முஸ்லிமல்லாதவரைக் குறிக்க 'காஃபிர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மற்ற தரப்பினரை அவமரியாதை செய்வதாக அமையுமா?

அவ்வாறு அமையாது. உதாரணத்திற்கு ஒரு முஸ்லீம் திரித்துவக் கோட்பாட்டில் நம்பிக்கை கொள்ளாததால்; அவர் இறைராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார் என்ற அடிப்படையில் அவரை ஒரு காஃபிர் -கிறிஸ்துவத்தை ஏற்காதவர்- என்று கிறிஸ்தவர் கருதுகிறார்களே! இதே போன்றுதான் இஸ்லாத்தை வாழ்க்கைநெறியாக ஏற்காதவர் யாராயினும் அவர்களுக்கு அரபு மொழியில் காபிர் என்ற வார்தை பயன்படுத்தப்படுகிறது. 'குப்ர்' என்ற வார்த்தைக்கு உண்மையை அல்லது சத்தியத்தை மறுப்பது என்று பொருள், முஸ்லீம்களுக்கு உண்மை, சத்தியம் என்பது ஏகத்துவமாகும். கிறிஸ்தவர்களைப் பொருத்தவரை அவர்களது மதத்தின் அடிப்படையில் சத்தியம் என்பது திரித்துவமாகும்.

PDF