மறுபிறவி கோட்பாட்டில் ஒரு முஸ்லீம் நம்பிக்கை கொள்ளாதது ஏன்? குறிப்பு :(மறுபிறப்பு அல்லது மறு பிறவி என்பது உயிர் அல்லது ஆன்மா உடலைத் துறந்த பின் அது முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப மனிதனாகவோ, விலங்காகவோ அல்லது மற்ற உயிரினமாகவோ மறுபிறப்பு எடுக்கின்றது என்பது இதன் அடிப்படையாகும்).

இந்த பிரபஞ்சம் முழுதும் படைப்பாளனான அல்லாஹ்வின் ஆளுகையின் கீழ் உள்ளது. ஆகவே அவன் மாத்திரமே தனது விருப்பத்திற்கு அமைவாக அனைத்தையும் அடிபணியவைக்கக்க கூடிய முழுமையான அறிவையும், ஆற்றளையும், திறனையும் பெற்றுள்ளான். சூரியன், கோள்கள் மற்றும் (விண்மீன் திரள்கள்) பால்வெளிமண்டளங்கள் ஆகியவை படைப்பின் துவக்கம் முதல் மிகத்துல்லியத்துடன் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த நுணுக்கமும் திறனும் மனிதர்களின் உருவாக்கத்திற்குப் பொருந்தும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மனித உடல்களுக்கும் ஆன்மாக்களுக்கும் இடையே உள்ள ஒருங்கிணைப்பானது, மனித உடலிலிருந்து வெளியேறிய ஆன்மாக்களை –உயிர்களை- விலங்குகளின் உடலில் குடிகொள்ளச் செய்ய முடியாது என்பதையும், தாவரங்கள் மற்றும் பூச்சிகள் அல்லது மனிதர்களிடையே கூட ஊடாடல் செய்ய முடியாது என்பதையும் காட்டுகிறது. மேலும் அல்லாஹ் மனிதனை பகுத்தறிவு மற்றும் அறிவாற்றலால் தனித்துவப்படுத்தி, அவனை பூமியில் ஒரு கலீஃபாவாக -பிரதிநிதியாக- ஆக்கி ஏனைய பல உயிரனங்களை விட அவனை சிறப்பாக்கி கண்ணியப்படுத்தி அவனது அந்தஸ்தை உயர்த்தியுள்ளான். படைப்பாளனான அல்லாஹ் மரணத்தின் பின் மீண்டும் உயிரினங்களை உயிர்த்தெழச் செய்யும் மறுமை நாளை ஏற்படுத்தி உயிரினங்கள் அனைத்தையும் அவன் விசாரித்து தீர்ப்பளிப்பதும், அதன்படி அவர்களின் தலைவிதி சொர்க்கம் அல்லது நரகம் என்பதை தீர்மானிப்பதும், அனைத்து நல்ல மற்றும் கெட்ட செயல்களும் அந்நாளில் மதிப்பிடப்படுவதும் படைப்பாளனான அல்லாஹ்வின் ஞானத்திற்கும் அவனின் நீதிக்குமான சான்றாக அமைந்துள்ளது.

''ஆகவே எவர் ஒரு அணுவளவேனும் நன்மை செய்தாலும் அவர் அதனைக் கண்டு கொள்வார். எவர் ஒரு அணுவளவேனும் தீமை செய்தாலும் அவர் அதனைக் கண்டு கொள்வார்''. (அல்ஸல்ஸலா :7-8). تقدم

PDF