படைப்பாளன் உள்ளான் என்பதற்கான சான்றுகள் எவை?

படைப்பாளனை நம்புவது என்பது எந்தப் பொருட்களும் எவ்விதக்காரணமுமின்றி தோற்றம் பெற முடியாது (காரணமின்றி காரியமில்லை) என்ற அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. உயிரினங்களால் நிரம்பியிருக்கின்ற இம்மாபெரும் பிரபஞ்சமும் அதில் உள்ள உயிரினங்களும் கண்ணுக்குப் புலனாகா (தொட்டுணர முடியா) உணர்வைக் கொண்டுள்ளன என்பதையும் சடப்பொருளல்லாத கணிதவியல் கோட்பாட்டு விதிகளுக்கு உட்படுகின்றன என்பதைக் குறிப்பிட தேவையில்லை. வரையறுக்கப்பட்ட பொருளான பிரபஞ்சத்தின் இருப்பை விளக்குவதற்கு, நமக்கு ஒரு தனியான ஆதாரம் தேவைபடுகிறது.

தற்செயல் நிகழ்வே பிரபஞ்சத்தை உருவாக்கியது என்று கூறுவதற்கு எவ்வித சாத்தியமும் கிடையாது. ஏனெனில் தற்செயல் நிகழ்வு என்பது ஒரு முதன்மைக் காரணம் அல்ல, மாறாக ஒரு இரண்டாம் நிலை முடிவாகும். அதாவது ஒரு விடயம் திடீரென நிகழ்வதற்கு அடிப்படைக் கூறுகளான (காலம், இடம், பொருள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் தேவையும்) அதற்குரிய காரணிகளும் இருப்பது அவசியமாகும். 'தற்செயல்' என்ற வார்த்தையை எதையும் விளக்குவதற்கோ பொருள்கோடல் செய்யவோ பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது அர்த்தமற்ற வார்த்தையாகும்.

உதாரணத்திற்கு, ஒரு நபர் தனது அறைக்குள் செல்கிறார் அங்கே யன்னல் கண்ணாடி உடைந்திருப்பதைக் கண்கிறார், உடனே அவர் யன்னல் கண்ணாடியை உடைத்தது யார் என்று தனது குடும்பத்தினரைக் கேட்க அதற்கு, அவர்கள் இது தானாக உடைந்து விட்டது என்று பதில் அளித்தால் அந்தப்பதில் தவறானது. ஏனென்றால் யன்னல் எப்படி உடைந்தது என்று அவர் கேட்கவில்லை, மாறாக யன்னலை உடைத்தது யார் என்றே கேட்டார். தற்செயல் என்பது ஒரு செயலின் பண்பே தவிர அச்செயலைச்செய்தவர் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குரிய சரியான பதில் இவ்வாறு அமைதல் வேண்டும். அதாவது கண்ணாடியை இன்னார் உடைத்தார் என்று கூறிவிட்டு. பின்னர் அதனை உடைத்தவர் தவறி தற்செயலாக உடைத்தார் அல்லது வேண்டுமென்றே உடைத்தார் என்று தெளிவு படுத்த வேண்டும். இந்நிலை இப்பிரபஞ்சம், உயிரினங்கள் அனைதிற்க்கும் பொருந்தும்.

பிரபஞ்சத்தையும் உயிரினங்களையும் உருவாக்கியது யார்? என்று நாம் கேட்டால், அவை தற்செயலாக உருவானது என்று சிலர் பதிலளித்தால், இங்கு அந்தப் பதில் தவறானது. ஏனென்றால் இப்பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்று நாம் கேட்கவில்லை, மாறாக பிரபஞ்சத்தை உருவாக்கியவர் யார்? என்றே கேட்டோம். அதன்படி, தற்செயல் நிகழ்வு என்பது ஒரு கர்த்தாவையோ அல்லது பிரபஞ்சத்தின் படைப்பாளியையோ குறிக்காது என்பது வெளிப்படையாகும்

மேலும், இப்பிரபஞ்சத்தின் படைப்பாளன் இதனை -இப்பிரபஞ்சத்தை- தற்செயலாகப் படைத்தானா? அல்லது ஒரு இலக்கோடு படைத்தானா? எனும் இன்னொரு கேள்வி இங்கே எழுகிறது. உண்மையில் குறித்த செயலும் அதன் விளைவுகளுமே இதற்கான பதிலை எமக்குத் தர வேண்டும்.

மீண்டும் நாம் யன்னலின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், ஒரு நபர் தனது அறைக்குள் செல்கிறார், அங்கே யன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு தனது குடும்பத்தவர்களிடம் இதனை உடைத்தது யார்? எனக் கேட்டதற்கு அவர்கள் இன்னார் தற்செயலாக உடைத்துவிட்டார் என பதில் கூறுவார்களெனில் அப்பதில் ஏற்றுக்கொள்ளத்தக்கதும் பகுத்தறிவுரீதியானதுமாகும். ஏனெனில் கண்ணாடி உடைவது என்பது தற்செயலாக நிகழ முடியும். என்றாலும் அதே நபர் மறுநாள் அந்த அறையினுல் சென்று பார்த்த போது உடைந்த யன்னல் கண்ணாடி திருத்தப்பட்டு அதே இடத்தில் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு தனது குடும்பத்தாரிடம் இதனை திருத்தியவர் யார் என வினவ, அதற்கு அவர்கள் ஒருவர் தற்செயலாக வந்து அதனைத் திருத்தினார் எனப் பதில் கூறினால் அப்பதில் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். காரணம் பகுத்தறிவு ரீதியாக சாத்தியமற்ற விடயமாகும். ஏனெனில், கண்ணாடியை திருத்துதல் ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. மாறாக அது ஒரு ஒழுங்குமுறையிலமைந்த செயலாகும். அதற்கென்று சில வரைமுறைகள் காணப்படுகின்றன. அதாவது இத்திருத்தத்தை மேற்கொள்பவர் முதலாவதாக உடைந்து சிதைவுற்ற கண்ணாடியை அகற்றி விட்டு அதன் ஓரப்பகுதியை சுத்தம் செய்து பின் ஓர் விளிம்புகளுக்கு (சட்டத்திற்கு) ஏற்ற துள்ளியமான அளவுகளில் புதிய கண்ணாடியை வெட்டி பின் கண்ணாடியை குறித்த (விளிம்பினுள்) சட்டத்தினுள் இட்டுப் பொருத்த வேண்டும். பின் அதனை உரிய இடத்தில் இணைத்து விடல் வேண்டும். இந்த செயல்கள் யாவும் தற்செயலாக இடம்பெற முடியாது. மாறாக ஒரு திட்டத்துடனே நடந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது!. பகுத்தறிவு விதி ஒன்று உண்டு. அதாவது ஒரு செயலானது தற்செயலாக இருந்தால் அது எவ்வித சட்ட ஒழுங்கிற்குள்ளும் உட்படமாட்டாது. அது ஒரு தற்செயல் நிகழ்வாகவே கொள்ளப்படும். ஆனால் ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்த முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட செயல், ஒரு ஒழுங்கமைப்பின் முடிவாக நடந்த செயல் ஒரு போதும் தற்செயல் நிகழ்வாக இருக்க முடியாது. மாறாக அது ஒரு திட்டமிடப்பட்ட இலக்கை மையாமக்கொண்ட ஒரு நிகழ்வாக காணப்படும்.

இதனடிப்படையில் இப்பிரபஞ்சத்தையும், படைப்புகளையும் சற்று அவதானித்தால் அவை நேர்த்தியான ஒழுங்கில் உருவாக்கப்பட்டுள்ளடதுடன் மிகவும் துல்லியமான விதிகளுக்குட்பட்டு இயங்கிக்கொண்டிருப்பதை எம்மால் கண்டு கொள்ளலாம். இதானல்தான் இந்த பிரபஞ்சமும் அதில் உள்ளவைகளும் தற்செயலாக தோன்றியது என கொள்வது பகுத்தறிவுரீதியாக சாத்தியமற்ற ஒன்றாகும். மாறாக, இவைகள் ஓர் உயர் நோக்கத்தோடும் திட்டத்துடனும் படைக்கப்பட்டுள்ளது என்பதுவே உண்மையாகும். ஆக இந்த வகையில் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய விவகாரத்தில் தற்செயல் நிகழ்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. [மத நம்பிக்கையின்மை (சமயமின்மை) மற்றும் நாத்திக வாதத்திற்கு எதிரான யகீன் செனலின் விமர்சனத்தை பின்வரும் இணைப்பில் பார்க்கவும். https://www.youtube.com/watch?v=HHASgETgqx] تقدم

மேலும் படைப்பாளனின் இருப்பை உறுதிப்படுத்தும் சில ஆதாரங்களை சுருக்கமாக உற்று நோக்குவோம் :

1- படைத்தல் மற்றும் உருவாக்குதல் எனும் சான்று.

அதாவது இப்பிரபஞ்சமானது இல்லாமையிலிருந்து தோன்றியது என்பது படைப்பாளனான இறைவன் ஒருவனின் இருப்பை தெளிவாக அறிவித்து நிற்கிறது.

"நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு (சிந்தனையுடையோருக்கு) பல அத்தாட்சிகள் இருக்கின்றன". (ஆல இம்ரான் : 190). تقدم

2- இன்றியமையாமை.எனும் ஆதாரம்

எல்லாவற்றிற்கும் ஒரு மூலம் உண்டு என்று நாம் கூறினால், அந்த குறிப்பிட்ட மூல அம்சத்திற்கு இன்னொரு மூல அடிப்படை இருப்பது இன்றியமையாத அவசியமான விடயமாகும். இவ்வாறு ஒவ்வொரு மூல அம்சத்தினதும் சங்கிலித் தொடர் நீண்டு சென்றால், தத்துவரீதியாக ஒன்றின் ஆரம்பத்திற்கு அல்லது ஒன்றின் முடிவுக்கு சென்றடைவோம். இவ்வாறு சென்றடையும் நிலையில் எவ்வித அடிப்படையும் இல்லாத ஒரு மூலத்திற்கு சென்றடைவது அவசியமாகிறது. அதனையே நாம் மூல காரணி – அல்லது அடிப்படைக் காரணி- என்றழைக்கிறோம். இது அடிப்படை நிகழ்வு என்பதிலிருந்து வித்தியாசப்படுகிறது. எடுத்துக்காட்டாக பெருவெடிப்புக் கொள்கையானது இப்பிரபஞ்ச தோற்றத்தின் அடிப்படை நிகழ்வாகும். இந்நிகழ்வுக்கு மூல காரண கர்த்தாவாக படைப்பாளனே இருந்தான்.

3- இப்பிரபஞ்சத்தின் துல்லியமான ஒழுங்கமைப்பும், சீரமைப்பும் :

அதாவது இந்த பிரபஞ்சமானது மிகத்துள்ளியமாக நிர்மாணிக்கப்பட்டு சீரான விதிகளுக்குட்பட்டு இயங்குவது படைப்பளான் இறைவனின் இருப்புக்கான ஆதாரமாக அமைந்துள்ளது.

"அவனே ஏழு வானங்களையும் தட்டுத் தட்டாகப் படைத்தான். மகா கருணையாளனான அவனின் படைப்பில் நீ எவ்விதக் குறைபாட்டையும் காணமாட்டீர். பார்வையை மீட்டிப்பார், (அதில்) பிளவுகளை நீ காண்கிறாயா?" (அல் முல்க் : 3). تقدم

"நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் குறிப்பிட்ட விதிமுறையின் படியே படைத்துள்ளோம்". (அல் கமர் : 49). تقدم

4. அவதானம் எனும் சான்று

இப்பிரபஞ்சமானது மனித உருவாக்கத்திற்கு முற்றிலும் பொருத்தமாக நிர்மாணிக்கப்பட்டமை முக்கிய அம்சமாகும். இந்த ஆதாரமானது படைப்பாளன் பெற்றுள்ள அழகுப் பண்புகளையும் இறை கருணையையும் சுட்டிக்காட்டுகிறது.

"அல்லாஹ்தான் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தான். அவனே வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் கனிவகைகளை உங்களுக்கு உணவாக வெளிப்படுத்தினான். அவனது கட்டளைப்பிரகாரம் கடலில் செல்வதற்கு கப்பல்களை அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும் அவனே உங்களுக்கு ஆறுகளையும் வசப்படுத்தித் தந்தான்". (இப்ராஹீம் :32). تقدم

5- வசப்படுத்தல் மற்றும் திட்டமிடல் எனும் சான்று.

இது இறை வல்லமை மற்றும் இறை மகத்துவம் போன்ற பண்புகளுடன் தொடர்பான விடயமாகும்.

"(மனிதர்களே!) கால் நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்தான். அவற்றில் குளிரிலிருந்து பாதுகாப்பும்,மற்றும் பல பயன்களும் இருக்கின்றன. இன்னும் அவற்றிலிருந்து நீங்கள் உண்ணவும் செய்கிறீர்கள்". நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும்பொழுதும், (மேய்ச்சலுக்காக) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவற்றில் உங்களுக்கு அழகுமிருக்கிறது. பெரும் கஷ்டத்துடனேயன்றி உங்களால் சென்றடைய முடியாத ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்கள் இரட்சகன் பெரும் கருணையாளன். நிகரற்ற அன்புடையவன். குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் அவற்றில் சவாரி செய்வதற்காகவும் இன்னும் அலங்காரமாகவும், (அவனே படைத்தான்) மேலும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்". (அந்நஹ்ல் :5-6). تقدم

6- பிரத்தியேகத் தேர்வு எனும் சான்று.

இப்பிரபஞ்சத்தில் நாம் காணும் பொருட்கள் பல்வேறு வடிவங்களில் அமைப்புகளில் இருந்திருக்க முடியும் என்றாலும் அல்லாஹ் அவற்றில் மிகச்சிறந்த வடிவை அமைப்பைத் தேர்வுசெய்தான்.

"நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் பொழிய வைக்கிறீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? நாம் நாடியிருந்தால் அதை உவர்ப்பானதாக மாற்றியிருப்போம், எனவே நீங்கள் நன்றி செலுத்தமாட்டீர்களா?". (அல் வாகிஆ : 68-70). تقدم

"(நபியே) உமது இரட்சகன் நிழலை எவ்வாறு நீட்டுகிறான் என நீர் பார்க்கவில்லை?அவன் நாடியிருந்தால் அதனை நிலையானதாக ஆக்கியிருப்பான், பின்னர் அதன் மீது சூரியனை ஆதாரமாக நாம் ஆக்கியிருப்போம்".(அல் புர்கான்: 45). تقدم

இப்பிரபஞ்சம் படைக்கப்பட்ட முறையையும் அதன் இருப்பையும் விளக்கும் சில சாத்தியப்பாடுகள் பற்றி அல்குர்ஆன் விவரிக்கிறது : The Divine Reality: God, Islam & The Mirage of Atheism.Hamza Andreas Tzortzi

"அவர்கள் எப்பொருளுமின்றி படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் படைக்கூடியவர்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? மாறாக, (இவற்றை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை. அல்லது உமது இரட்சகனின் பொக்கிஷக் கருவூலங்கள் அவர்களிடம் இருக்கின்றனவா? அல்லது அவற்றின் மீது அவர்களே ஆதிக்கம் செலுத்துபவர்களா?". (அத்தூர் : 35-37). تقدم

அவர்கள் எப்பொருளுமின்றி படைக்கப்பட்டனரா? :

இது எம்மைச்சூழ காணப்படுகின்ற இயற்கை கோட்பாடுகளில் -விதிகளில் -அதிகமானவற்றுடன் முரண்படுவதை காணலாம். ஒரு சாதாரண எடுத்துக்காட்டை –உதாரணத்தை- பார்ப்போம். எகிப்தில் காணப்படும் பிரமாண்டமான பிரமிட்டுகள் குறித்து அவை இயற்கையாக அமைந்தவை என்று நாம் கூறுவோமாக இருந்தால் இப்பிரபஞ்சத்தின் தோற்றம் தற்செயலானது என்ற சாத்தியப்பாட்டை உடைத்தெரிவதற்கு இதுவொன்றே போதுமானதாகும்.

அவரகள் படைக்கின்றவர்களா?:

என்ற வசனத்தின் அடியாக சுயமாகப் படைத்துக்கொள்ளல் -என்பதிலிருந்து இப்பிரபஞ்சம் தன்னைத்தானே படைக்க முடிந்ததா?! 'படைப்பு' என்ற மரபுச் சொல்லானது அப்பொருள் இவ்வண்டத்தில் ஏற்கனவே இல்லாதிருந்து, பிறகு தோன்றியது என்பைதத்தான் சுட்டிக்காட்டுகிறது! சுயமாக படைத்தல் என்பது மெய்யியல் மற்றும் விஞ்ஞான ரீதியாக அசாத்தியமான ஒரு விடயமாகும். சுயமாக படைத்துக் கொள்ளல் என்பது, ஏலவே ஒரு பொருள் இருக்கவும் செய்தது, குறித்த நேரத்தில் அப்பொருள் இருக்கவுமில்லை என்ற முடிவைத் தரும். இது சாத்தியமற்ற விடயமாகும். எனவே, மனிதன் தன்னைப் படைத்துக்கொண்டான் என்ற கூற்றானது அவன் தன்னைப் படைத்துக்கொள்ள முன்பே அவன் இருந்துள்ளான் என்பது அர்த்தமாகி விடுகின்றது.!

ஓர் உயிர் கலத்தை மாத்திரம் கொண்ட படைப்பபுகளில் சுய உருவாக்கம் சாத்தியமானது என்பதை சில குழப்பவாதிகள் உறுதிப்படுத்துகிறார்கள். இவ்வாறான ஒரு விடயத்தை விவாதத்திற்கு எடுத்து கொள்வதற்கு, அடிப்படையில் முதலாவது ஓர் உயிர் கலம் காணப்பட்டதா? என்பதை பார்க்க வேண்டும். அவ்வாறு இருந்ததாக இக்கூற்றை வைத்துக் கொண்டாலும் இது சுயமான ஒரு படைப்பு அல்ல மாறாக இனப்பெருக்கத்திற்கான ஒரு முறையாகவே கொள்ள வேண்டும். அதாவது உயிர் அனுவிலிருந்து தோன்றி குறிப்பிட்ட பரம்பரை அழகை அந்த உயிர் அணு பெற்றிருக்கிறது என்பதாகும். அதாவது இது (பாலினச் சேர்க்கையற்ற இனப்பெருக்கம்) இனப்பெருக்கத்தின் ஒரு முறையை குறிக்கிறது, இதில் சந்ததிகள் ஒற்றை உயிரினத்திலிருந்து தோற்றம் பெற்று, அந்த பெற்றோரின் மரபணுப் பொருளை மட்டுமே பெறுகின்றன.

உன்னை பெற்றெடுத்தது யார்? என்று கேட்கும் போது அதிகமான மக்கள் எனது பெற்றோர் எனச் சாதாரணமாக பதிலளிப்பார்கள். அதாவது இவ்வுலகில் நான் இருப்பதற்கு அவர்களே காரணமாக இருந்தனர் என்பது இதன் கருத்தாகும். மேலே குறிப்பிடப்பட்ட கேள்விக்கான பதில் மிகச்சுருக்கமானதும் இச்சிக்கிலிருந்து வெளியேருவதற்கான வழி என்பதும் மிகத் தெளிவானது. மனிதன் தனது இயல்பில் எப்போதும் ஆழமாக சிந்திப்பதற்கோ கடுமையாக முயற்சிப்பதற்கோ விரும்புவதில்லை. அவனைப் பொருத்தவரை தனது பெற்றோர் இறந்து விடுவர் என்பதையும், இதே பதிலை தனக்கு பின் வரும் சந்ததிகளும் கூறுவர் என்பதையும் அவன் தெரிந்து வைத்துள்ளான். அது மாத்திரமின்றி தனது குழந்தையை படைப்பதற்கான எவ்வித அதிகாரமோ, சக்தியோ தன்னிடம் கிடையாது என்பதையும் அவன் அறிந்துள்ளான். ஆகவே உண்மையான கேள்வி மனிதப் பரம்பரையை உருவாக்கியவன் -தோற்றுவித்தவன் - யார்? என்று அமைய வேண்டும்.

அவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? :

அதிகாரமும் படைப்பாற்றலும் உள்ள ஒருவனைத் தவிர வானங்கள் மற்றும் பூமியை படைத்ததாக வாதிடக்கூடிய எவரும் கிடையாது. மனித குலத்திற்கு தனது தூதுவர்களை அனுப்புவதன் மூலம் இப்பேருண்மையை வெளிப்படுத்தியவன் அவனே! அப்பேருண்மை என்ன? மேற்குறிப்பிட்ட அதிகாரம் படைத்தவன்தான் படைப்பாளனும் முன்மாதிரியின்றி ஒன்றை தோற்றுவிப்வனும்; வானங்கள் மற்றும் பூமிக்கிடையே உள்ளவற்றின் சொந்தக்காரனுமாவான். அவனுக்கு நிகரானவர் எவரும் இல்லை. அவனுக்கு எந்த சந்ததியும் இல்லை.

"(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் உரிமை இல்லை. மேலும், அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. (அவற்றை படைப்பதில்) அவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை". (ஸபஃ : 22). تقدم

இங்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம். பொது இடத்தில் ஒரு பை கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பையின் சொந்தக்காரர் என வாதிட ஒரே ஒருவரைத் தவிர யாரும் முன்வரவில்லை. அந்தப்பையின் அடையாளங்களையும், அதனுள் இருக்கும் பொருட்களின விபரங்ளையும் அவர் குறிப்பிட்டால் வேறு ஒரு நபர் அப்பை தனக்குரியது என குறிப்பிடாதவரை அந்தப் பையின் அடையாளங்களையும் விபரங்களையும் கூறிய அந்நபருக்குச் சொந்தமானதாக மாறிவிடுகிறது. இது மனித சட்டங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும்.

படைப்பாளனின் இருப்பு :

மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் எந்த வகையிலும் மறுக்க முடியாத ஒரு படைப்பாளனின் இருப்பை நோக்கி எம்மை நகர்த்திச் செல்கிறது. ஆச்சரியமான விடயமென்னவெனில் மனிதன் எப்போதும் இந்த சாத்தியப்பாடுகளை தாண்டி பல கற்பிதங்களை உருவாக்குதற்கு தொடர்ந்தும் முயற்சித்துக்கொண்டிருக்கிறான். அந்தக் கற்பிதங்கள் யாவும் வெறும் கற்பனைகளே அதனை உண்மைப்படுத்தவோ அவன் இருப்பை உறுதிப்படுத்தவோ அதனால் முடிவதில்லை. இந்த விவகாரத்தில், அறிவியல் ரீதியான ஓர் ஆழமான கண்ணோட்டத்தின் ஊடாக உண்மையான நடு நிலையான ஒரு நிலைப்பாட்டை கொண்டால் படைப்பாளனான உண்மை இறைவனை சூழ்ந்து அறிய முடியாது என்ற யதார்த்தத்திற்கே எம்மால் வர முடியும். அவ்வாறான ஒருவனே ஒட்டு மொத்த இப்பிரபஞ்சத்தைப் படைத்தவன். ஆகவே அவனின் மெய்நிலையானது மனித அறிவிற்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டதாகும். கண்ணுக்குத் தெரியாத இந்த சக்தியின் இருப்பை உறுதிப்படுத்துவது எளிதானது அல்ல என்று கருதுவது தர்க்கரீதியானதே, இந்த சக்தி மனித அறிவுக்கு ஏற்ற விதத்தில் அதற்குரிய முறையில் தன்னை அறிமுகப்படுத்துவதினூடாக இந்த கண்ணுக்கு தெரியாத சக்தி இருப்பது உண்மை என்று மனிதன் உறுதியாக நம்ப வழிவகுக்க வேண்டும். இறுதியாக இங்கு குறிப்பிட்ட இந்த சாத்தியப்பாட்டை விட்டு ஒரு போதும் விலகிவிட முடியாது. இறுதியாக எஞ்சியிருப்பது இப்பிரபஞ்ச மர்மத்தின் விளக்கமே!

"ஆகவே அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான், அவனிடமிருந்து உங்களுக்குக் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவ(னாக இருக்கிறே)ன்".(அத்தாரியாத் : 50). تقدم

நாம் நித்தியமான சுகத்தையும் பேற்றையும், நிரந்தர தங்குமிடத்தையும் தேடுவோராக இருந்தால் மேற்குறிப்பிட்ட படைப்பாளனும் முன்மாதிரியின்றி உருவாக்குபவனுமான உண்மை சிருஷ்டிகர்த்தாவின் இருப்பை ஏற்று அடிபணிந்து விசுவாசம் கொள்வது இன்றியமையாத விடயாமாகும்.

PDF