அல்லாஹ் முதலில் எவ்வாறு அவர்களை உயிர்கொடுத்து படைத்தானோ அவ்வாறே மீண்டும் அவர்களை உயிர்ப்பிக்கிறான்.
அல்லாஹ் கூறுகிறான் :
''மனிதர்களே! (மரணித்த பின்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்) நிச்சயமாக நாம்தான் உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு கருவரைச்சுவரில் ஒட்டிக்கொள்ளக் கூடியதிலிருந்தும் பின்னர் வடிவமைக்கப் பட்டதும் வடிவமைக்கப்படாததுமான சதைப் பின்டத்திலிருந்தும் படைத்தோம், உங்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பையில் தரிபடுத்துகிறோம். பின்பு உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள். அறிந்த பின் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள், அதன் மீது நாம் (மழை) நீரைப் பொழியச்செய்தால் அது அதிர்வுற்று வளமாகி அழகான பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது". (ஹஜ் : 05). تقدم
"மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான். மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; “எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. “முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!".(யாஸீன் : 77-79). تقدم
"(நபியே!) அல்லாஹ்வின் இவ்வருளால் ஏற்படும் பலன்களை நீர் கவனிப்பீராக! இறந்துபோன பூமியை எவ்வாறு செழிக்கச் செய்கிறான்! (இவ்வாறே) நிச்சயமாக அவன் இறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்வான். அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் உடையவன்".(அர்ரூம் :50). تقدم