உதாரணமாக, ஒரு நபர் கடையில் ஏதாவது வாங்க விரும்பினால், அந்தப் பொருளை வாங்குவதற்கு தனது மூத்த மகனை அனுப்ப முடிவு செய்வார், காரணம் அவரின் அந்த மகன் புத்திசாலி என்றும் அவர் உடனே சென்று தந்தை விரும்புவதை வாங்குவார் என்றும் அவருக்கு முன்பே தெரியும். ஆனால்அவரின் அடுத்த மகனைப் பொருத்தவரை தனது நண்பர்களுடன் விளையாடுவதில் ஈடுபட்டு பணத்தை தொலைத்து விடுவார் என்பதனால் அவரிடம் இப்பொறுப்தை ஒப்படைக்க விரும்பமாட்டார். இது உண்மையில் ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தந்தை தனது தீர்ப்பை கட்டமைத்துள்ளார் என்பது புரிகிறது.
ஆகவே விதிகள் பற்றிய பூரணமாக அறிந்திருப்பது ஒரு போதும் எமது தெரிவிற்கு முரணாக அமைவதில்லை. காரணம் எமது தெரிவுகள் மற்றும் விருப்புகள் பற்றிய அவனின் முழுமையான அறிவிற்கேட்ப எமது செயல்களை அல்லாஹ் அறிந்துள்ளான் என்பதே இதன் கருத்தாகும். அத்துடன் மனித இயல்பை அறிவதில் அவனை விஞ்சிட யாரும் கிடையாது. அவனே எம்மைப் படைத்தவன், எம் இதயத்தில் நாம் விரும்பும் நன்மையான மற்றும் தீமையான விடயங்களை அவன் அறிந்திருப்பதோடு, நம் செயல்களையும் அவதானித்துக்கொண்டிருக்கின்றான். இவ்வாவறு அவன் நம்மைப் பற்றி அறிந்தவற்றை அவனிடம் பதிவு செய்து வைத்திருப்பது நம் விருப்பத்திற்கு முரணாக மாற மாட்டாது. காரணம் அல்லாஹ்வுக்கே –கடவுளுக்கே- முழுமையான அறிவு இருக்கிறது என்பதையும், மனித அறிவு குறை நிறைந்தவை அவனின் எதிர்பார்ப்புகள் சரியானதாகவோ அல்லது தவறனதாகவோ அமைய முடியும் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம் .
ஒரு மனிதன் அல்லாஹ் விரும்பாத வகையில் செயற்படுவது சாத்தியமான விடயம். ஆனால் அவனின் செயற்பாடானது ஒரு போதும் இறை நாட்டத்திற்கு எதிரானதாக அமையாது. ஏனெனில் அல்லாஹ் அவனுக்கு தெரிவு செய்வதற்கான விருப்பத்தை வழங்கியுள்ளான். அவனின் அந்தச் செயற்பாடானது அவனுக்கு பாவமானதாக இருந்தாலும் அவன் அல்லாஹ்வின் நாட்டத்திற்கு உட்பட்டவனாகவே உள்ளான். இதற்கு முரணாக அவனால் இருக்க முடியாது ஏனெனின் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறிச் செல்லும் அதிகாரத்தை அவனுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.
நாம் விரும்பாத ஒன்றை எமது உள்ளம் ஏற்றுக்கொள்ளவென அதனை நிர்ப்பந்திக்கவோ அதனை திணித்திடவோ எம்மால் முடியாது. ஒரு மனிதனை பயமுறுத்தி அச்சுறுத்துவதன் மூலம் நம்முடன் இருக்க கட்டாயப்படுத்துவது சாத்தியமான விடயம். ஆனால் அந்த மனிதனை எம்மை விரும்ப வேண்டும் என கட்டாயப்படுத்திட முடியாது. ஆகவே எமது உள்ளத்தை எந்த வகையிலும் நிர்பந்தித்தித்து கட்டாயப்படுத்திட முடியாதவாறு அல்லாஹ் பாதுகாத்துள்ளான். இதன் காரணமாவே எமது உள்ளங்களின் விருப்பங்கள் மற்றும் அதன் தூண்டல்களுக்கு ஏற்ப எம்மை விசாரித்து எமக்கான வெகுமதிகளை வழங்குகிறான்.