மக்களிடையே பல்வேறு கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகள் இருப்பது மிகச்சரியான உண்மை ஒன்று இல்லை என்பதற்கு அர்த்தமல்ல. உதாரணத்திற்கு, கருப்பு கார் வைத்திருக்கும் ஒருவர் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனம் குறித்து பலரின் கருத்துக்கள் மற்றும் யூகங்களும் வித்தியாசமானதாக இருந்தாலும், அவர் கருப்பு கார் வைத்திருக்கிறார் என்ற உண்மையை மறுப்பதிற்கில்லை. அத்துடன் முழு உலகமும் அந்த நபரின் கார் சிவப்பு நிறமானது என நம்பினாலும், அந்த நம்பிக்கை அதை சிவப்பு நிறமாக்காது என்பதே யதார்த்தமான விடயம். ஆகவே இங்கே அவரிடம் ஒரு கருப்பு கார் உள்ளது என்ற ஒரு யதார்தத்தை அனைவரும் ஏற்றாக வேண்டும்.
ஆக, ஏதாவது ஒரு குறிப்பிட்ட பொருள் குறித்து பல்வேறுவகையான வேறுபட்ட கருத்துக்களும், யூகங்கங்களும் இருந்தாலும், அக்குறிப்பிட்ட பொருள் பெற்றுள்ள ஒரே யதார்தத்தை மறுத்து விட முடியாது.
இப்பிரபஞ்சத்தின் அடிப்படை குறித்து பல்வேறுவகையான மனித கண்ணோட்டங்களும், கருத்துக்களும் இருப்பினும், கடவுளுக்கென்று மனிதர்கள் அறிந்து வைத்துள்ள தோற்றம் எதுவும் கிடையாது. அவனோ எந்த இணையோ, சந்ததியோ அற்ற ஏக படைப்பாளன் என்ற ஒரே யதார்தத்தை அவை நிராகரித்திடமாட்டாது. இந்த கருதுகோளின் அடிப்படையில் உலகம் முழுவதுமே படைப்பாளனை ஒரு மிருக வடிவிலும் அல்லது மனிதவடிவிலும் கட்டமைத்தாலும் அது யதார்தத்திற்கு அப்பால் பட்ட விடயமாகும். இதிலிருந்து அல்லாஹ் மிகவும் தூயவனாக உள்ளான்.