அல்லாஹ்வுக்கு முழுமையாக அடிபணிந்து, அவனுக்குக் கட்டுப்பட்டு, அவனின் விதியை ஏற்றுக்கொள்வதன் மூலமே மனிதனுக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.
எல்லா விடயங்களும் அடிப்படையில் அர்த்தமற்றவை என்றும். அத்துடன் ஒரு நிறைவான வாழ்வை அடைந்து கொள்வதற்கு தமக்கென ஒரு கருத்தை சிருஷ்டித்துக்கொள்வதற்கான சுதந்திரம் இருப்பதாகவும் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வுலகில் எமது இருப்புக்கான நோக்கத்தை மறுப்பது உண்மையில் தன்னையே ஏமாற்றிக்கொள்வதற்கு நிகரான விடயமாகும். அதாவது இவ்வுலக வாழ்வில் எமக்கு ஒரு இலக்கு உண்டு என நாம் போலியாக எமக்குள்ளே கூறிக்கொள்வதை ஒத்ததாகும். எமது இந்நிலையானது குழந்தைகள் தங்களுக்கு மத்தியில் விளையாடும் போது வைத்தியர்கள், செவிலியர்கள், தாய் தந்தையர்கள் என நடிப்பதை போன்றதாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். வாழ்வில் எமது இலக்கை தெரிந்து கொள்ளாது விடின் மகிழ்ச்சியை ஒரு போதும் அடைந்து கொள்ளவே முடியாது என்பதே யதார்த்தமாகும்.
உதாரணத்திற்கு ஒரு மனிதன் தனது விருப்பத்திற்கு மாறாக மிகவும் ஒரு ஆடம்பரமான தொடரூந்தில் முதல் தர வகுப்பில் ஏற்றப்பட்டிருப்பதை காண்கிறார். இது ஒரு மிக உயர்ந்த அனுபவமாகவும் ஆடம்பரத்தின் உச்சமாகவும் அவரைப் பொருத்தவரை இருக்கலாம். என்றாலும் நான் எப்படி இந்த தொடரூந்தில் ஏறினேன்? இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன? இது எங்கு செல்கிறது? போன்ற அவரின் மனதில் தோன்றும் கேள்விகளுக்கு விடை காணாது அவரின் பயணம் மகிழ்ச்சியானதாக இருக்குமா? மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான எந்தப்பதிலும் கிடைக்கவில்லையாயின் அவரால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்? அவர் தனது வசம் உள்ள அனைத்து ஆடம்பரங்களையும் அனுபவிக்கத் தொடங்கினாலும், அவர் ஒருபோதும் உண்மையான, அர்த்தமுள்ள மகிழ்ச்சியை அடைய மாட்டார். இந்தக் கேள்விகளை அவர் மறக்கச் செய்ய இந்தப் பயணத்தின் சுவையான உணவு மாத்திரம் போதுமா? இந்த வகையான மகிழ்ச்சி தற்காலிகமானதும் போலியானதுமாகும். இந்த முக்கிய கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறிவதை வேண்டுமென்றே பொருட்படுத்தாது இருப்பதன் மூலம் மட்டுமே அதனை பெற்றுக்கொள்ள முடியும். இது குடிப்பழக்கத்தின் விளைவாக ஏற்படும் தற்காலிக போலி பரவச நிலையைப் ஒத்தது. அது குடிப்பழக்கத்திற்கு உட்பட்ட அந்நபரை அழிவுக்கே இட்டுச் செல்லும். அத்துடன் மனித இருப்பின் இன்றிமையா கேள்விகளான இவைகளுக்கு விடை காணாத வரையில் யதார்த்தமான உண்மையான மகிழ்ச்சி ஒரு மனிதனுக்கு கிடைக்கப் போவதில்லை என்பதே ஒரு பேருண்மையாகும்.