உலகத்தில் பல்லாயிரக்கணக்கான மொழிகளும், வழக்கு மொழிகளும் பரவலாக காணப்படும் ஒரு விடயாமாகும். இவ்வாறாக காணப்படும் எந்த மொழியில் அல்குர்ஆன் இறக்கப் பட்டாலும் ஏன் மற்றைய மொழியொன்றில் இறக்கப்பட்டிருக்கக் கூடாது, அல்லது இறங்கியிருக்க வேண்டுமே என்ற கேள்வியை சாதாரணமாக மக்கள் கேட்கவே செய்வர். உண்மையில் அல்லாஹ் தனது தூதர்களாக அவர்களின் சமூகத்தாரின் மொழியை பேசக்கூடியவரையே அனுப்பி வைத்தான் இந்த அடிப்படையில் இறுதித்தூதராக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸலம் அவர்களை தேர்வு செய்தான். எனவே நபியவர்களினதும் அவர்களின் சமூகத்தின் மொழியும் அறபாக இருந்தது ஆகையால் அவர்களின் மொழியான அறபு மொழியில் அல்குர்ஆனை அல்லாஹ் இறக்கினான். அதனை மறுமை நாள் வரையில் எந்த திரிபுமின்றி பாதுகப்பான். இதே போல் அல்லாஹ் ஈஸா அலை அவர்களின் வேதநூலின் மொழியாக அராமிக் மொழியை தெரிவு செய்தான்.
''நாம் எந்தத் தூதரையும் அவர் தனது சமூகத்திற்கு தெளிவு படுத்துவதற்கு அவர்களது மொழியிலேயே தவிர அனுப்பவில்லை''. (இப்ராஹீம் : 4). تقدم