படைப்பாளனின் பண்புகள் எவை? ஏன் அவனுக்கு 'அல்லாஹ்' என்ற பெயர் வழங்கப்படுகிறது?

மத்திய கிழக்கில் வாழும் யூதர்கள் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் யாவரும் அல்லாஹ் என்ற வார்த்தையை கடவுளுக்குப் பயண்படுத்துகின்றனர். இது 'உண்மையான ஏக இறைவனைக் குறிக்கிறது. அல்லாஹ்வே மூஸா மற்றும் ஈஸாவின் (அவர்கள் இருவருக்கும் சாந்தி உண்டாவதாக) கடவுளாவான். அல்லாஹ் தனது திருமறை அல் குர்ஆனில் 'அல்லாஹ்' என்ற பெயராலும் மற்றும் வேறு (அழகிய) பெயர்கள் பண்புகளாலும் தன்னை அறிமுகப்படுத்தியுள்ளான். பைபிளின் பழைய ஏற்பாட்டில் பழைய பிரதியில் 89 தடவைகள் அல்லாஹ் என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லாஹ்வின் பண்புகளுள் படைப்பாளன் ' அல் காலிக்' என்பதும் ஒன்றாகும். இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

"அந்த அல்லாஹ்தான் படைப்பவன். (அவனே) படைப்புகளை ஒழுங்கு செய்பவன்; (அவனே) படைப்புகளின் உருவத்தையும் அமைப்பவன். அவனுக்கு அழகான பல திருப்பெயர்கள் இருக்கின்றன. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனையே துதி செய்கின்றன. அவனே (அனைவரையும்) மிகைத்தவன்; மிக ஞானமுடையவன்". (ஹஷ்ர் : 24). (அல் ஹஷ்ர் : 24)

அவனே இப்பிரபஞ்சத்தின் ஆதியும் அந்தமுமாவான். அதாவது அவனுக்கு முன் எதுவும் இருக்கவில்லை, அவனுக்குப் பின் எதுவும் கிடையாது. இது குறித்து அல்லாஹ் தனது வேதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறான். "அவனே முதலாமவனும், இறுதியானவனும், மேலானவனும், அந்தரங்கமானவனுமாவான். அவன் யாவற்றையும் நன்கறிந்தவனுமாவான்." (அல் ஹதீத் : 3). تقدم

அவன் திட்டமிட்டு நிர்வகிப்பவனாவான் : "வானத்திலிருந்து பூமிவரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான்". (ஸூறதுஸ் ஸஜ்தா : 5). تقدم

அவன் யாவற்றையும் அறிந்தவனும் பேராற்றலுடையவுமாவான் "அவன் நன்கறிந்தவனும் பேராற்றலுமுடையவனாக இருக்கிறான்". (பாதிர் : 44). تقدم

அவன் தனது எந்த படைப்பின் தோற்றத்திலும் பிரதிபலிக்கமாட்டான் "அவனைப்போல் எதுவும் கிடையாது அவன் யாவற்றையும் செவியேற்பவன் பார்ப்பவன்". (ஷூரா : 11). تقدم

அவனுக்கு எந்தப்பங்காளனும் கிடையாது. அதே போல் அவனுக்கு எந்தப்பிள்ளையும் கிடையாது "(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான். அல்லாஹ் எவ்விதத் தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக எதுவுமில்லை". (இஃலாஸ் : 1- 4) تقدم

அவன் ஞானமிக்கவனாவான் "அல்லாஹ் யாவற்றiயும் அறிந்தவனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கிறான்". (நிஸா : 111). تقدم

அவன் நீதியாளனவான் "உமது இரட்சகன் எவருக்கும் அநியாயம் இழைக்கமாட்டான்". (கஹ்ப் : 49). تقدم

PDF