உண்மை என்னவென்றால், சன்மார்க்கம் -மதம்- ஒரு கடமையும் பொறுப்பும் ஆகும். அது மனசாட்சியை விழிப்படையச் செய்கிறது, மேலும் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய விஷயத்திலும் தன்னை சுயவிசாரணை செய்து கொள்ளும் படி விசுவாசியை தூண்டுகிறது. விசுவாசி தனக்கும், தன் குடும்பத்துக்கும், தன் அண்டை வீட்டாருக்கும், பாதையில் செல்லும் வழிப்போக்கனுக்கும் கூட பொறுப்பானவனாவான். அவன் தான் விரும்பும் விடயங்களை அடைந்து கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட பின்னர் கடவுளின் மீது அக்காரியங்களை ஒப்படைக்கிறான், இவ்வாறான செயற்பாடு அபினுக்கு அடிமையானோரின் குணாதிசயங்களில் ஒன்று என்று நான் நினைக்கவில்லை. (கலாநிதி அம்ரு ஷரீபின் குராபதுல் இல்ஹாத் -பதிப்பு -2014 (நாஸ்தீக மூடநம்பிக்கை) என்ற நூலிலிருந்து பெறப்பட்டது.). அபின் என்பது ஹெராயின் தயாரிக்கப் பயன்படும் கசகசா செடியிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு போதைப் பொருளாகும்.
மக்களின் உண்மையான அபின் போதை மத நம்பிக்கையல்ல, மாறாக நாத்திகவாதமாகும். நாத்திகம் தன்னைப் பின்பற்றுபவர்களை சடவாதத்திற்கு அழைக்கிறது. மதத்தை நிராகரிப்பதன் மூலமும், பொறுப்புகளையும் கடமைகளையும் கைவிட்டு, அதன் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் வாழும் தருணத்தை அனுபவிக்கும்படி அவர்களைத் தூண்டுவதன் மூலமும் இறைத்தண்டனையைப் பொருட்படுத்தாது படைப்பாளனுடனான அவர்களின் உறவை புறந்தள்ளுகிறது. உலகத் தண்டனையிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும் என்ற நிலை இருக்கையில் தன்னை கண்காணிக்கவும் விசாரிக்கவும் எவரும் கிடையாது, மற்றும் மரணத்தின் பின் உயிர்த்தெழுதல் மறுமை விசாரணை ஆகியன இல்லை என்ற நம்பிக்கையில் அவர்கள் விரும்பியதை செய்வரார்கள். அது உண்மையில் அபினுக்கு அடிமையானோரின் பண்புகளில் உள்ளவையல்லவா?