இயற்கைத் தேர்வுக்கோட்பாடு பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது? تقدم

இயற்கைத் தேர்வுக்கோட்பாட்டை (ஒரு பகுத்தறிவற்ற இயற்பியல் செயல்முறை) என்றும் ஒரு தனித்துவமான புத்தாக்கப் படைப்பு சக்தியாகக் கருதும் சில டார்வினிஸ்டுகள், எந்தவொரு உண்மையான அனுபவ அடிப்படையும் இல்லாமல் அனைத்து கடினமான பரிணாமச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு தனித்துவம் நிறைந்த புத்தாக்க சக்தியாக கருதுகின்றனர். இதனடிப்டையில் பாக்டீரியா உயிரணுக்களின் கட்டமைப்பு மற்றும் தொழிற்பாட்டில் உள்ள வடிவமைப்பின் சிக்கலான தன்மையை அவர்கள் பின்னர் கண்டுபிடித்தனர். அவர்கள் 'ஸ்மார்ட்' பாக்டீரியா, 'நுண்ணுயிர் நுண்ணறிவு', 'முடிவுகாணுதல்-(முடிவெடுத்தல்)' மற்றும் 'சிக்கல் தீர்க்கும் பாக்டீரியா' போன்ற சொற்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதனால், பாக்டீரியா அவர்களின் புதிய கடவுளாக மாறியது. (theism a giant leap of faith Dr. Raida Jarrar).

இயற்கைத் தேர்வுக் கோட்பாடானது குறிப்பிடும் பாக்டீரியா நுண்ணறிவின் செயற்பாடுகள் யாவும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வின் நுண்ணறிவு மற்றும் விருப்பத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது என்பதை படைப்பாளனான அல்லாஹ் தனது வேதத்தினூடாகவும் தனது தூதரினூடாகவும் தெளிவு படுத்துகிறான்.

"அல்லாஹ்வே அனைத்துப்பொருட்களினதும் படைப்பாளனும் யாவற்றிற்கும் அவனே பொறுப்பாளனுமாவான்". (அஸ்ஸுமர் : 62). تقدم

"அவனே ஏழு வானங்களையும் தட்டுத் தட்டாகப் படைத்தான். மகா கருணையாளனான அவனின் படைப்பில் நீ எவ்விதக் குறைபாட்டையும் காணமாட்டீர். அவ்வாறாயின் உனது பார்வையை அதனை நோக்கி செலுத்துவீராக அவற்றில் ஏதேனும் பிளவுகளை காண்கிறீரா?". (அல் முல்க் :3). تقدم

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

"நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் குறிப்பிட்ட விதிமுறையின் படியே படைத்துள்ளோம்" (அல் கமர் : 49). تقدم

வடிவமைப்பு, துல்லியமான கட்டுப்பாடு, குறியிடப்பட்ட மொழி, நுண்ணறிவு, உள்நோக்கம், சிக்கலான அமைப்புகள், ஒன்றுக்கொன்று சார்ந்துள்ள விதிகள் போன்ற மற்றும் பல சொல்லாடல்களும் பிரயோகங்களும் நாத்திகர்ளைப் பொருத்தவரை இயற்கை தேர்வுக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதிருந்தும் இவ்வுலக உருவாக்கம் தற்செயலனவை, சடுதியானவை என்ற கருத்தியலுக்கு இட்டுச்சென்றது. மதத்திலிருந்திருந்தும் ,படைப்பாளனின் இருப்புக்குறித்த நம்பிக்கையிலிருந்தும் தப்பிக்கும் பரிதாபமான முயற்சிகளில் ஒன்றாக விஞ்ஞானிகள் படைப்பாளனுக்கு பல் வேறு பெயர்களைக் குறிப்பிடுகின்றனர் அவற்றுள்; (இயற்கைத் தாய், பிரபஞ்சத்தின் விதிகள், டார்வினின் இயற்கைத்தேர்வுக் கோட்பாடு போன்றவை அவற்றுள் சிலவையாகும்.

"இவைகள் வெறும் பெயர்களே தவிர வேறில்லை, நீங்களும், உங்கள் மூதாதையர்களுமே அவற்றைச் சூட்டிக்கொண்டீர்கள். அதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரத்தையும் இறக்கி வைக்வில்லை. அவர்கள் வெறும் யூகத்தையும் தங்கள் மனவிருப்பத்தையுமே பின்பற்பற்றுகின்றனர். நிச்சயமாக அவர்களது இரட்சகனிடமிருந்து நேர்வழி அவர்களிடம் வந்தே இருக்கிறது". (அந்நஜ்ம் : 23). تقدم

உண்மையில் 'அல்லாஹ்' என்ற பெயரை அல்லாது மாற்றுப் பெயர்களைப் பயன்படுத்துவதானது அவனின் முழுமையான பண்புகளில் சில நீங்கிவிடவும், பல்வேறுபட்ட சர்ச்சைக்குரிய கேள்விகள் தோன்றவும் காரணமாக அமைந்து விடும். உதாரணத்திற்கு :

அல்லாஹ்வை நினைவு கூறுவதை தவிர்ப்பதற்கு சர்வதேச ரீதியாக சட்டங்கள உருவாக்கப்பட்டு, அவர்களின் நம்பிக்கையின் படி தற்செயலாக தோன்றிய இயற்கையான விதிகளுக்கு உட்பட்டதான சிக்கலான அமைப்புக்களும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. இறுதியில் மனிதனின் புத்திக்கூர்மை மற்றும் அவனது அபூர்வமான திறமைகள் எவ்வித அடிப்படையுமற்ற முட்டால்தனமான, குருட்டுத்தனமான ஒரு அடிப்படையின் பால் இணைக்கப்படுகின்றன.

PDF