மலக்குகள் என்போர் அல்லாஹ்வின் மிகப் பிரமாண்டமான ஒரு படைப்பு. அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள், நன்மையான காரியங்களில் ஈடுபடுவதற்கென கட்டமைக்கப்பட்வர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்கள். அல்லாஹ்வை துதிசெய்து கொண்டும் வணங்கிக் கொண்டும் இருப்போர். அவர்கள் சோர்வடையோ, களைப்புரவோ மாட்டார்கள்.
“அவர்கள் சோர்வடையாது இரவு பகலாக (அவனைத்) துதித்துக் கொண்டிருப்பார்கள்“(அன்பியா :20). تقدم
''அல்லாஹ் அவர்களுக்கு செய்யுமாறு கட்டளையிட்டவற்றில் அவனுக்கு மாறு செய்யாது, அவர்களுக்கு அல்லாஹ் ஏவியவற்றை எடுத்து நடப்பார்கள்''.(அத்தஹ்ரீம் : 6). تقدم
இவர்களை நம்புவதில் முஸ்லிம்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் யாவரும் ஒன்று பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஜிப்ரீல் ஆவார். அவரே அல்லாஹ்வுக்கும் இறைத்தூதர்களுக்கும் மத்தியில் தொடர்பாளராக இருப்பதற்கு அல்லாஹ் தேர்வு செய்தான். அவரே அல்லாஹ்விடமிருந்து இறைச்செய்தியை (வஹியை) நபிமார்களுக்கு எடுத்து வருபவர். இவரைப் போன்று மீகாஈல் என்ற மலக்கும் உள்ளார். அவரின் பணி மழையைப் பொழிவிப்பதும் தாவரங்களை பராமரிப்பதுமாகும், அதே போன்று இஸ்ராபீல் என்ற மலக்கும் உள்ளார். அவரின் பணி மறுமை நாள் நிகழ ஸூர் ஊதுவதாகும். இங்கே பெயர்குறிப்பிடப்படாத இவர்கள் அல்லாத பல மலக்குகளும் உள்ளனர்.
ஜின்கள் மறை உலகில் வாழும் ஒரு படைப்பு. அவர்கள் எங்களுடன் இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களும் மனிதர்களைப் போன்று அல்லாஹ்வுடைய கட்டளைகளை எடுத்து நடக்க வேண்டப்பட்டுள்ளதுடன், அவனுக்கு மாறுசெய்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர். என்றாலும் இவர்கள் எமது புறக்கண்களுக்கு புலப்படுவதில்லை. இவர்கள் நெருப்பினால் படைக்கப்பட்டவர்கள், மனிதர்களோ களிமண்ணால் படைக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் ஜின்களின் வல்லமை மற்றும் அவர்களின் ஆற்றல்களின் நிலை குறித்து விளக்கும் பல சம்பவங்களை குறிப்பிட்டுள்ளான். அவற்றுள் பௌதீக ரீதியான எந்தத் தலையீடுமின்றி ஊசலாட்டம் அல்லது தீமையைச் செய்வதற்கு மறைமுகமாக தூண்டுதல்களை மனிதனில் ஏற்படுத்துவதானது அவர்களின் ஆற்றலை தெளிவுபடுத்துகிறது. என்றாலும் அவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். பலமான இறைவிசுவாசம் கொண்ட ஒரு விசுவாசிக்கு தொல்லை கொடுக்கவோ பாதிப்பை ஏற்படுத்தவோ சக்தி பெறமாட்டார்கள்.
''நிச்சயமாக ஷைத்தான்கள் தமது நேசர்களை உங்களுடன் தர்க்கம் செய்யத் தூண்டுகின்றனர்''. (அல் அன்ஆம் :121). تقدم
'ஷைதான்' எனும் வாசகம் மனிதனிரிலோ, ஜின்களிலோ வரம்பு மீறி, கட்டுக்கடங்காத அனைவரையும் குறிக்கின்றது.