முன்னைய இறைத்தூதர்களை விசுவாசம் கொள்வது முஸ்லிமின் நம்பிக்கைக் கோட்பாட்டில் அடிப்படை அம்சமாக உள்ளதா?

மனித இனத்திற்காக அனுப்பப்பட்ட இறைதூதர்கள் அனைவரையும் எவ்வித வேறுபாடுமின்றி நம்புவது ஒரு முஸ்லிமின் இறைவிசுவாசத்தில் காணப்பட வேண்டிய முக்கிய அடிப்படையாகும். இவ்வாறு அவன் நம்பவில்லையென்றால் அவனின் ஈமான் எனும் இறைவிசுவாசம் சரியானதாக அமையமாட்டாது. தெளிவாகக் குறிப்பிடுவதாயின் அவன் ஒரு முஸ்லிமே அல்ல என்பதுவே இதன் கருத்தாகும். எந்த ஒரு தூதரையோ அல்லது தீர்க்கதரிசியையோ மறுப்பது மார்க்கத்தின் அடிப்படைகளுடன் மோதுகின்ற விடயமாகும். காரணம் அனைத்து நபிமார்களும் -தீர்க்கதரிசிகளும்-இறுதித்தூதரான முஹம்மத் அலைஹிஸ்ஸாம் அவர்களின் வருகையை குறித்து முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள் அதிகமான நபிமார்களையும், ரஸூல்மார்களையும் அல்லாஹ் பல்வேறுபட்ட சமூகங்களுக்கு அனுப்பியுள்ளான், இவர்களின் பெயர்கள் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு (நூஹ் இப்ராஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் யஃகூப், யூஸுப், மூஸா, தாவூத், ஸுலைமான், ஈஸா போன்றோர் அவர்களுள் சிலராவர்) மேலும் பல நபிமார்கள் அவர்களின் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. இந்து மற்றும் பௌத்த மதங்களில் உள்ள ராமர், கிரிஷ்னர், கௌதம புத்தர் போன்ற மதப் பிரதானிகள் யாவரும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளாக இருப்பதற்கு சாத்தியம் இருந்தாலும், அல்குர்ஆனில் அதற்கான எந்த சான்றும் கிடையாது என்பதனால் ஒரு முஸ்லிம் அவர்களை தீர்க்கதரிசி என நம்பமாட்டான். மக்கள் எப்போது அல்லாஹ்வை விட்டுவிட்டு தமக்கு வழிகாட்டியாய் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளை வணங்க தலைப்பட்டதோ அப்போதிருந்தே மதங்களுக்கு மத்தியில் வித்தியாசங்களும், வேறுபாடுகளும் தோன்ற ஆரம்பித்து விட்டன.

"நபியே உமக்கு முன்னர் நாம் பல தூதர்களை அனுப்பியிருக்கிறோம். அவர்களில் சிலர் பற்றி உமக்கு கூறியுள்ளோம். இன்னும் அவர்களில் சிலர் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தத் தூதரும் எந்த ஓர் அத்தாட்சியையும் கொண்டுவர முடியாது. அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் (மறுமை நிகழ்ந்துவிட்டால்) நீதியைக் கொண்டு தீர்ப்பளிக்கப்படும். அங்கே வீணர்கள் நஷ்டமடைவார்கள்".(ஃகாபிர் :78). تقدم

''இத்தூதரும் தமது இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டுள்ளனர். முஃமின்களும் (நம்பிக்கை கொண்டுள்ளனர் (அவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனது வானவர்களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும், நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் அவனது தூதர்களில் எவருக்குமிடையில் வேறு பாடுகாட்டமாட்டோம். நாம் செவியேற்றோம் கட்டுப்பட்டோம்.எங்கள் இரசட்சகனே ! உனது மன்னிப்பைக் கோருகின்றோம் உன்னிடமே மீழுதல் உள்ளது என்று அவர்கள் கூறினார்கள்". (அல் பகரா : 285). تقدم

"அல்லாஹ்வையும் எங்களுக்கு இறக்கப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப், ஆகியவர்களுக்கும் இவரது சந்ததிகளுக்கும், இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும், (மற்றும் ஏனைய) நபிமார்களுக்கும் அவர்களது இரட்சகனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நாம் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் எவருக்கிடையிலும் நாம் வேற்றுமை பாராட்ட மாட்டோம் நாம் அவனுக்கே முற்றிலும் கட்டுப்பட்டவர்கள்' என்று நபியே நீங்களும் கூறுங்கள்".(பகரா : 136). تقدم

PDF