இஸ்லாம் சகிப்புத்தன்மையின் பால் அழைப்புவிடுக்கிறதா?

இஸ்லாமிய மார்க்கம் அழைப்பு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு (சகிப்புத்தன்மை) அழகிய முறையில் தர்க்கம் செய்தல் பேன்ற விடயங்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

"(நபியே! மனிதர்களை) மதிநுட்பத்தைக் கொண்டும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உமது இறைவனுடைய வழியின் பக்கம் அழைப்பீராக! மேலும், அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக. உமது இறைவனுடைய வழியிலிருந்து வழி தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான்". (அந்நஹ்ல் :125). تقدم

புனித குர்ஆன் இறுதி வேதமாகவும், தீர்க்கதரிசிகளில் முஹம்மது இறுதி தீர்க்கதரிசியாகவும் இருப்பதால் இஸ்லாமிய மார்க்க சட்டத்துரையானது மார்க்க அடிப்படைகள் மற்றும் கொள்கைகள் குறித்து உரையாடுவதற்கும் விவாதிப்பதற்குமான வழியை அனைவருக்கும் திறந்து கொடுத்துள்ளது. இந்த வகையில் 'மார்க்கத்தில் எந்தவொரு நிர்ப்பந்தமும் கிடையாது' என்ற கோட்பாடானது இஸ்லாமிய மார்க்த்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு அரசு தங்களுக்கு பாதுகாப்பளித்து தங்களின் மார்க்கத்தைப் பின்பற்றி வாழ்வதற்கான உரிமையை வழங்கியமைக்கு பதிலாக அந்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி பிறரின் கௌரவத்தை மதிக்கும் நிலை இருக்கும் பட்சத்தில் சீரிய இஸ்லாத்தின் இயற்கை இறையியல் கோட்பாட்டை ஏற்க வேண்டும் என்று எவரையும் அது நிர்ப்பந்திக்காது.

இதற்கு சிறந்த உதாரணமாக முஸ்லிம்கள் 638 ம் வருடம் ஜெரூஸல நகரை வெற்றி கொண்டபோது உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அம்மக்களுக்கு எழுதிய உமரிய உடன்படிக்கை சாசனமாகும். அதில் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தேவாலயங்கள் மற்றும் உடமைகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். இதனால்தான் உமரிய உடம்படிக்கையானது குத்ஸ் வரலாற்றில் மிகப்பெரும் ஆவணமாகக் கருதப்படுகிறது.

'அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன். இது ஈலியா (ஜெரூஸலம்) நகர மக்களுக்கு உமர் இப்னுல் கத்தாப் அவர்கள் எழுதிக்கொள்வது, இந்நகரில் வாழ்வோர் யாவரும் அவர்களின் உயிர்களுக்கும், குழந்தைகளுக்கும், உடமைகளுக்கும், அவர்களின் தேவாலயங்களுக்குமான பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வர். அவர்களின் தேவாலயங்கள் இடிக்கப்படவோ, அவர்களின் இருப்பிடங்களில் பிறர் குடியமர்த்தப்படவோ மாட்டார்கள். (இப்னுல் பத்ரீக் : அத்தாரீஹ் அல்மஜ்மூஃ அலத் தஹ்கீக் வத்தஸ்தீக், பாகம் 2 பக்கம் 147). تقدم تقدم

இந்த உடன்படிக்கையை கலீபா உமர் ரழியல்லாஹு அன்ஹு எழுதிக்கொண்டிருக்கையில் தொழுகைக்கான நேரம் நெருங்கியது. அப்போது திருச்சபை முதல்வாரன ஸபார்னியோஸ் அவர்கள் புனித தேவாலயத்தில் தொழுகையை நிறைவேற்றுமாறு உமருக்கு அழைப்பு விடுத்தார். இதனை கலீபா அவர்கள் மறுத்து, அவரிடம் நான் இங்கே தொழுதால் உங்களை முஸ்லிம்கள் மிகைத்து, அமீருல் முஃமின் ' அவர்கள் இங்கே தொழுதார்கள் எனக் கூறுவார்கள் என்பதை நான் பயப்படுகிறேன்' எனக் கூறினார்கள். தாரீஹுத்தபரி –முஜீரித்தீன் அல் உலைமி அல் மக்திஸி.

இஸ்லாம், முஸ்லிமல்லாதவர்களுடனான உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் மதித்து நிறைவேற்றுவதுடன், துரோகிகள் மற்றும்; உடன்படிக்கைகளை மீறுபவர்களுடன் கண்டிப்போடு நடந்து கொள்கிறது. அத்துடன் இவ்வாறான துரோகிகளுடன் முஸ்லிம்கள் ஒத்துழைத்து நடப்பதை இஸ்லாம் தடைசெய்கிறது.

"நம்பிக்கை கொண்டோரே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்ளில் உங்கள் மார்க்கத்தைக் கேலியாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டவர்களையும், இன்னும் நிராகரிப்பாளர்களையும் நேசர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளரர்களாக இருந்தால் அல்லாஹ்வையே அஞ்சிக்கொள்ளுங்கள்". (அல் மாஇதா :57). تقدم(அல் மாஇதா :57)

முஸ்லிம்களுடன் போராடுகின்ற, தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றுகின்றவர்களுடன் ஒத்துழைத்து நடந்து கொள்ளக் கூடாது என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்தி குறிப்பிட்டுள்ளது.

''எவர்கள் மார்க்கவிடயத்தில் உங்களுடன் போரிடவில்லையோ அவர்களுக்கும் மேலும் உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றவில்லையோ அவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுடன் நீங்கள் நீதியாக நடப்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை நேசிக்கிறான். எவர்கள் மார்க்க விடயத்தில் உங்களுடன் போரிட்டு, உங்களை உங்களது இல்லங்களை விட்டும் வெளியேற்றினார்களோ அவர்களையும் மேலும் உங்களை வேளியேற்றிட உதவி செய்தார்களோ அவர்களையும் நேசத்திற்குரியவர்களாக எடுத்துக்கொள்வதையே உங்களுக்குத் தடுக்கிறான். அவர்களை யார் நேசர்களாக எடுத்துக் கொள்கின்றார்களோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்''. (அல் மும்தஹினா :8-9). تقدم(அல் மும்தஹினா :8-9)

அல்குர்ஆன் ஈஸா மற்றும் மூஸா அலைஹிமஸ்ஸலாம் ஆகியோரின் சமூகத்தில் அக்காலத்தில் இருந்த ஏகத்துவவாதிகளை புகழ்ந்து பேசுகிறது.

"அவர்கள் அனைவரும் ஒரே சமமானவர்கள் அல்லர். வேதத்தை உடையோரில் சத்தியத்தில் நிலைத்திருக்கும் கூட்டத்தினரும் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை இரவு வேளைகளில் ஓதி சிரம்பணிகின்றனர். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கின்றனர். மேலும் நன்மையை ஏவி தீமையைவிட்டும் தடுத்து நல்ல காரியங்கள் புரிவதிலும் விரைகின்றனர். அவர்கள் நல்லவர்களில் உள்ளவர்கள் ஆவர்''. (ஆலு இம்ரான் (113-114). تقدم

"நிச்சயமாக வேதமுடையோரில், அல்லாஹ்வையும், உங்களுக்கு இறக்கப்பட்டதையும், அவர்களுக்கு இறக்கப்பட்டதையும், அல்லாஹ்வை அஞ்சியவர்களாக நம்பிக்கை கொள்வோரும் உள்ளனர். அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள். இத்தகையோருக்குரிய கூலி அவர்களது இரட்சகனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிரமானவன்''. (ஆல இம்ரான் : 199). تقدم

"நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உண்மையாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் அவர்களுக்கு நிச்சயமாக உண்டு. மேலும், அவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்".(அல் பகரா: 62). تقدم

PDF