணித்தார், பின் அவரின் பாட்டனார் பொறுப்பில் வளர்ந்தார். பின் அவரின் பாட்டனாரும் மரணிக்க, நபியவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவரைப் பொறுப்பேற்றார்.

உண்மை, நம்பிக்கை போன்ற நற்பண்புகளால் பிரபல்யமானவர்களாகத் திகழ்ந்தார்கள். ஜாஹிலிய்யாக் கால மக்களுடன் வீண்விளையாட்டு, கேளிக்கை அல்லது நடனம் இசை, மது அருந்துதல் போன்ற விடயங்களில் கலந்து கொள்ளாதவர்களாகவும், அவற்றை அங்கீகரிக்காதவர்களாகவும் திகழ்ந்தார்கள். பின் நபியவர்கள் மக்காவிற்கு சமீபமாக காணப்படும் ஹிராக் குகைக்கு தியானத்திற்காக செல்லலானார்கள். அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் இறைவெளிப்பாடு (வஹி) அவர்களுக்கு இறங்கியது. அல்லாஹ்விடமிருந்து திடீரென ஒரு வானவர் வந்து ஓதுவீராக! ஓதுவீராக என்று கூறினார். நபியவர்களோ எழுத படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார்கள். அதனால் தன்னிடம் ஓதுமாறு வேண்டிக்கொண்ட வானவரிடம் தான் ஓதத் தெரிந்தவனல்ல என்று முதல் தடவையாக பதிலளித்தார்கள். பின்னர் வானவர் மீண்டும் இரண்டாவது தடவையாகவும் ஓதுமாறு வேண்ட நபியவர்கள் தான் ஓதத்தெரிந்தவனல்ல என்று வானவரிடம் கூறினார். பின்னர் வானவர் நபியவர்களை சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்து ஓதுமாறு வேண்டிக்கொண்டார்கள். அப்போதும் நபியவர்கள் தான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்று மூன்றாம் தடவையாகவும் பதிலளிக்க வானவர் நபியவர்களிடம் : "இக்ரஃ பிஸ்மிரப்பிகல்லதீ கலக" என ஆரம்பிக்கும் பின்வரும் ஐந்து வசனங்களை ஓதிக் காண்பித்தார்கள். "படைத்த உமதிரட்சகனின் பெயரால் ஓதுவீராக. மனிதனை அவன் கருவறைச் சுவரில் ஒட்டிக்கொள்ளக்கூடியதிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உனது இரட்சகன் மிக கண்ணியமானவன். அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான். (அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை அவன் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்". (ஸூறத்துல் அலக் 1-5). تقدم

முஹம்மத் நபியவர்களின் நபித்துவம் உண்மை என்பதற்கான சான்று :

இந்த விடயத்தை நாம் அவரின் வாழ்க்கை வரலாற்றின் ஊடாகக் கண்டுகொள்கிறோம். அவர் உண்மை பேசுபவர், நம்பிக்கையாளார் என எல்லோராலும் போற்றப்பட்டவராக பிரபல்பயம் பெற்றிருந்தார்ز அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :

"(நபியே!) நீர் இதற்கு முன்னர் ஒரு வேதத்தை ஓதி அறிந்தவருமல்ல; உமது கையால் நீர் அதை எழுதி(ப் பழகி)யவருமல்ல. அவ்வாறு இருந்திருக்குமாயின், நிராகரிப்பவர்கள் (அசத்தியவாதிகள்) (இதை நீர் தாமாகவே கற்பனை செய்து கொண்டீரே தவிர இறைவனால் அருளப்பட்டதல்ல என்று) சந்தேகம் கொள்ளலாம்". (அல் அன்கபூத் : 48). تقدم

நபியவர்கள் மக்களை எதன் பால் அழைக்கிறார்களோ அவற்றை முதலாவதாக செய்பவர்களாக இருந்தார்கள்ز அவர்களின் வார்த்தைகளை செயல்களால் உண்மைப்படுத்துவார்கள். (சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தது), தனது பிரச்சாரத்திற்கு உலகியல் வெகுமதியை வேண்டுபவராக அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் ஒரு ஏழையாகவும், தயாள குணமுடையவர் களாகவும், கருணையும், பணிவு மிக்கவர்களாகவும் வாழ்ந்தார்கள். தமது சமூதாயத்தில் அதிகம் அர்ப்பணிப்புடன் நடந்து கொள்பவர்களாகவும், மக்களிடத்தில் இருக்கும் விடயங்களில் சுயகௌரவம் பேணி நடப்பவர்களாகவும் காணப்பட்டார்கள். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான் :

''அல்லாஹ் நேர்வழியில் செலுத்தியோர் இவர்கள்தாம். எனவே, இவர்களின் வழியை நீர் பின்பற்றுவீராக. இதற்காக நான் எந்தக் கூலியையும் கேட்கமாட்டேன். இது அகிலத்தாருக்கான உபதேசமேயன்றி வேறில்லை என்று (நபியே) நீர் கூறுவீராக''. (அல் அன்ஆம்: 90). تقدم

அல்லாஹ் அறபுகளின் மொழியான அறபியில் அருளிய குர்ஆன் வசனங்களிலிருந்து தமது நபித்துவத்திற்கான சான்றுகளை அவர்கள் முன்வைத்தார்கள். அத்திருவசனங்கள் உயர் இலக்கிய நயம் கொண்டமைந்ததினால் மனிதர்களின் கூற்றுக்களை விட மிகவும் உன்னதமானதாக அமைந்திருந்தது. இது குறித்து அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான் :

"இந்த குர்ஆனை அவர்கள் சிந்தித்துணர வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் பல (தவறுகளையும்) முரண்பாடுகளை(யும்) அவர்கள் கண்டிருப்பார்கள்". (நிஸா : 82). (நிஸா : 82).

"இதனை இவரே இட்டுக் கட்டினார் என அவர்கள் கூறுகின்றனரா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டப்பட்ட இது போன்ற பத்து அத்தியாயங்களைக் கொண்டுவாருங்கள். (இதற்காக) அல்லாஹ்வையன்றி உங்களால் முடிந்தவர்களை எல்லாம் அழைத்துக் கொள்ளுங்கள் என்று (நபியே) நீர் கூறுவீராக!". (ஹூத் : 13). تقدم

"உமக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் மனோஇச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீர் அறிந்து கொள்வீராக. அல்லாஹ்வுடைய நேரான வழியை தவிர்த்து விட்டுத் தன் மனோஇச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை". (அல் கஸஸ்: 50). تقدم

மதீனாவில் உள்ளவர்களில் சிலர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்களின் மறைவால் சூரிய கிரகணம் ஏற்பட்டதாக வதந்தி பரப்பிய போது, கிரகணம் பற்றிய எண்ணற்ற மூட நம்பிக்கைகளும் கட்டுக் கதைகளும் இன்றுவரையில் இருக்கும் நிலையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த பிழையான நம்பிக்கைளை தகர்த்தெரியும் விதத்தில் அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தியை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே மிகத்தெளிவாக கூறினார்கள். இது குறித்து அவர்கள் குறிப்பிடுகையில் :

'நிச்சயமாக சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் (பிரகாசம் வரும்வரை) அல்லாஹ்வை நினைவு கூறுதவதின் பாலும் தொழுகையின் பாலும் விரையுங்கள்' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி). تقدم تقدم

ஆகவே அவர்கள் ஒரு பொய் நபியாக இருந்திருந்தால் தனது நபித்துவத்தை மக்கள் ஏற்கச்செய்வதற்கான சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்தியிருப்பார்கள்!

மேலும், நபிகள் நாயகம் பற்றிய வர்ணனைகளும் அவர்களின் பெயரும் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதானது அவர்கள் ஒரு நபி என்பதற்கான சான்றுகளின் ஒன்றாகும்.

'படிக்கத் தெரியாத ஒருவருக்கு புத்தகம் கொடுக்கப்பட்டு அவரிடம் இதைப் படியுங்கள் எனக் கூறப்படும் அதற்கு அவர் எனக்கு படிக்கத் தெரியாது' எனக் கூறுவார் (பழைய ஏற்பாடு, ஏசாயா 29:12)). تقدم

தற்போதுள்ள பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் நூல்களில், திரிபுகளும், மனிதக் கையாடல்களும் இருப்பதால் அல்லாஹ்விடமிருந்து வந்தவை என முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் அவை இரண்டிற்கும் ஒரு சரியான மூலஆதாரம் உள்ளது என்பதை அவர்கள் நம்புகிறார்கள். அதுவே அல்லாஹ் தனது தீர்கதரிசிகளான மூஸா மற்றும் ஈஸாவிற்கு அருளிய தவ்ராத்தும் இன்ஜீலுமாகும். இந்த வகையில் தற்போதுள்ள புதிய மற்றும் பழைய ஏற்பாடுகளில் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட சில விடயங்கள் இருக்க முடியும் !. இவ்வேதங்களில் வந்துள்ள நபித்துவம் தொடர்பாக வந்த (தீரக்கதரிசனம்) உண்மையாக இருந்தால் அது நபி முஹம்மத் அவர்களைப்பற்றியே பேசிகிறது எனவும், அது உண்மை தவ்ராத் வேதத்தின் எச்சங்களில் உள்ளவை எனவும் முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் அழைப்பு விடுத்த தூதுச்செய்தி தூய்மையான அகீதாவாகும். அது ஓரிறைவனை விசுவாசித்து, வணக்க வழிபாடுகளில் அவனை ஒருவனாகவே ஏற்று வழிபடுதலைக் குறிக்கும். அல்குர்ஆன் குறிப்பிடுவது போல், இதுவே நபியவர்களுக்கு முன் வந்த அனைத்து நபிமார்களும் மக்களுக்கு முன்வைத்த தூதாக காணப்படுகிறது. இந்தப் பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விவரிக்கிறது :

"மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்குமான அல்லாஹ்வின் தூதராவேன். வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன. உண்மையாக வணங்கப்படத்தகுதியானவன் அவனைத்தவிர வேறு யாரும் இல்லை. அவனே உயிர்பிக்கிறான் இன்னும் மரணிக்கவும் செய்கிறான் என்று (நபியே) நீர் கூறுவீராக! ஆகவே நீங்கள் அல்லாஹ்வையும், எழுத்தறிவற்ற உம்மி நபியாகிய அவனது தூதiரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரும், அல்லாஹ்வையும் அவனது வார்த்தைகளையும் நம்பிக்கை கொள்கிறார். நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அவரையே பின்பற்றுங்கள்". (அல் அஃராப் : 158). تقدم

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மகிமைப் படுத்தியது போன்று ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இப்பூமியில் எவரும் மகிமைப்படுத்தவில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 'நான் மர்யமின் மகன் ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் மக்களிலேயே மிகவும் நெருக்கமானவன். ஆவேன்' என்று கூறிய போது அல்லாஹ்வின் தூதரே அது எப்படி? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு : 'இறைத் தூதர்கள் ஒரே தந்தையின் பிள்ளைகள் ஆவர். அவர்களின் தாய்மார்கள் பலராவர். அவர்களின் மார்க்கம் ஒன்றே. எனக்கும் அவருக்கும் இடையே (ஈஸாவிற்கும் எனக்கும் இடையில்) இறைத்தூதர் எவருமில்லை'. (ஆதாரம் : முஸ்லிம் (1218)). تقدم

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயர் நபி முஹம்மதின் பெயரைவிட அதிக தடவைகள் அல் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஈஸாவின் பெயர் 25 தடவைகளும் முஹம்மத் நபியின் பெயர் 4 தடவைகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்குர்ஆனில் வந்துள்ளதிற்கினங்க உலகப்பெண்கள் அனைவரையும் பார்க்க ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாயார் மர்யம் அவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளார்கள்.

அதே போன்று அல்குர்ஆனில் பெயர்குறிப்பிடப்பட்ட ஒரே பெண்ணாக மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் மாத்திரமே உள்ளார்.

அது மாத்திரமின்றி அல்குர்ஆனில் ஒரு முழு அத்தியாயத்தின் பெயர் மர்யம் என்றுள்ளது. (வெப் முகவரி :www.fatensabri.com புத்தகம் அய்னுன் அலல் ஹகீகா : ஆசிரியர் பாதின் ஸப்ரி). تقدم

இவையனைத்தும் நபியவர்களின் உண்மைக்கு மிகப்பெறும் சான்றாக உள்ளன. அவர் ஒரு பொய்பேசும் தீர்க்கதரிசியாக இருந்திருந்தால் தனது மனைவிகள் அல்லது பெற்றோர் அல்லது பெண்பிள்ளைகளின் பெயர்களை குறிப்பிட்டிருப்பார்கள். மேலும் அவர்கள் ஒரு பொய்பேசும் நபியாக இருந்திருந்தால் அவர்கள் ஈஸாவை மகிமைப்படுத்தி பேசியிருக்கவுமாட்டார்கள். அத்துடன் ஒரு முஸ்லிம் விசுவாசம் கொள்ளவேண்டிய அடிப்படையான விடயங்களில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈமான் கொள்வது அவசியம் என்பதை கூறியிருக்கவும் மாட்டார்கள்.

முஹம்மது நபிக்கும் இன்றுள்ள எந்த ஒரு மத போதகருக்கும் இடையே ஒரு எளிமையான ஒப்பீட்டை செய்வதன் மூலம் நபியவர்களுடைய நேர்மையை எம்மால் உணர முடியும். செல்வம், கௌரவம் அல்லது மதரீதியான பதவிகள் அவருக்கு வழங்கப்பட்டும் கூட அந்த அனைத்து சலுகைகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். எனவே விசுவாசிகளின் பாவங்களை ஒப்புக்கொள்ளவோ அல்லது மன்னிக்கவோ அவர்கள் முற்பட வில்லை. மாறாக, படைப்பாளனிடம் நேரடியாக முறையிடும் படியே தம்மைப் பின்பற்றுபவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

நபியவர்களின் நபித்துவம் உண்மை என்பதற்கான மிகப்பெரும் சான்றாக அவர்களின் பிரச்சாரம் பரவி மக்கள் அதனை அங்கீகரித்ததுடன் அதற்கு அல்லாஹ் அருள் புரிந்ததையும் குறிப்பிட முடியும். ஆகவேதான் மனித வரலாற்றில் நபித்துவம் கிடைத்ததாக வாதிட்ட பொய் நபிகளின் பிரச்சாரத்தை அல்லாஹ் வெற்றிபெறச்செய்யவில்லை.

ஆங்கிலேய தத்துவஞானி தோமஸ் கார்லைல் (1795-1881) பின்வருமாறு குறிப்பிடுகிறார். 'இஸ்லாமிய மார்க்கம் பொய்யானது, முகம்மத் ஒரு ஏமாற்றுகாரர் போன்ற ஊகங்களுக்கு செவிசாய்ப்பது இந்த யுகத்தில் வாழும் நாகரீகமுள்ள எந்தவொரு மனிதருக்கும் மிகப்பெரிய அவமானமாகும். இதுபோன்ற கேலிக்குரிய, வெட்கக்கேடான வாசகங்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும். ஏனென்றால், அந்தத் தூதர் கூறிய செய்தி, இறைவன் படைத்த நம்மைப் போன்ற சுமார் இருநூறு மில்லியன் மக்களுக்கு, பன்னிரெண்டு நூற்றாண்டு காலமாக, இன்னும் ஒளிரும் கலங்கரை விளக்காக இருக்கிறது. சகோதரர்களே! ஒரு பொய் மனிதன் (பொய்யர்) ஒரு மதத்தை உருவாக்கி அதை பிரச்சாரம் செய்ய முடியும் என்பதை எப்போதாவது பார்த்ததுண்டா? இது ஓர் அதிசயமான விடயம். அல்லாஹ்வின் மீது ஆணையாக இது நிகழ முடியாத விடயமாகும். போலி மேசனால் வெறும் செங்கற்கள் கொண்டு வீட்டைக் கட்ட முடியாது. மாறாக அவன் சுண்ணாம்பு, ஜிப்சம், மண் போன்றவற்றின் தன்மைகளை அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு அறியவில்லை என்றால், அவன் வீட்டைக் கட்டுவது எவ்வாறு? இவ்வாறு ஒன்றும் அறியாது இக்கலவைகையக் கொண்டு கட்டும் கட்டடம் வெறும் இடிபாட்டு குவியல், அல்லது பொருட்களின் கலவைக் குவியலாகத்தான் காணப்படும். இவ்வாறான கட்டடம் இடிந்து அழிந்து போய்விடும் என்பதே யதார்த்தமாகும். அந்த வகையில் பன்னிரண்டு நூற்றாண்டுகளாக நம்மைப் போன்ற இருநூறு மில்லியன் மக்கள் விசுவாசிக்கும் ஒரு மதத்தின் அஸ்திவாரம் பொய்யான அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும். அவ்வாறான மதம் முழுமையாக அழிந்து விடுவதுதான் யதார்த்தமாகும்'. (நூல் 'அப்தால்'). تقدم

PDF