இஸ்லாத்தை உண்மை மார்க்கம் எனக் குறிப்பிடுவது ஏன்?

இஸ்லாத்தின் போதனைகள் யாவும் நெகிழ்வுத்தன்மை வாய்ந்தவையாகவும், அவை வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. அத்துடன் அவைகள் யாவும் அல்லாஹ் மனிதனை எந்த இயல்பூக்கத்துடன் படைத்தானோ அதனுடன் இணைந்து செல்வதாகவும் காணப்படுகிறது. இதனடிப்படையில்; இம்மார்க்கம் மனித உள்ளுணர்வுடன் இணைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. அவை பின்வருமாறு :

கடவுள் ஒருவன் அவன் தனித்தவன் என்றும் அவனே சிருஷ்டி கர்த்தா அவனுக்கு நிகராக எவரும் இல்லையென்றும் அவனுக்கு எந்தச் சந்ததியும் கிடையாது என்றும், அவன் ஒருபோதும் மனிதனின், அல்லது மிருகத்தின் சிலையின் அல்லது கல்லின் தோற்றத்தில்-வடிவில்- அவதரிக்கமாட்டான் என்றும் முக்கடவுள் தத்துவத்தைத் சார்ந்தவனல்ல என்றும் உறுதியாக நம்புதல். எந்த இடைத்தரகருமின்றி இந்தப் படைப்பாளனை நேரடியாக வணங்குதல். அவன் இப்பிரபஞ்சத்தினதும் அதில் உள்ளவற்றினதும் படைப்பாளன், அவனைப்போன்ற எதுவும் இப்பிரபஞ்சத்தில் கிடையாது. தனது குற்றத்திற்கு மன்னிப்புக்கோரும் போதும் அல்லது உதவி கோரும்போதும் அவனை நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் அவனை மாத்திரம் வணங்குவது மனிதனின் மீதுள்ள கடமையாகும். இந்த விவகாரத்தில் ஒரு மதப்போதகரையோ அல்லது ஒரு மகானையோ அல்லது இடைத்தரகர்களையோ நாடிச்செல்வது கூடாது. அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ் ஒரு தாய் தனது பிள்ளைகளுடன் அன்பு பாராட்டுவதை விட தனது படைப்பினங்களுடன் அதிக கருணையுள்ளவனாக உள்ளான். எனவே அவன் தன்னிடம் பாவமீட்சி கோரி வருவோரை மன்னித்து கருணைகாட்டுகிறான். சிருஷ்டிகர்த்தாவை மாத்திரம் வணங்குவது அவனுக்கு வழங்க வேண்டிய உரிமைகளில் ஒன்றாகும. மனிதனைப் பொருத்தவரை தனது இரட்சகனுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது அவனுக்குரிய கடமையாகும்.

இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடானது ஆதரங்களினால் நிரூபிக்கப்பட்ட தெளிவான இலகுவான ஒரு மார்க்கமாகும். அதில் கண் மூடித்தனாமான நம்பிக்கைகள் எதுவும் கிடையாது இஸ்லாம் இதயத்துடனும், உணர்வுடனும் மாத்திரம் உறவாடி அவை இரண்டு மாத்திரம் நம்பிக்கைக்கான அடிப்படையாக இருக்க வேண்டும் எனக் கருதவில்லை. மாறாக, அது தனது கொள்கைகளை முன்வைப்பதில் உறுதியானதும் மறுக்க முடியாதுதமான, மிகத் தெளிவான ஆதரங்களை அடிப்படையாகக் கொண்டும், பகுத்தறிவு புரிந்து ஏற்றுக்கொள்ளத்தக்க சரியான காரணங்களினூடகவும் தனது கோட்பாடுகளை முன்வைப்பதில் பல அடிப்படைகளைப் பின்பற்றுகிறது :

இவ்வுலக இருப்பின் நோக்கம், அதற்கான ஆதாரம் மற்றும் மரணத்திற்குப்பின் அவனின் யோகம் -முடிவு- பற்றிய மனிதர்களின் மனதில் ஊடாடும் இயல்பான கேள்விகளுக்கு பதிலளிக்க இறைத்தூதர்களை அனுப்புதல், உலூஹிய்யா -இறைமைத்துவம்- தொடர்பான பிரச்சினைக்கு பிரபஞ்சம் மற்றும் ஆன்மாவிலிருந்தும் ஆதாரங்களையும், வரலாற்றிலிருந்து இறை இருப்பு மற்றும் ஏகத்துவம், அவனின் பரிபூரண தன்மை போன்றவற்றிற்கான சான்றுகளையும் மிகத் தத்ரூபமாக முன்வைக்கிறது. மரணித்தின் பின் மீளஉயிர்த்தெழுதல் தொடர்பான விவகாரத்தில் மனிதனையும், வானம் மற்றும் பூமியையும் படைத்து, வரண்ட பூமியை உயிர்ப்பிப்பதற்கு இயலுமான ஒருவனால் இதனை செய்வது சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது. அவனின் நீதிக்கும் நேர்மைக்கு சான்றாக நல்லவர்களுக்கு வெகுமதி அளித்து தீயோரை தண்டிப்பதானது அவனின் உயரிய ஞானத்திற்கு எடுத்துக்காட்டு எனக்கூறுகிறது.

இஸ்லாம் என்ற பெயர் அகிலங்களின் இரட்சகனுடனான மனித உறவை பிரதிபலிக்கிறது. ஏனைய மதங்களைப் போன்று ஒரு நபரின் பெயரையோ அல்லது ஒரு இடத்தின் பெயரையோ பிரதிபளிப்பதில்லை. உதாரணத்திற்கு, யூத மதம் அதன் பெயரை யஹுதா இப்னு யஃகூப் அலைஹிஸ்ஸலாம் (அவருக்கு சாந்தி உண்டாவதாக) என்பவரிடமிருந்தும் பெற்றிருக்கிறது. கிறிஸ்துவம் கிறிஸ்துவிடமிருந்து அதன் பெயரை பெற்றுள்ளது, இந்து மதம் அதன் பெயரை அது தோன்றிய பிரதேசத்தை மையமாக கொண்டு பெற்றுள்ளது. இவையாவும் சில எடுத்துக்காட்டுகளே! இது போன்றே அதிகமான மதங்கள் அவற்றை உருவாக்கியோரின் பெயரின் அடிப்படையில் அமைந்திருப்பதை எம்மால் அவதானிக்க முடியும்.

PDF