ஆம், இஸ்லாம் அனைவருக்கும் சாத்தியமானது. இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் உண்மை மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்த நிலையில் எவ்வித இடைத்தரகருமின்றி முஸ்லிமாகவே பிறக்கின்றனர். அந்தக் குழந்தையானது தனது குடும்பம், அல்லது பாடசாலை அல்லது எந்த மத அமைப்புக்களினதும் தலையீடுகளுமின்றி பருவ வயதை அடையும் வரையில் நேரடியாக அல்லாஹ்வையே வணங்கிக் கொண்டிருக்கிறது. அவன் பருவவயதை அடைந்ததும் தனது செயல்களுக்கு பொறுப்புக் கூறக்கூடியவனாகவும் அது குறித்து விசாரணைக்குட்படக்கூடியவனாகவும் மாறிவிடுகிறான். அந்தக் குழந்தை பருவவயதை அடைந்தபின் ஈஸாவை தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தராக ஏற்றுக்கொள்வதன் மூலம் அவன் கிறிஸ்தவனாகவும், புத்தரை மத்தியஸ்தராக எடுத்துக்கொள்வதன் மூலம் பௌத்தனாகவும், கிரிஷ்னனை தனது மத்தியஸ்தராக எடுத்துக்கொள்வதன் மூலம் ஒரு இந்துவாகவும் மாறிவிடுகிறான். அல்லது முஹம்மதை மத்தியஸ்தராக ஏற்று இஸ்லாத்திலிருந்து முற்றிலும் விலகி நடப்பதற்கோ, அல்லது அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி இயற்கை மார்க்கத்தில் நிலைத்திருக்க்கூடியவானகவோ மாறிவிடுகிறான். முஹம்மத் நபியவர்கள் தனது இரட்சகனிடமிருந்து கொண்டுவந்த இறைத்தூதைப் பின்பற்றுவர் சீரிய இயல்புணர்வுக்கு ஒத்துப்போகும் உண்மை மார்க்கத்தையே பின்பற்றுகிறார். இது தவிர அனைத்துக் கொள்கைகளும் வழிகேடும் நெறிபிறழ்வுமாகும். உதாரணத்திற்கு மனிதனுக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் முஹம்மதை மத்தியஸ்தராக எடுத்துக்கொண்டாலும் சரியே!
"எல்லாக் குழந்தைகளும் இயற்கை மார்க்கமான இஸ்லாத்திலே பிறக்கின்றன. அந்தக் குழந்தையின் பெற்றோரே அக்குழந்தையை யூதனாகவோ அல்லது கிறிஸ்துவனாகவோ அல்லது நெருப்பு வணங்கியாகவோ மாற்றிவிடுகின்றனர்". (ஆதாரம் : முஸ்லிம் (1218)). تقدم