அதிகமானோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "முழுமையான உண்மை இல்லை" என்ற கூற்றானது உண்மையில் எது சரி எது தவறு என்பது பற்றிய நம்பிக்கையாகும். அவர்கள் அதை மற்றவர்கள் மீது திணிக்க முயற்சி செய்கிறார்கள். இதனால் அவர்கள் நடத்தைக்கான அளவுகோளொன்றை கட்டமைத்து அனைவரும் அதைக் கடைப்பிடித்தொழுக வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் அவர்கள் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்று நம்பிய விடயத்தை மீறுவதுடன் இது ஒரு சுய-முரண்பாடான நிலையாக கொள்ளப்படுகிறது.
பொது உண்மை அல்லது யாதார்த்தம் இருப்பதற்கான ஆதாரம் பின்வருமாறு :
மனசாட்சி (உள்ளகரீதியான கட்டுப்பாடு) : மனித நடத்தையை கட்டுப்படுத்தும் தார்மீக வழிகாட்டுதல்களின் தொகுப்பான மனசாட்சி, உலகம் ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்படுகிறது என்பதற்கும், அங்கே சரியானவையும் மற்றும் தவறானவையும் உண்டு என்பதற்குமான சான்றாகும். இந்த நெறிமுறைக் கோட்பாடுகள் சர்ச்சைக்கு உட்படாத அல்லது பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படாத சமூகக் கடமைகளாகும். அவை சமூகத்தின் உள்ளடக்கத்திற்கும் மற்றும் கருத்துக்கும் இன்றியமையாத சமூக யதார்த்தங்களாகும். உதாரணமாக, பெற்றோரை மதிக்காமை அல்லது திருடுவது என்பது உலகளவில் கண்டிக்கத்தக்க நடத்தையாக பார்க்கப்படுகிறது. அது உண்மையான நல்ல விடயம் என்றோ மரியாதைமிக்க விடயம் என்றோ நியாயப்படுத்த முடியாது. பொதுவாக இது எல்லாக் காலத்திற்கும் அனைத்து கலாச்சாரங்ளுக்கும் பொதுவாகப் பொருந்தக் கூடிய விடயமாகும்.
அறிவியல்: (அறிவியல்) என்பது விடயங்களை அதன் யதார்த்த நிலையில் புரிந்து கொள்ளுதலாகும். அதுவே அறிவும் திட்டவட்டமான நம்பிக்கையும் ஆகும். அதனால், அறிவியல் என்பது உலகில் உள்ள புறநிலை உண்மைகளைக் கண்டறிந்து நிரூபிக்கக்கூடியவற்றில் தங்கியுள்ளது. நிலையான உண்மைகள் இல்லை எனில் எதைத்தான் ஆய்வு செய்ய முடியும்? ஒருவருக்கு அறிவியல் முடிவுகள் உண்மையா என்பதை எப்படி அறிய முடியும்? உண்மையில், அறிவியலின் அடிப்படைகளும் விதிகளும் பொதுவான யதாரத்தங்களின் மீதே அமைக்கப்பட்டுள்ளன.
மதம் : உலகின் அனைத்து மதங்களும் வாழ்க்கைக்கு ஒரு தோற்றப்பாடு, அர்த்தம் மற்றும் வறைவிளக்கனத்தை வழங்குகின்றன. மனிதனின் மிகவும் ஆழமான கேள்விகளுக்கான பதில்களை பெற்றுக்கொள்வதற்கான ஆழ்ந்த விருப்பத்தின் விளைவாக இது உருவாகிறது. மதத்தின் மூலம், மனிதர்கள் தங்கள் தோற்றம், முடிவு மற்றும் உள் அமைதி ஆகியவற்றை தேடிக்கொள்ள முயல்கிறார்கள். இவற்றிற்கான பதில்களைப் பெறுவதன் மூலம் மட்டுமே அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். மனிதர்கள் பரிணாம வளர்ச்சியடைந்த விலங்குகளை விட மேலானவன் என்பதற்கும் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த நோக்கம் இருப்பதற்கும் மதத்தின் இருப்பே சான்றாகும். எம்மை தனது ஆழ்ந்த நுட்பத்தின் மூலம் படைத்து, அவனை அறிந்து கொள்வதற்கான வேட்கையையும் விதைத்திருப்பதும் படைப்பாளன் ஒருவனின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான மிகப்பெரும் சான்றாக அமைந்துள்ளது. உண்மையில், ஒரு படைப்பாளனின் இருப்பே மொத்த உண்மைக்கான ஒரு அளவுகோளாகும்.
தர்க்கம் : எல்லா மனிதர்களுக்கும் வரையறுக்கப்பட்ட அறிவு மற்றும் வரையறுக்கப்பட்ட அறிவாற்றல் திறன்கள் இருப்பதால், முழுமையான எதிர்மறை கருத்துக்களை உருவாக்குவது தர்க்கரீதியாக சாத்தியமற்றது. ஒரு நபர் தர்க்கரீதியாக, 'கடவுள் இல்லை' என்று சொல்ல முடியாது, ஏனென்றால் ஒரு நபர் அத்தகைய கருத்துக்களை வெளியிடுவதற்கு, அவர் முழு பிரபஞ்சம் பற்றி ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இது சாத்தியமற்றது என்பதால், ஒரு நபர் தர்க்கரீதியாக கூறக்கூடியது என்னவென்றால், 'என்னிடம் உள்ள வரையறுக்கப்பட்ட அறிவின் அடிப்படையில், கடவுள் இருப்பதை நான் நம்பமாட்டேன், என்பதாகும்.
இணக்கத்தன்மை : பொதுவான உண்மையைத் மறுப்பதானது
நடைமுறை, நமது மனசாட்சி, மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் போன்றவைகளுடனான முரண்பாடுகளுக்கு அது வழிவகுத்துவிடுகிறது.
இருக்கும் எதிலும் முழுமையான சரி அல்லது தவறு இல்லாதது தெளிவான தரநிலைகளின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. உதாரணமாக, போக்குவரத்து விதிகளைப் புறக்கணிப்பதே சரியானது என்று நான் கருதினால், அது என்னைச் சுற்றியுள்ளவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், இதன் விளைவாக மனிதர்களிடையே சரியான மற்றும் தவறான தரநிலைகள் முரண்படுகின்றன. இதன் விளைவாக, எதைப்பற்றியுமான உறுதியை உருவாக்கிட இயலாது.
மனிதன் தான் விரும்பிய குற்றங்களை செய்வதற்கான சுதந்திரத்தை பெற்றுக்கொள்வதானது,
சட்டங்களை இயற்றுதல் மற்றும் நீதியை நிலைநாட்டல் போன்ற விடயங்களை அசாத்தியப்படுத்திவிடும்.
ஆகவே கட்டற்ற சுதந்திரத்தைப்பெற்ற மனிதன் ஒரு அசிங்கமான மனிதனாக மாறிவிடுகிறான். இவ்வாறான சுந்திரத்தித்தை அனுபவிப்பதற்கு அவனாலேயே ஒரு போதும் முடியாது என்பதே நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அத்துடன் பிழையான நடத்தை என்பது இவ்வுலகத்தார் எல்லோரும் சரியெனக் கண்டாலும் அது பிழையானதே! பண்பாடுகள் குறித்த ஒரே உண்மையும் சரியான விடயமும் என்னவென்றால் அது சார்பியமற்றது, அவை ஒரு போதும் கால, இடம் போன்றவற்றால் மாற்றம்பெறாத அம்சமாகும்.
கட்டமைப்பு (ஓழுங்கு) : பொதுவான யதார்த்தமின்மை அராஜகத்திற்கு வழிவகுக்கிறது,
எடுத்துக்காட்டாக, புவியீர்ப்பு விதி ஒரு அறிவியல் உண்மையாக இல்லாதிருந்தால் நாம் ஓரிடத்தில் நிற்றல் மற்றும் அமர்தல் ஆகிய விடயங்களை புதிதாக நாம் இயங்கும் வரையில் அதனை நாம் ஒரு போதும் நம்ப மாட்டோம். அதே போல் இலக்கம் ஒன்றை இலக்கம் ஒன்றுடன் கூட்டும் போது வரும் கூட்டுத்தொகை இரண்டு என்று நாங்கள் நம்ப மாட்டோம். இதனால் ஒரு நாகரிகத்தில் ஏற்படும் விளைவு மிகவும் மோசமாக இருப்பதுடன், அறிவியல் மற்றும் இயற்பியல் விதிகள் முக்கியமற்றதாக மாறிவிடும், அது மாத்திரமின்றி மக்களின் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகள் சாத்தியமற்றதாகவும் மாறியிருக்கும்.