மனிதன் அடிப்படை குரங்குகள் என்ற கருத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்? (அதாவது மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் என்பதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?)

இஸ்லாம் இந்தக் கருத்தை முழுமையாக மறுக்கின்றது, மனிதனை கண்ணியப்படுத்தி இந்தப்பூமியின் இறை பிரதிநிதியாக அவனை ஆக்குவதில் அகிலத்தாரின் இரட்சகன் அல்லாஹ்வின் உயரிய நோக்கை நிறைவேற்றுவதற்காக ஆதாமை ஏனைய எல்லாப் படைப்பினங்களிருந்தும் தனித்துவமாகப் படைத்து வேறுபடுத்தினான் என அல்குர்ஆன் தெளிவு படுத்துகிறது.

டார்வின்வாதிகள் படைப்பாளனை விசுவாசிக்கும் -நம்பும் - விசுவாசியை அவன் நேரில் காணாத ஒன்றை நம்புகிறான் என்பதற்காக அவனை ஒரு பிற்போக்குவாதியாக கருதுகின்றனர். ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனைப் பொருத்தவரை அவன் தனது அந்தஸ்தையும் கௌரவத்தையும் உயர்த்தி மேலோங்கச் செய்யக்கூடிய ஒன்றையே விசுவாசம் கொண்டுள்ளான். அவர்களே தனது நிலையையும் அந்தஸ்த்தையும் குறைத்து தமது நிலைகளை தாழ்த்திக்கொள்ளக்கூடிய ஒன்றை நம்புகின்றனர். இவர்களின் நம்பிக்கை எவ்வாறாக இருந்தாலும் தற்போது வாழும் குரங்குகள் மனிதனாக மாறி விருத்தியடையாதது ஏன்? என்ற கேள்வி இக்கோட்பாடு சார்ந்தோரிடம் முன்வைக்கப்படுகிறது. இதற்கான பதிலை இன்னும் அவர்களால் கூற முடியவில்லை!

இக்கோட்பாடு சில கருதுகோள்களின் தொகுப்பாகும், மேலும் இந்த கருதுகோள்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வை நேரடியாக பார்ப்பதன் மூலமும் அல்லது ஒரு குறிப்பிட்ட புறவயமான ஒன்றை குறித்து ஆழ்ந்து சிந்திப்பதன் மூலமும் நிகழ்கிறது, மேலும் இந்த கருதுகோள்களை நிரூபிப்பதற்கு அதி சிறந்த சோதனைகள் அல்லது கருதுகோளின் உண்மைத் தன்மையை சான்றாகவைத்து நேரடி அவதானிப்பும் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால்; இந்தக் கோட்பாட்டுடன் இணைந்தாக கருதப்படும் கருதுகோள்களில் ஒன்றை ஆய்வு மூலமோ அல்லது நேரடி அவதானிப்பு மூலமோ நிரூபிக்க முடியாத போது இக்கோட்பாட்டையே முழுமையாக மறுபரீசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

அறுபதுனாயிரம் (60000) ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், அந்த கோட்பாடு அர்த்தமுள்ளதாக இருக்காது. அத்துடன் இக்கோட்பாட்டாளர்களின் விதிகளின் படி நாம் அவற்றை நேரடியாகப் பார்த்து அவதானிக்காததன் காரணத்தினால் இவர்களின் இந்த வாதத்தை ஏற்பதற்கான எந்த அடிப்படையும் கிடையாது. சமீபகாலத்தில் சில பறவை இனங்களின் சொண்டுகளில் வடிவமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை பறவைகளாகவே தொடர்ந்தும் உள்ளன. என்றாலும் இந்த கோட்பாட்டின் அடிப்படையில் பறவைகள் இன்னொரு வடிவாக மாறவேண்டுமே! ஆனால் அவை அதற்கே உரிய இயல்பூக்கத்துடனே வாழ்கின்றன என்பதே உண்மையாகும். 'அத்தியாயம் 7: ஓல்லர் மற்றும் ஓம்டால்.' மோர்லேண்ட், ஜே.பி. தி கிரியேஷன் ஹைபோதெசிஸ்: சயின்டிஃபிக்

உண்மையில் மனிதனின் உருவாக்கத்தின் அடிப்படை குரங்கு அல்லது குரங்கின் பரிணாம வளர்ச்சியின் முடிவு என்ற கருத்தானது ஒருபோதும் டார்வினின் கருத்தல்ல. ஆனால்; மனிதனும் குரங்கும் பொதுவான அறியப்படாத ஒரே அடிப்படையைக் கொண்டுள்ளன. அது தற்போது "அழிந்து போன உயிர் வட்டம்" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அதன்படி இதற்கென உயிரியல் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து அது மனிதனாக மாற்றம் பெற்று விட்டது. முஸ்லிம்கள் டார்வினின் கூற்றை முழுமையாக நிராகரித்தாலும் சிலர் நம்புவதுபோல் குரங்கு மனிதனின் பாட்டன் என்று அவர் குறிப்பிடவில்லை. இத்தத்துவத்தை –கோட்பாட்டை– டார்வின் உருவாக்கினாலும் அவரிடம் இக்கோட்பாடு குறித்து பல சந்தேகங்கள் இருப்பதை அவர் தனது தோழர்களுக்கு எழுதிய கடிதங்களில் நிரூபித்துள்ளதுடன் அதற்கான வருத்தங்களையும் தெரிவுத்துள்ளார் என்பதே உண்மையாகும். ('அத்தியாயம் 7: ஓல்லர் மற்றும் ஓம்டால்.' மோர்லேண்ட், ஜே.பி. தி கிரியேஷன் ஹைபோதெசிஸ்: சயின்டிஃபிக்). - تقدم

டார்வின் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டு அதனை நிரூபித்துள்ளார். ஆனால் அவரின் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டோரே, மனிதன் விலங்கின் தோற்றம் கொண்டவன் என்ற கருத்தை அவரின் கோட்பாட்டுடன் இணைத்து பிற்காலத்தில் குறிப்பிட்டனர். இக்கருத்தை கூறியோர் அடிப்படையில் நாத்திகவதிகளே!. (டார்வினின் வாழ்க்கை வரலாறு – லன்டன் பதிப்பகம் .கோலின்ஸ் 1958 பக்கம் 92-93). உண்மையில் முஸ்லிம்களைப் பொருத்தவரை அல்லாஹ் மனித இனத்தை கண்ணியப்படுத்தி இப்பூமியின் பிரதிநிதியாக ஆக்கியுள்ளான் என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகையால் இப்பிரதிநியானவர் ஒரு விலங்கின் தோற்றத்திலோ அல்லது அதனை ஒத்த நிலையில் இருப்பதுவோ அவனுக்கு எவ்வகையிலும் பொருந்தாத விடயமாகும்.

PDF