பரீட்சையானது புதிய கல்வி வாழ்வை எதிர்கொள்வதற்காக, மாணவர்களின் தராதரத்தை மதிப்பிட்டு வேறுபடுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். பரீட்சை குறுகியதாக இருந்தாலும், புது வாழ்வை எதிர் நோக்கியிருக்கும் மாணவரின் தலைவிதியை அது தீர்மானிக்கிறது. அதேபோன்று தான் மறுமை வாழ்வை முனனோக்கிச் செல்வோரின் தராதரத்தை வேறுபடுத்துவதற்காக இவ்வுலக வாழ்வு மனிதர்களுக்கான தேர்வாகவும் சோதனை களமாகவும் இருக்கிறது. உண்மையில் மனிதன் அவன் திரட்டிவைத்த பொருட்களுடன் இவ்வுலகைவிட்டு பிரிந்து செல்லாது தான் செய்த நல்வினைகளுடனும் செயற்பாடுகளுடனுமே பிரிந்து செல்கிறான். ஆகவே மறுமை வாழ்வையும், அங்கு கிடைக்கவிருக்கும் வெகுமதியையும் நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதை மனிதன் புரிந்துகொள்வது அவசியமாகும்.