படைப்பாளனைப் படைத்தவன் யார்?

இக்கேள்வியானது "படைப்பாளன் படைப்பினங்களுக்கு ஒப்பானவன்" என்ற தவறான கருதுகோளின் -யூகத்தின்- விளைவாக எழுந்ந கேள்வியாகும். இக்கருதுகோளானது பகுத்தறிவு ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் நிராகரிக்கப்பட்டதாகும். அதனை பின்வருமாறு தெளிவுபடுத்திட முடியும்.

ஒரு மனிதனிடம் சிவப்பு நிறத்தின் மனம் என்ன என ஒரு எளிய வினாவை தொடுத்தால் அவனால் பதிலளிக்க முடியுமா? நிச்சயமாக, இந்த கேள்விக்கு எந்த பதிலும் இல்லை, ஏனென்றால் சிவப்பு நிறமானது நுகரப்படும் வாசனை பொருட்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படவில்லை.

உதாரணத்திற்கு தொலைக்காட்சி அல்லது குளிர்சாதனப் பெட்டி போன்றபொருளைத் தயாரிக்கும் நிறுவனம், குறித்த சாதனத்தைப் பயன்படுத்தும் முறையை விளக்கிட அறிவுறுத்தல்கள், ஒழுங்குகள் வரையரையரைகள் அடங்கிய ஒரு கையேட்டை அத்துடன் இணைக்கிறது. உற்பத்தி செய்யும் குறித்த நிறுவனம் இந்தச் சட்டங்களுக்கு உட்பட்டிருக்காத நிலையில், வேண்டப்பட்ட விதத்தில் சாதனத்தில் இருந்து பயனடைய விரும்பும் நுகர்வோர் இந்த அறிவுருத்தல்களை கட்டாயம் பின்பற்றியாக வேண்டும் இல்லாவிட்டால் குறித்த சாதனத்திலிருந்து பயனை அடையமுடியாது என்பது தெளிவான விடயமாகும்.

மேற்குறிப்பிட்ட உதாரணங்களிலிருந்து தெரிய வருவது ஒவ்வொரு காரணத்திற்கும் காரணகர்த்தா உள்ளார் என்பதாகும். ஆனால் கடவுளுக்கு கர்த்தா தேவையில்லை என்பதும் அவர் படைக்கப்படும் ஒரு பொருளுக்குள் உள்ளடக்கபடவும் மாட்டார் என்பதும் யதார்த்தமான விடயம் என்பது சாதாரணமாகவே புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா! ஆகவே கடவுளென்பவர்தான் எல்லாவற்றிற்கும் முதலாமவராகவும் அவரே அடிப்படை காரணகர்த்தாவாகவும் உள்ளார் என்பதும் புலனாகிறது. காரணக் கோட்பாடானது அல்லாஹ்வின் பிரபஞ்ச விதியாகும். என்றாலும் அல்லாஹ் நாடியதை செய்பவன் அவனுக்கே முழு வல்லமையும் பேராற்றலும் உண்டு.

PDF