மதத்தை ஏற்பது பகுத்தறிவு மற்றும் மெய்யியல் ஆகியவற்றை செயலிழக்கச் செய்துவிடுமா?

உண்மையில் பகுத்தறிவின் பங்களிப்பு என்பது நடக்கும் விவகாரகங்களில் தீர்ப்புக்கூறி அதனை உண்மைப் படுத்துவதாகும். உதாரணத்திற்கு பகுத்தறிவு மனித இருப்பின் இலக்கை அடைந்து கொள்ள இயலாமல் இருப்பது அதன் பங்களிப்பை ஒரு பொழுதும் இரத்து செய்துவிடாது. மாறாக தனக்கு புரிந்து கொள்ள இயலாதவற்றை புரிந்து கொள்ள மார்க்கத்திற்கு இதற்கான அவகாசத்தை வழங்குகிறது. மார்க்கமானது படைப்பாளன் பற்றியும் மனிதனின் அடிப்படை குறித்தும் இவ்வுலகின் அவனது இருப்பின் நோக்கம் குறித்தும் கற்றுக் கொடுக்கிறது. இதனை பகுத்தறிவானது புரிந்து தீர்ப்பளித்து அத்தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்கிறது. இதன் மூலம் படைப்பாளனின் இருப்பை ஏற்றுக்கொள்வது ஒருபோதும் பகுத்தறிவைiயும் தர்க்கத்தையும் செயலிழக்கச்செய்து விடாது என்பதே யதார்த்தமாகும்.

PDF