மனிதனின் இச்சைக்கேட்ப பாலியல் பலாத்காரம் தீயதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது நியாயமற்றது. மாறாக, பலாத்காரத்தில் மனித உரிமை மீறல் உள்ளது என்பதும், அவனது மதிப்பு மற்றும் சுதந்திரம் மீறப்படுவதும் தெளிவாகிறது. இதுவே கற்பழிப்பு தீமை என்பதற்கான ஆதாரமாகும். அதே போல் ஓரினச்சேர்க்கை. இது பிரபஞ்ச விதிமுறைகளை மீறும் செயற்பாடு மாத்திரமன்றி; முறையான திருமணத்திற்கு அப்பாட்பட்ட தொடர்புமாகும். முழு உலகமும் இது செல்லுபடியற்றது என முடிவு செய்தாலும் இதுவே சரியான முறையாகும். அதாவது முறையான ஆண் பெண் திருமணமே சரியான ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாகும். மனித குலம் அனைவரும் ஓரினச்சேர்கையானது சரி என்பதை ஏற்றுக்கொண்டாலும் அது பட்டவர்த்தனமான தவறாகும் என்பதை ஏற்றாக வேண்டும்.
அதேபோல் வரலாற்றின், ஒவ்வொரு காலமும் அவரவர் கண்ணோட்டத்திற்கும் பார்வைக்கும் வாசிப்புக்கேட்ப எழுதப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டால் ஒவ்வொருவரினதும் மதிப்பீடும் அவர் முக்கியம் எனக் கருதிய ஏனைய காலகட்டத்தின் மதிப்பீட்டிலிருந்து வேறுபடுகிறது. ஆனால் இவ்வாறான பல வரலாற்று நிகழ்வுகள் குறித்த மதீப்பீடானது வரலாற்று சார்பியத்தை உருவாக்கிடமாட்டாது. ஏனெனில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வரலாற்று நிகழ்வுகளுக்கு ஒரு யதார்த்தம் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது என்பதே பேருண்மையாகும். மனிதனால் உருவாக்கப்பட்ட வரலாற்றியலானது அதன் நிகழ்வுகள் மன விருப்பத்திற்கேட்ப அமையப்பெற்றிருப்பதால் உருக்குழைவு மற்றும் துல்லியமற்ற தன்மைக்கு உட்படக்கூடியவை. அவை உலக இரட்சகனான அல்லாஹ்வின் வரலாற்றியலைப் போன்று இருக்காது, அல்லாஹ்வின் வராற்று குறிப்பானது முக்காலங்கள் பற்றிய துல்லியமான விடயங்களை கொண்டதாக இருக்கும்.