அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும் மக்களின் வழக்கத்திற்கும் இடையில் காணப்படும் வித்தியாசம் என்ன?

சீரிய இயல்பு –உள்ளுணர்வு அல்லது சீரான பகுத்தறிவு என்ற ஒரு விடயம் உண்டு. சீரிய இயல்புக்கும் தர்க்த்திற்கும் சரியான பகுத்தறிவிற்கும் இணங்கியதாக அமையும் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவையே! சிக்கல் நிறைந்தவை அனைத்தும் மனிதனிடமிருந்து வந்தவை என்பதை புரிய வேண்டும்.

இதனைப் பின்வருமாறு விளக்கலாம் :

ஒரு முஸ்லிம்; அல்லது கிறிஸ்தவ அல்லது இந்து மத அல்லது ஏதாவது மதத்தின் அறிஞர் வந்து இந்தப்பிரபஞ்சத்திற்கு ஏகனான ஒரே படைப்பாளன் உள்ளான் என்றும், அவனுக்கு நிகராகனவர் எவரும் கிடையாது எனவும், அவனுக்கு சந்ததி எவரும் கிடையாது எனவும், அவன் இப்பூமிக்கு மனித வடிவில்; அல்லது மிருக வடிவில் அல்லது கல்லின் வடிவில் அல்லது சிலை வடிவில் வரமாட்டான், ஆதலால் அவனை மாத்திரமே வணங்கி வழிபடுவதுடன்; பேரிடர்களின் போது அவனிடமே புகழிடம் தேட வேண்டும் என்று கூறினால் உண்மையில் அதுவே அல்லாஹ்வின் மார்க்கமாகும். ஆனால் முஸ்லிம்; அல்லது கிறிஸ்தவ அல்லது இந்து மத அறிஞர் ஒருவர் அல்லாஹ் (கடவுள்) மனிதர்களுகளுக்கு தெரிந்த எந்த ஒரு தோற்றத்திலும்-வடிவத்திலும்-தோன்ற முடியும், அவ்வாறான கடவுளை ஏற்று அவனை வணங்குவதும் அவனிடம் ஒரு நபரினூடாகவோ அல்லது தீர்கதரிசியினூடகவோ அல்லது ஒரு மத குருவினூடாகவோ அல்லது புனிதரினூடாகவோ புகழிடம் தேடிச் செல்வதும் அவசியம் என்று ஒரு கருத்தை முன்வைத்தால் இது மனித சிந்தனையிலிருந்து உதித்த ஒரு வகையான புதிராக காணப்படுகிறது.

அல்லாஹ்வின் மார்க்கம் தெளிவானது தர்க்கரீதியானது –அறிவு பூர்வமாணது. அதில் பூசி மெகுழுதல், புதிர்கள் எதுவும் கிடையாது. எந்த ஒரு மத அறிஞராவது ஒரு நபரிடம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் ஒரு கடவுள் என்றும், அவரை வணங்க வேண்டும் என்றும்; யாரையாவது நம்ப வைக்க விரும்பினால், அந்த மதவாதி அவரை நம்ப வைக்க பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டும். அவ்வாறு அவர் மிகப்பெரும் முயற்சி செய்தாலும் ஒருபோதும் அவரை நம்ப முன் வர மாட்டார். காரணம் என்னவெனில் இவ்வாறு கூறும் மத அறிஞரிடம் அவர் 'நபி முகம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நம்மைப் போலவே உண்ணவும் குடிக்கவும் செய்கிறார் அவர் எப்படி கடவுளாக மாறினார்? எனக் கேட்டுவிட்டுவிட்டால் அவருக்கு அதற்கான பதிலை கூறமுடியாமல் போய்விடும்! அவர், தற்காலத்தில் இயேசு மற்று கௌதம புத்தர் மற்றும் ஏனையோரை வணங்குவதற்கு கூறும் -கற்பிதங்களை- நியாயங்களை கூறும் அதிகமான மதவாதிகளை போல் இக்கேள்விக்கு பதிலளிப்பதற்கு முடியாத அந்த மத அறிஞர் இறுதியில் அவரிடம் இது ஒரு புதிரான மற்றும் புதுமையும் புதிரும் நிறைந்த ஒரு கருத்து என்பதனால் நீ ஏற்றுக்கொள்கிறீர் இல்லை. ஆனால் இதன் விளைவை அல்லாஹ்வை-கடவுளை- சந்திக்கும் வேளையில் நீ புரிந்து கொள்வாய் எனக் கூறித் தப்பிவிடுவார். இந்த உதாரணம் அல்லாஹ்வின் (கடவுளின்) உண்மையான மார்க்கம் மர்மங்கள் இல்லாததாக இருக்க வேண்டும் என்பதையும் மர்மங்கள் மனிதர்களிடமிருந்து மட்டுமே வருகின்றன என்பதை நிரூபிக்கிறது.

மேலும் இறை மார்க்கம் அனைவருக்கும் இலவசமானது, அதனால் அனைவரும்; இறையில்லங்களில் தொழுவதற்கும் வணக்கவழிபாடுகளில் ஈடுபடவும் பூரண சுதந்திரம் உண்டு. மாறாக அவ்விறையில்லங்களில் வணங்குவதற்கு உறுப்புருமை பெறுவதற்கான எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு எந்தவொரு வணக்கஸ்தலத்திலும் வணங்குவதற்கு பதிவும் கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என விதிக்கப்பட்டால் அது மனிதனால் உருவாக்கப்பட்ட அசத்திய மதமாகவே இருக்க வேண்டும். ஆனால், ஒரு மத அறிஞர் மக்களிடம் பிற மனிதருக்கு உதவுவதற்கு தர்மம் செய்யுங்கள் என்ற விடயத்தை கூறுவாறானால் அது அல்லாஹ்வின் (இறை) மார்க்கத்தில் உள்ள ஒரு விடயமாகும்.

அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அனைவரும் ஒரே சீப்பின் பற்கள் போல் சமமானவர்கள். ஏனெனில் அவனின் மார்க்கத்தில் அரேபியர் அரேபியர் அல்லாதவர், வெள்ளையர் கறுப்பர் என்ற வேறுபாடுகள் இல்லை. இறையச்சம் மாத்திரமே வேறுபாட்டிற்கான அளவுகோளாக கொள்ளப்படும். சிலர் ஒரு குறிப்பிட்ட பள்ளியை அல்லது தேவாலயத்தை அல்லது வணக்கஸ்தளத்தை வெள்ளையருக்குரியது எனவும், கறுப்பர்கள் வேறு தனியான இடத்தில் வணக்கங்களை செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டால் அது மனித சிந்தனையின் வெளிப்பாடே அல்லாது உண்மை இறைமார்க்கத்திற்குரிய ஒன்றல்ல.

அதே போன்று பெண்களை கண்ணியப்படுத்தி அவர்களின் அந்தஸ்தஸ்தை உயர்த்தியிருப்பது அல்லாஹ்வின் கட்டளையின் அடிப்படையிலமைந்த ஒரு விடயமாகும். ஆனால் பெண்களை அடக்கி அவர்களின் உரிமைகளை பரித்தல் மனித செயற்பாடாகும். உதாரணமாக ஏதாவது ஒரு நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஒடுக்குமுறைக்கு ஆட்படுகின்றார்கள் என்றால் அதே நாட்டில் இந்துப் பெண்கள், பௌத்த பெண்கள் மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் கொடுமைக்கு உள்ளாவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இவ்விவகாரத்தை அந்நாட்டு மக்களின் கலாச்சாரம் அல்லது நடைமுறை எனக் குறிப்பிடுவதைத் தவிர அதற்கும் அல்லாஹ்வின் உண்மை மார்க்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை மனதில் கொள்ளல் அவசியம்.

அல்லாஹ்வின் உண்மை மார்க்கமானது எப்போதும் இயல்பூக்கத்துடன் இயைந்து இணங்கிச் செல்லும் ஒரு மார்க்கமாகும். புகைப்பிடிப்பவர் அல்லது மது அருந்துபவன் எப்போதும் தனது பிள்ளைகளிடம் மது அருந்துவதை விட்டும் புகைப்பிடிப்பதைவிட்டும் விலகி இருக்குமாறு வேண்டிக் கொண்டிருப்பார். காரணம் யாதெனில் அந்த இரண்டு விடயங்களும் ஆரோக்கியம் மற்றும் சமூகத்திற்கும் பேராபத்தானவை என்பதை அவர் நம்பியிருப்பதினாலாகும். உதாரணத்திற்கு மதமானது மதுபானத்தை தடைசெய்தால் உண்மையில் அது அல்லாஹ்வின் -கடவுளின்- கட்டளைகளின் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். ஆனால் பாலை தடைசெய்தால் எங்களின் புரிதலின் அடிப்படையில் இது நியாயமற்ற விடயமாகும். ஏனெனில் பாலானது ஆரோக்கியமானது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். இதனால் தான் மதம் பாலை தடை செய்யவில்லை. அல்லாஹ் எமக்கு ஆரோக்கியமான, நல்லனவற்றை சாப்பிடுவதற்கு அனுமதித்து, ஆரோக்கியமற்ற அருவருப்பானவற்றை சாப்பிடுவதற்கு தடை விதித்தமை படைப்பினங்களுடனான அவனின் கருணை மற்றும் அன்பின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

பெண்கள் தலையை மறைப்பதும், ஆண்களும் பெண்களும் கண்ணியமாகவும் கற்பொழுக்கத்துடன் நடந்து கொள்வதும் கடவுளின் -அல்லாஹ்வின்- கட்டளையாகும். ஆனால் பல்வகையான வர்ணங்களிலும், அலங்காரங்களிலும் தன்னை அலங்கரித்துக்க கொள்வது மனித செயற்பாடுகளாகும். சீனாவில் வாழும் நாஸ்திக கிராமியப் பெண்ணும், சுவிஸ்ர்லாந்தல் வாழும் கிறிஸ்தவ கிராமியப் பெண்ணும் கற்பொழுக்கம், இயற்கை உள்ளுணர்வு சார்ந்த ஒரு விடயம் எனும் அடிப்படையில் தமது தலையை மறைப்பதை கலாச்சரமாக பின்பற்றுகிறார்கள்.

தீவிரவாதத்தை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், இது சர்வதேச அளவில் எல்லா மதப்பிரிவினரிடத்திலும் பரவலாகக் காணக்கூடியதாக உள்ளது. ஆபிரிக்கா மற்றும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் மார்க்கத்தின் பெயரால் அல்லது இறைவனின் பெயரால் கொலை மற்றும் மிகக் கொடூரமான அடக்குமுறையில் ஈடுபடும் கிறிஸ்தவ தீவிரப் போக்குள்ள பல பிரிவினர் உள்ளனர். இவர்கள் உலக கிறிஸ்தவர்களில் நான்கு விகிதத்தினராக உள்ளனர். அதே வேளை இஸ்லாத்தின் பெயரால் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் முஸ்லிம்கள், உலக முஸ்லிம் சனத்தொகையில் ஒரு விகிதத்தினாரகவே உள்ளனர். இவை மாத்திரமின்றி தீவிரவாதமானது இந்து பௌத்த மதங்களிலும் ஏனைய மதங்களிலும் பரவிக் காணப்படுகிறது.

எந்தவொரு மதப்புத்தகத்தையும் படிக்க முன் சத்தியம் மற்றும் அசத்தியத்தை இவ்வாறுதான் வேறுபடுத்திட எம்மால் முடிகிறது.

PDF