அறிவொளி பற்றிய இஸ்லாமிய கருத்தானது, இறை விசுவாசம் மற்றும் அறிவின் உறுதியான அடித்தளத்தில் அமையப்பெற்றுள்ளது. அதாவது முதலில் அல்லாஹ் பற்றிய (கடவுள்) நம்பிக்கை மற்றும் அந் நம்பிக்கையிலிருந்து பிரிக்க முடியாத அறிவு ஆகியவற்றின் மூலம் அறிவொளியையும் இதய ஒளியையும் ஒருங்கே பெற்றுள்ளது.
ஐரோப்பிய அறிவொளிக் கருத்து மற்ற மேற்கத்திய கருத்துகளைப் போலவே இஸ்லாமிய சமூகங்களுக்குள் புகுத்தப்பட்டுவிட்டது. இஸ்லாமிய கருத்தோட்டத்தில் (Enlightenment) அறிவொளியானது இறைவிசுவாசத்தின் ஒளியைப் பெறாத வெறுமனே பகுத்தறிவில் மாத்திரம் நம்பிக்கை கொண்ட ஒரு விடயமல்ல. அதே வேளை இந்தப் பூமியில் வாழ்வதற்கும் மக்கள் பயன் பெறும் விதத்திலும் பொது நலனை அடைந்து கொள்ளும் விதத்திலும் விவகாரங்களை கையாள்தல் சிந்தித்தல், நோட்டமிடுதல், கூர்ந்து அவதானித்தல் போன்ற விடயங்களில் அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ள அருட்கொடையான பகுத்தறிவை அவன் பயன்படுத்தாது விட்டால் அவனின் இறைவிசுவாசம் அவனுக்குப் எந்தப்பயனையும் அளிக்கமாட்டாது.
மத்திய கால நூற்றாண்டுகளில் கான்ஸ்டான்டினோப்பிளில் உட்பட மேற்கு மற்றும் கிழக்கத்திய அனைத்து தேசங்களிலும் அணைந்திருந்த நாகரித்தையும் பண்பாட்டையும் முஸ்லிம்களே மீண்டும் கட்டியெழுப்பி அவற்றிற்கு ஒளி பாய்ச்சினர்.
மனித விருப்புக்கும், பகுத்தறிவிற்கும் எதிராக கிறிஸ்தவ திருச்சபை அதிகாரிகளால் நடாத்தப்பட்ட சர்வதிகாரத்திற்கும், கொடுங்கோண்மைக்கும் எதிராக ஐரோப்பாவில் தோன்றிய இயல்பான எதிர் வினையகாவே அறிவொளி இயக்கம் காணப்படுகிறது. இஸ்லாமிய நாகரீமானது இந்நிலைபற்றி அறிந்திருக்கவில்லை.
"அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் செலுத்துகிறான். ஆனால், நிராகரிப்பவர்களுக்கோ அவர்களின் பாதுகாவலர்கள் ஷைத்தான்கள்தான். அவை அவர்களை ஒளியிலிருந்து நீக்கி இருள்களின் பால் செலுத்துகின்றன. அவர்கள் நரகவாசிகள். மேலும், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி விடுவார்கள்".(அல் பகரா : 257). تقدم
இவ்வசனங்களை சிந்திப்பதன் மூலம், இறைவிருப்பே -நாட்டமே- மனிதனை இருளிலிருந்து ஒளியின் பால் வெளியேற்றுகிறது, அதாவது வழிகேட்டிலிருந்து நேரான பாதைக்கு வழிகாட்டுகிறது என்பதை அறிய முடிகிறது. ஆக மனிதனுக்குக் கிடைக்கும் இறை வழிகாட்டலானது அல்லாஹ்வின் அனுமதியின் பிரகராமே ஒருவருக்குக் கிடைக்கிறது என்பதே உண்மையாகும். ஏனெனில் அறியாமை, இணைவைப்பு-(பல தெய் வழிபாடு), மூட நம்பிக்கை போன்ற இருள்களிருந்து விடுவித்து இறை நம்பிக்கை, அறிவு, உண்மை அறிவு ஆகியவையின் பால் அல்லாஹ்வால் வழிகாட்டப்படும் மனிதன் பகுத்தறிவு, அகப்பார்வை, (நுண்ணறிவு) உள்ளுணர்வு போன்றவற்றால் அறிவொளி பெற்றவராவார்.
அல்லாஹ் தனது வழிகாட்டலை ஒளி எனும் அடை மொழி மூலம் பின்வரும் வசனத்தில் சுட்டிக்காட்டுகிறான் :
''நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும் தெளிவான வேதமும் வந்துவிட்டது'' (அல் மாஇதா: 15). تقدم
மனிதர்களை இறைமறுப்புக்காரிருளிருந்து மீட்டெடுத்து இறைவனை ஏற்று வாழும் தெளிவான இறைவழிகாட்டல் எனும் ஒளியின்பால் வழிகாட்டவே தனது தூதர்களான மூஸா மற்றும் ஈஸாவிற்கும் (திரிபுபடுத்தப்படாத) வேதங்களான தவ்ராத்தையும் இன்ஜீலையும் இறக்கியருளியதோடு இறுதித்தூதரான முஹமத்திற்கு அல்குர்ஆனை இறக்கிவைத்தான். இதன் மூலம் ஓளியை நேர்வழியுடன் இணைந்ததாக அல்லாஹ் ஆக்கிவைத்துள்ளான்.
''நிச்சயமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம்.அதில் நேர்வழியும் ஓளியும் இருக்கின்றன''. (மாஇதா : 44). تقدم
"அவருக்கு நாம் இன்ஜீலை வழங்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் அது தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் நேர்வழியாகவும் பயபக்தியாளர்களுக்கு நல்லுபதேசமாகவும் இருக்கிறது". (மாஇதா : 46). تقدم
அல்லாஹ்வின் ஒளியின்றி எந்த நேர்வழியும் கிடையாது. அதே போல் அல்லாஹ்வின் அனுமதியில்லாது எந்த ஒளியும் மனித உள்ளத்திற்கும் அவனின் வாழ்கைக்கும் ஒளியேற்றிட முடியாது.
''அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசமாவான்'' (அந்நூர் :35) تقدم
அல்குர்ஆனில் எல்லா நிலைகளிலும்' அந்நூர்' ஒளி என்ற வார்த்தை ஒருமையாகவும், அதே வேளை 'இருள்கள்' 'அழ்ழுலுமாத்' என்ற வார்த்தையானது பன்மையிலும் இடம் பெற்றுள்ளதை இங்கே எம்மால் அவதானிக்க முடிகிறது. இதில் அல் குர்ஆன் எந்தளவு மிக மதிநுட்பத்தை கையாண்டிருக்கிறது என்பதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. (கலாநிதி அத்துவைஜிரியின் இஸ்லாத்தின் அறிவொளி என்ற கட்டுரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது https://www.albayan.ae/five-senses/2001-11-16-1.1129413 .)
div> تقدم