அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் ஒன்று திரட்டப்பட்ட அல்குர்ஆன் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் எரிக்கப்பட்டது என்பதின் விபரம் யாது?

உண்மையில் ஒரு விடயத்தை புரிந்து கொள்ளல் அவசியம். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தமது தோழர்கள் ஓதுவதற்காகவும் பிறருக்கு கற்றுக் கொடுப்பதற்காகவும் அல்குர்ஆனை பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணமாகவே விட்டுச்சென்றார்கள். அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சிப்பொறுப்பை ஏற்றதும் பல ஏடுகளில் தொகுக்கப்பட்டதை பார்ப்பதற்கு இலகுபடுத்தல் என்ற நோக்கில் ஒரே இடத்தில் சேகரிக்குமாறு பணித்தார்கள். உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் நகரங்களில் வசித்து வந்த ஸஹாபாக்களிடம், பல்வேறு அரேபிய வழக்குமொழிகளில் காணப்பட்ட ஏடுகளையும் பிரதிகளையும் ஏரித்து விடுமாறு பணிப்புரை விடுத்து, நபியவர்கள் விட்டுச்சென்ற மூலப்பிரதியான அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் ஒன்று திரட்டப்பட்டு வைக்கப்பட்ட அல்குர்ஆனின் புதிய பிரதிகளை அவர்களுக்கு அனுப்பிவைத்தார். இதன் மூலம் நபியவர்கள் விட்டுச்சென்ற ஒரே மூலப் பிரதியை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அனைத்து நகரங்களிலும் மக்கள் பயன்படுத்துவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்திக்கொடுத்தார்.

ஆக அல்குர்ஆன் எந்த மாற்றமுமின்றி அதன் மூல வடிவில் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது. அது முஸ்லிம்களின் வாழ்வோட்டத்தில் எல்லாக் காலங்களிலும் இணைபிரியா ஒரு அம்சமாகவும் காணப்படுகிறது. அவர்கள் அதனை தங்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வதுடன் அதனை தொழுகைகளிலும் அன்றாடம் ஓதியும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

PDF